July 27, 2024
கடற்கரை மீதான நேசம்: அலியான்ஸ் லங்கா மற்றும் Pearl Protectors கூட்டு முயற்சியில் கடற்கரை சிரமதான நிகழ்வு
செய்தி

கடற்கரை மீதான நேசம்: அலியான்ஸ் லங்கா மற்றும் Pearl Protectors கூட்டு முயற்சியில் கடற்கரை சிரமதான நிகழ்வு

Oct 5, 2023

வர்த்தக பொறுப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் மிகவும் முன்னுதாரணமான ஒரு முயற்சியாக, இலங்கையில் அனைவராலும் நேசிக்கப்படுகின்ற கடற்கரை பிரதேசங்களின் ரம்மியமான அழகினை மீட்டெடுக்கும் ஒரு சிறந்த நோக்குடன், அலியான்ஸ் லங்கா நிறுவனம் மற்றும் Pearl Protectors ஆகியன கூட்டிணைந்துள்ளன. ஆண்டுதோறும் செப்டெம்பர் மாதத்தில் மூன்றாவது சனிக்கிழமையன்று அனுட்டிக்கப்பட்டு வருகின்ற சர்வதேச சுத்தப்படுத்தல் தினத்தில், தெகிவளை கடற்கரைப் பிரதேசத்தில், அர்ப்பணிப்புமிக்க சுமார் 100 தொண்டர்களின் துணையுடன் சுத்தப்படுத்தும் பணிகளை அலியான்ஸ் லங்கா முன்னெடுத்துள்ளது.      

எமது சுற்றுச்சூழலை சிறந்ததாக மாற்றுவதில் அலியான்ஸ் லங்கா கொண்டுள்ள ஓயாத அர்ப்பணிப்பை இந்த உன்னதமான முயற்சி பிரதிபலிக்கின்றது. அலியான்ஸ் லங்கா அணியானது Pearl Protectors இன் பேரார்வத்தின் துணையுடன், தெகிவளை கடற்கரைப் பிரதேசத்தில் காணப்பட்ட மீள்சுழற்சி செய்யப்படமுடியாத குப்பைகூளங்களை அப்புறப்படுத்தி, அப்பிரதேசத்தை சுத்தமானதாக, பாதுகாப்பானதாக மற்றும் அனைவரையும் கவரக்கூடிய இடமாக மாற்றியமைத்தது.        

அலியான்ஸ் லங்கா நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் துறை தலைமை அதிகாரி கசுன் யட்டவர அவர்கள் இந்த முயற்சியின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டி, கருத்து வெளியிடுகையில், “வாழ்வில் பொக்கிஷமான விடயங்களைப் பாதுகாக்கும் போது, எமது சூழலையும், பூமியையும் நாம் மறந்து விடலாகாது. இத்தகைய முயற்சிகள் வெறுமனே ஒரேயொரு தடவையுடன் முடிந்து போகும் முயற்சியாக அல்லாமல், எமது கடற்கரைப் பிரதேசங்களுக்கு செல்கின்ற ஒவ்வொரு நபரும் இதனை ஒரு தொடர் முயற்சியாகக் கையிலெடுத்து, எமது கடற்கரைப் பிரதேசங்களை சுத்தமாக பேண வேண்டும். உலகினை சிறந்த இடமாக மாற்ற வேண்டியது ஒரு சமூகக் கடமை என்பதுடன், அத்தகையதொரு நல்முயற்சிக்கு பெரும் எண்ணிக்கையில் ஒன்றுதிரண்டு, Pearl Protectors உடன் இணைந்து அலியான்ஸ் லங்கா அணி மேற்கொண்ட முயற்சியைக் காணும் போது மிகுந்த உற்சாகமாளிக்கின்றது,” என்று குறிப்பிட்டார்.    

சுற்றுச்சூழல் மீதான அக்கறை ஒரு மையப்புள்ளியாக மாறியுள்ள ஒரு யுகத்தில், அலியான்ஸ் லங்காவின் கடற்கரை சிரமதானப் பணியானது நிலைபேற்றியல் மற்றும் சமூக ஈடுபாட்டில் நிறுவனம் காண்பிக்கும் அர்ப்பணிப்புக்கு சான்றுபகருகின்றது. இந்த முயற்சியானது கடற்கரையைச் சுத்தப்படும் பணிக்கும் அப்பால், சூழல் மீது பகிரப்பட்ட பொறுப்புணர்வை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அலியான்ஸ் லங்காவின் தலைமையில், Pearl Protectors இன் துணையுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த கடற்கரை சுத்தப்படுத்தும் பணி எமது இயற்கை மரபினைப் பேணிப் பாதுகாப்பதில் வணிக நிறுவனங்கள் எவ்வாறு காத்திரமான பங்களிப்பு வழங்க முடியும் என்பதை மிகவும் ஆணித்தரமாக வெளிப்படுத்துகின்றது. கூட்டு முயற்சிகளின் பலனை இது நமக்கு நினைவுபடுத்துவதுடன், ஒன்றாக இணைந்து செயற்படுவதன் மூலமாக, எதிர்கால தலைமுறைகளுக்கு சுத்தமான  மற்றும்  பிரசாசமான உலகினை உருவாக்க நம்மால் முடியும்.

அலியான்ஸ் லங்கா என்ற நாமத்துடன் பொதுவாக அறியப்படுகின்ற அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் மற்றும் அலியான்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் ஆகியன,  ஜேர்மனியின் மூனிச் மாநகரில் தலைமையகத்தைக் கொண்ட காப்புறுதி மற்றும் சொத்து முகாமைத்துவ வணிகங்களில் முதன்மையான சேவைகளைக் கொண்ட உலகளாவிய நிதிச் சேவை வழங்குநரான Allianz SE இன் முழுமையான உரிமையாண்மையைக் கொண்ட துணை நிறுவனங்களாகும். அலியான்ஸ் குழுமத்தின் உலகளாவிய பலம் மற்றும் உறுதியான மூலதனமாக்கல், உள்ளூர் நிபுணத்துவம் மற்றும் வணிக அறிவு ஆகியவற்றுடன் இணைந்து, அலியான்ஸ் லங்காவின் வெற்றிக்கான சக்திவாய்ந்த சூத்திரமாக உள்ளன. மேன்மையின் பாரம்பரியம் மற்றும் புத்தாக்கத்திற்கான அர்ப்பணிப்புடன், அலியான்ஸ் லங்கா தனது வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளை நிறைவேற்றி, பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்தை வளர்த்து வருகிறது.

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *