December 12, 2024
கடவத்தை Phoenix ஹோமியோபதி சுதேச மருத்துவமளை அமைச்சர் சிசிர ஜயகொடியின் தலைமையில் திறந்து வைப்பு
செய்தி

கடவத்தை Phoenix ஹோமியோபதி சுதேச மருத்துவமளை அமைச்சர் சிசிர ஜயகொடியின் தலைமையில் திறந்து வைப்பு

Jan 11, 2024

Phoenix ஹோமியோபதி தனியார் மருத்துவமனை சுதேச மருத்துவத்துறை இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடியின் தலைமையில் அண்மையில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. உலக அங்கீகாரம் பெற்ற ஹோமியோபதி மருத்துவ முறையின் கீழ் சிகிச்சை அளிக்கின்ற மேற்படி Phoenix தனியார் மருத்துவமனையை ஆரம்பிப்பதற்கு ஹோமியோபதி மருத்துவர் பீ.எச் சத்துர ஹதரசிங்க முன்னின்று உழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சுதேச மருத்துவத்துறை அமைச்சின் புலமைப்பரிசில் மூலம் இந்தியாவின் கல்கத்தா நகரில் அமைந்துள்ள National Institute of Homeopathy நிறுவனத்தில் ஹோமியோபதி மருத்துவ பட்டப்படிப்பை கற்று 04 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் பதிவு செய்யப்பட்ட ஹோமியோபதி மருத்துவராக டாக்டர் சத்துர ஹதரசிங்க கடமையாற்றி வருகிறார்.

நவீன வசதிகளுடன் கூடிய முழுமையாக இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முதலாவது தனியார் ஹோமியோபதி மருத்துவமனையாக Phoenix மருத்துவமனையை குறிப்பிட முடியும். கடவத்தை எல்தெனிய தேவாலயத்துக்கு அருகில் அமைந்துள்ள Phoenix மருத்துவமனை வருகின்ற நோயாளர்களுக்கு ஹோமியோபதி மருத்துவ முறையுடன் தொடர்புடைய உள வள சிகிச்சைகளோடு உளவியல் மருத்துவ ஆலோசனைகளையும் பெற்று கொள்ள முடியும். எந்தவொரு நோயாக இருந்தாலும் ஹோமியோபதி மருத்துவ முறையில் சிகிச்சை அளிப்பதற்கு தகுதி வாய்ந்த திறமையான மருத்துவ குழுவையும் தாதியர் குழுவையும் Phoenix மருத்துவமனை கொண்டுள்ளது. ஹோமியோபதி மருத்துவர் திருமதி நயனக்கா டீ அல்விஸ் அவர்களும் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு Phoenix மருத்துவமனையோடு இணைந்துள்ளார். உள்நாட்டு, வெளிநாட்டு நோயாளர்களுக்கு பலருக்கு ஹோமியோபதி மருத்துவ முறையின் பிரகாரம் சிகிச்சை அளித்து புகழ் பெற்று விளங்கும் டாக்டர் பீ.எம். சத்துர ஹதரசிங்க Phoenix மருத்துவனை திறப்பு விழாவில் கருத்து தெரிவிக்கையில் “இன்றைய உலகில் ஏராளமான நோயாளர்கள் ஹோமியோபதி மருத்துவ முறையின் கீழ் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். குறிப்பாக இலங்கையிலும் ஹோமியோபதி மருத்துவ முறை மீது பெரும் நம்பிக்கை காணப்படுகின்றது. இலங்கையில் ஹோமியோபதி மருத்துவ முறையை ஊக்குவிக்கவும் நோயாளர்களை குணமடையச் செய்யவும் Phoenix மருத்துவமனையினால் முடியுமென்பதை நாம் திடமாக நம்புகின்றோம். இப் பணியை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு ஒத்துழைத்த சுதேச மருத்துவத்துறை இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடிய அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.” என குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *