வாடிக்கையாளர்களுக்கு புதிய ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் வகையில் Pheonix வெலிசரை காட்சியகம் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது
வாடிக்கையாளர்களுக்கு மகத்தானதும் புதுமையானதுமான ஷாப்பிங் அனுபவத்தை வாரி வழங்கும் வகையில் மறுசீரமைக்கப்பட்ட வெலிசரை, நீர்கொழும்பு வீதி, இல 445 ஆம் இலக்க முகவரியில் அமைந்துள்ள Pheonix நிறுவனத்தின் பிரமாண்டமான காட்சியகம் இம் மாதம் 12 ஆந் திகதி மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இக் காட்சியகத்திற்கு வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு பரந்துபட்ட Pheonix உற்பத்திகளை பார்வையிடுவதோடு சௌகரியமான வாழ்க்கை முறை தொடர்பாக அறிந்துகொள்வதற்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக் காட்சியகத்திற்கு வரும் எந்தவொரு நபருக்கும் Pheonix உற்பத்திகளை தமது வாழ்வியலோடு பொருத்திப்பார்க்க முடியும். மிக சொகுசான வரவேற்பறை தொடக்கம் நன்கு திட்டமிடப்பட்ட களஞ்சிய அறை வரையான வடிவமைப்புகளை பார்வையிட்டு Pheonix உற்பத்திகள் தமது வாழ்விடத்தை புதிய மாற்றத்துக்குள்ளாக்குவதை புரிந்து கொள்வதற்கு வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பேற்படுத்திக் கொடுக்கும் வகையில் இக் காட்சியகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Pheonix நிறுவனம் தமது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் மனம் போல் அங்குள்ள உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கு வாய்ப்பேற்படுத்தி கொடுக்கும் வகையில் சுயமாக கொள்வனவு செய்யும் வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. நவீன உலக மற்றும் சர்வதேச ஷாப்பிங் அனுபவங்களோடு பொருந்திப் போகும் வகையில் கொள்வனவு தொடர்பான நிர்வாகத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு இப் புரட்சிகர அறிமுகம் பேருதவியாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இப் புதிய அனுபவத்தை மேலும் மெருகேற்றும் வகையில் Pheonix மற்றும் Giga Foods கூட்டிணைந்துள்ளது. மேற்படி உணவகத்தில் indian Affair, Full’r Burgers மற்றும் Solo Bowl மாதிரியான பல்வேறு வர்த்தகநாமங்களுக்குரிய உணவு மற்றும் பான வகைகளை கொள்வனவு செய்ய முடியும். புதிய காட்சியகத்திற்கு வருகைத் தந்து தமது உற்பத்திகளை பார்வையிடுமாறு வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள Pheonix நிறுவனம் எதிர்காலத்தில் ஏராளமான விலைக் கழிவுகளை வழங்கவுள்ளது. தமது வாழ்க்கையை மேலும் சொகுசுமிக்கதும், அழகானதும் ஒழுங்கமைக்கப்பட்டதுமான ஒன்றாக மாற்றுவதற்கு வெலிசரைவில் அமைந்துள்ள Pheonix காட்சியகத்திற்கு வருகைத் தந்து மாற்றத்தை உணர்ந்துகொள்ளுமாறு Pheonix நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. 0773124745 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்வதன் மூலமாகவோ www.phoenix.lk எனும் இணையதளத்தின் ஊடாகவோ மேலதிக விபரங்களை பெற முடியும்.