அலியான்ஸ் வாடிக்கையாளர்களின் விபத்து திருத்தவேலை சேவைகளை நெறிப்படுத்துவதற்கு அலியான்ஸ் மற்றும் ஓட்டோ மிராஜ் ஆகியன கைகோர்த்துள்ளன
வாடிக்கையாளர்களுக்கு நிகரற்ற அனுபவத்தை வழங்கும் முகமாக, மோட்டார் வாகன திருத்தவேலைகள் தொழில்துறையில் ஒரு முன்னணி நாமமான ஓட்டோ மிராஜ் (Auto Miraj) உடன் புதியதொரு பங்குடமையை அலியான்ஸ் லங்கா ஏற்படுத்தியுள்ளது. 2023 ஜுலையில் ஏற்படுத்தப்பட்ட இந்த ஒத்துழைப்பு, அலியான்ஸ் லங்கா காப்புறுதியைக் கொண்டுள்ளவர்களுக்கு விபத்து திருத்தவேலை அனுபவத்தில் புரட்சியை ஏற்படுத்தவுள்ளது.
இதன் பிரகாரம், இந்தக் கூட்டாண்மையின் மூலமாக, இரு ஸ்தாபனங்களும் விபத்து திருத்தவேலைகள் தொடர்பான அனைத்து ஆவணங்கள் மற்றும் காப்புறுதி தொடர்பான தேவைப்பாடுகளை தங்குதடையின்றி முன்னெடுக்க முடிகின்றமையால், அலியான்ஸ் லங்கா வாடிக்கையாளர்கள் சிரமங்களற்ற நடைமுறையை தற்போது எதிர்பார்க்க முடியும். விபத்து நேருகின்ற தருணத்தில், பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் நலன் ஆகிய முக்கியமானவற்றில் அலியான்ஸ் காப்புறுதிதாரர்கள் கவனம் செலுத்த முடியும் அதேசமயம், திருத்தவேலைகள் தொடர்பான நுணுக்கமான நடைமுறைகளை அவர்கள் சார்பிலே எவ்வித சிரமங்களுமின்றி திறன்மிக்க வழியில் நிர்வகிக்கப்படும். விபத்து திருத்த வேலைகளின் பின்னர் அவற்றுக்கு 6 மாத கால உத்தரவாதம் அடங்கலாக, அலியான்ஸ் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையிலான திருத்த வேலை சேவையின் அறிமுகம் இந்த கூட்டாண்மையின் மூலமாகக் கிடைக்கின்ற முக்கிய வரப்பிரசாதங்களில் ஒன்றாகும். ஆகவே, அலியான்ஸ் காப்புறுதிதாரர்கள் ஓட்டோ மிராஜில் நேர்த்தியான கவனிப்பைப் பெற்று, வாகனங்களின் திருத்தவேலைகள் இழுபறிப்படாமல், துரிதமாக மேற்கொள்ளப்பட்டு தமது வாகனங்களை மீளப் பெற்றுக்கொள்ள முடியும்.
அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் நிறுவனத்தின் பிரதம விநியோக அதிகாரியான ரங்க டயஸ் அவர்கள் இக்கூட்டாண்மை தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “வாடிக்கையாளர்களுக்கு நாம் வழங்கும் பெறுமதி அடிப்படையிலான முன்மொழிவுகளை மேம்படுத்துவதில் நாம் காண்பிக்கின்ற ஓயாத அர்ப்பணிப்பை அலியான்ஸ் லங்கா மற்றும் ஓட்டோ மிராஜ் இடையேயான இக்கூட்டாண்மை பிரதிபலிக்கின்றது. மோட்டார் வாகன திருத்தவேலைகளுக்கு பெயர்பெற்ற ஒரு நாமத்துடன் கூட்டாண்மையை ஏற்படுத்துவதன் மூலமாக, விபத்து திருத்தவேலை நடைமுறையை எளிமைப்படுத்தும் அதேசமயம், ஓட்டோ மிராஜில் எமது வாடிக்கையாளர்களுக்கு மாத்திரமே வழங்கப்படுகின்ற பிரத்தியேக சலுகைகளை அவர்களுக்கு வழங்கி, நிகரற்ற வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதே எமது நோக்கமாகும். இக்கூட்டாண்மையானது எமது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான மோட்டார் வாகனப் பாவனை அனுபவத்தை நோக்கிய மற்றுமொரு சிறந்த படியாக அமைந்துள்ளதென நாம் நம்புகின்றோம்,” என்று குறிப்பிட்டார்.
