September 13, 2024
Earthfoam நிறுவனத்திற்கு சிறந்த ஏற்றுமதியாளருக்கான ஜனாதிபதி விருது
செய்தி

Earthfoam நிறுவனத்திற்கு சிறந்த ஏற்றுமதியாளருக்கான ஜனாதிபதி விருது

Dec 25, 2023

இயற்கை இறப்பரில் மெத்தை, டொப்பர்ஸ் மற்றும் தலையணைகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வரும் Earthfoam தனியார் நிறுவனம் ஜனாதிபதி ஏற்றுமதி விருது விழாவில் Life Style பிரிவில் சிறந்த ஏற்றுமதியாளருக்கான விருதை வென்றுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி விருது விழாவில் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு ஜானுக்க கருணாசேன தமக்கான விருதை பெற்றுக் கொண்டார்.

2022 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட Earthfoam நிறுவனம் தற்பொழுது தமது உற்பத்திகளை அமெரிக்கா, கனடா உள்ளிட்ட ஏராளமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யுமளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. உறுதியான, சொகுசு மிக்க, பாதுகாப்பான மற்றும் நீண்ட காலம் பாவிக்கக்கூடிய இறப்பர் மெத்தைகளை தமக்கே உரித்தான தனித்துவமான செயன்முறையில் Earthfoam நிறுவனம் உற்பத்தி செய்கின்றது.

இயற்கை இறப்பரை பிரதான மூலப்பொருளாக கொண்டு உற்பத்தி செய்வதே Earthfoam உற்பத்திகளின் உயர் தரத்துக்கு முக்கிய காரணமாகும். நிறுவனம் சுமார் 1200 இற்கும் மேற்பட்ட உள்நாட்டு விவசாயிகளுக்கு சொந்தமான இயற்கை இறப்பர் செய்கைகளிலிருந்து பெறப்படும் இறப்பரை தமது உற்பத்திகளுக்கு பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது. அது உலகின் மிகப் பெரிய இயற்கை இறப்பர் உற்பத்தி வலையமைப்புமாகும். மேற்படி சகல இறப்பர் செய்கைகளும் Global Organic Latex Standard  தரச் சான்றிதழை வென்றுள்ளதோடு அவை இரசாயன பொருள் பாவனையை தவிர்த்து அப் பிரதேசங்களின் பல்வகை வேற்றுமையை மேம்படுத்துவதற்கு உதவுகின்றன. Earthfoam நிறுவனம் தற்பொழுது நாடெங்கிலும் சுமார் 10,000 ஏக்கர்களுக்கு மேற்பட்ட காணிகளிலிருந்து தமது உற்பத்திகளுக்கு தேவையான இயற்கை இறப்பர் உற்பத்திகளை பெறுகின்றது.

இறப்பர் கைத்தொழிலுக்கு Fair for Life சான்றிதழை பெற்ற முதலாவது நிறுவனமுமான Earthfoam நிறுவனம் இறப்பர் பால் பணியாளர்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்கு பல்வேறு வேலைத்திட்டங்களை செயற்படுத்தப்படுகின்றது. வருடாந்தம் சுமார் 50 மில்லியன்களுக்கு மேற்பட்ட பெறுமதியிலான ஆயுள் காப்புறுதி திட்டங்களை வழங்குதல், அவர்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவியளித்தல் மற்றும் மேலும் பல சமூக அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டல் திட்டங்களை முன்னெடுத்தல் ஆகியவை ஆகியவற்றில் அடங்கும்.

 Earthfoam நிறுவனத்தின் நவீன கைத்தொழிற்சாலை ஹொரணையில் அமைந்துள்ளதோடு உற்பத்திகளுக்கு தேவையான இறப்பர் மூலப்பொருட்களை உற்பத்தி செய்யும் Hexagon Asia தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கைத்தொழிற்சாலை எஹேலியகொடவில் அமைந்துள்ளது. தமது உற்பத்திகளில் எந்தவொரு கலப்பு இறப்பரும் உள்ளடக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கு Earthfoam நிறுவனம் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருகின்றது. Earthfoam நிறுவனம் உற்பத்தி செய்யும் மெத்தைகள் அமெரிக்காவின் சிக்காகோ நகரில் அமைந்துள்ள இந் நிறுவனத்துக்கே சொந்தமான கைத்தொழிற்சாலையொன்றின் ஊடாக அமெரிக்க சந்தைக்கு விநியோகிக்கப்படுகின்றது. கடந்த காலங்களில் நிறுவனம் பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு விருதுகளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. Global Organic Textile Standard. Ocko – Tex Standard 100, GOLS மற்றும் Fair for Life மேற்படி விருதுகளில் சிலவாகும்.

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *