மூன்று Summit Awards விருதுகளை வென்றுள்ள Phoenix நிறுவனம்
அமெரிக்காவின் Summit awards விருது விழாவில் மூன்று பிரிவுகளின் கீழ் மூன்று விருதுகளை Phoenix நிறுவனம் வென்றுள்ளது.. மேற்படி மூன்று விருதுகளை வென்றதன் மூலம் இலங்கையை சேர்ந்த வர்த்தகநாமமான Phoenix சர்வதேச அரங்கில் தனித்துவமான அடையாளத்தை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.
மேற்படி விருது விழாவில் Phoenix நிறுவனம் வென்றுள்ள விருதுகள் பின்வருமாறு, தங்கப் பதக்க விருது – சிறந்த தொலைகாட்சி விளம்பரம் : ஆகச் சிறந்த பயணத்தில் புதிய மைல்கல்லை எட்டும் வகையில் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய உணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒளிக் கதைகளை உருவாக்கியமைக்காக சிறந்த தொலைகாட்சி விளம்பரத்துக்கான தங்கப் பதக்க விருதை Phoenix நிறுவனம் வென்றுள்ளது. வெங்கலப் பதக்க விருது – சிறந்த திறந்த வெளி அரங்கு பிரச்சாரம்: தொடர்பாடல் துறையில் புத்தாக்கங்களை அடையாளங் கண்டு திறந்த வெளி அரங்கு இடங்களில் மேற்கொள்ளப்படும் பிரச்சார நிகழ்ச்சிகள் ஊடாக வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கு Phoenix நிறுவனத்திடமுள்ள ஆற்றலை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. வெங்கலப் பதக்க விருது – சிறந்த கூட்டு நிறுவனம் காணொளி: தமது வர்த்தக வர்த்தகநாமத்தையும் நோக்கையும் மனங் கவர் காணொளி ஒன்றின் மூலம் வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட சமூகத்துக்கு கொண்டு சென்றமைக்காக Phoenix நிறுவனம் இந்த விருதை வென்றுள்ளது. அமெரிக்காவின் Summit Awards விருது விழாவில் மேற்படி விருதுகளை வென்றதன் மூலம் சர்வதேச மட்டத்தில் போட்டிமிக்க வர்த்தகநாமமாக தடம் பதிப்பதற்கு Phoenix நிறுவனத்திடமுள்ள ஆற்றல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந் நிறுவன பணியாட்டொகுதியிடமுள்ள ஆக்கத்திறன் மற்றும் உயர் ஆற்றலுக்கான அர்ப்பணிப்பு பிரதிபலித்துள்ளது. புத்தாக்கம் மற்றும் சர்வதேச அங்கீகாரத்தை நோக்கிய பயணத்திற்கு வலு சேர்க்கும் வகையில் உறுதுணையாக இருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் பல்வேறு பங்குதாரர்களுக்கும் இந்த வெற்றிக்காக நன்றி தெரிவிப்பதாக Phoenix நிறுவனம் தெரிவித்துள்ளது.