விபத்து திருத்தவேலை மேற்கொள்ளப்பட்ட பின்னர் வாகனத்தின் வழக்கமான முழுமையான பேணற்சேவையின் போது 100% இலவச கூலி அடங்கலாக, பல்வேறுபட்ட வரப்பிரசாதங்களை அலியான்ஸ் வாடிக்கையாளர்கள் இக்கூட்டாண்மையின் மூலமாக அனுபவிப்பார்கள். அலியான்ஸ் லங்கா காப்புறுதிதாரர்கள் இதன் மூலமாக கணிசமான சேமிப்பை அனுபவிக்கும் அதேவேளையில், விபத்து ஏற்பட்ட வாகனத்தின் திருத்த வேலைகளை உடனடியாக மேற்கொண்டு, கிட்டத்தட்ட புது வாகனத்தைப் போன்ற தோற்றத்துடன் அவற்றை மீண்டும் உபயோகிப்பதற்கான உத்தரவாதம் உள்ளது. எந்திரவியல் திருத்தவேலைகளின் போது கூலிக்கு 20% தள்ளுபடியை அலியான்ஸ் காப்புறுதிதாரர்கள் பெற்றுக்கொள்வதால், வாகனத்திற்காக பேணற்செலவை சிக்கனமாகப் பெற்றுக்கொள்ள முடிகின்றது. பேணற்சேவைத் திட்டத்தின் ஒரு அங்கமாக, ஒவ்வொரு தடவை விபத்து திருத்தவேலையின் போதும், இலவச வாகன மேற்பாக சுத்தப்படுத்தல் (பொடி வோஷ்) சலுகைக்கும் உரித்துடையவர்கள் என்பதுடன், ஒட்டுமொத்த அனுபவத்தில் இது ஆடம்பரத் தோற்றத்திற்கு வழிகோலுகின்றது.
நாடெங்கிலும் சௌகரியமான இடங்களில் அமைந்துள்ள 20 சேவை மையங்களைக் கொண்ட வலையமைப்புடன், அலியான்ஸ் லங்கா காப்புறுதிதாரர்களுக்கு இலகுவாக மற்றும் அணுகல்தன்மையுடன் அதனைப் பெறுவதற்கு இக்கூட்டாண்மை உத்தரவாதமளிக்கின்றது. இலங்கையில் நீங்கள் கொழும்பிலோ அல்லது வேறு எங்கிருந்தாலும் உங்களுக்கு கிட்டிய தூரத்தில் ஓட்டோ மிராஜ் சேவை மையங்கள் அமைந்துள்ளதுடன், தங்குதடையற்ற விபத்து திருத்தவேலை சேவைகளுக்கு உத்தரவாதமளிக்கின்றது.
அலியான்ஸ் லங்கா என்ற நாமத்துடன் பொதுவாக அறியப்படுகின்ற அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் மற்றும் அலியான்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் ஆகியன, ஜேர்மனியின் மூனிச் மாநகரில் தலைமையகத்தைக் கொண்ட காப்புறுதி மற்றும் சொத்து முகாமைத்துவ வணிகங்களில் முதன்மையான சேவைகளைக் கொண்ட உலகளாவிய நிதிச் சேவை வழங்குநரான Allianz SE இன் முழுமையான உரிமையாண்மையைக் கொண்ட துணை நிறுவனங்களாகும். அலியான்ஸ் குழுமத்தின் உலகளாவிய பலம் மற்றும் உறுதியான மூலதனமாக்கல், உள்ளூர் நிபுணத்துவம் மற்றும் வணிக அறிவு ஆகியவற்றுடன் இணைந்து, அலியான்ஸ் லங்காவின் வெற்றிக்கான சக்திவாய்ந்த சூத்திரமாக உள்ளன. மேன்மையின் பாரம்பரியம் மற்றும் புத்தாக்கத்திற்கான அர்ப்பணிப்புடன், அலியான்ஸ் லங்கா தனது வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளை நிறைவேற்றி, பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்தை வளர்த்து வருகிறது.