November 26, 2026
செனாரோ மோட்டார் நிறுவனம் இலங்கையின் மிகப் பெரிய மோட்டார் சைக்கிள் காட்சியறையை கம்பஹாவில் திறந்துள்ளது
செய்தி

செனாரோ மோட்டார் நிறுவனம் இலங்கையின் மிகப் பெரிய மோட்டார் சைக்கிள் காட்சியறையை கம்பஹாவில் திறந்துள்ளது

Nov 26, 2026

இலங்கையின் மோட்டார் சைக்கிள் துறையின் முன்னணி உள்நாட்டு நிறுவனமான செனாரோ மோட்டார் நிறுவனம், தனது புதிய ‘செனாரோ சிக்னேச்சர்’ காட்சியறையை 2026 நவம்பர் 12 ஆந் திகதியன்று கம்பஹா, மிரிஸ்வத்த பகுதியில் கோலாகலமாகத் திறந்துள்ளது. இலங்கையின் மிகப்பெரிய மோட்டார் சைக்கிள் காட்சியறையான இதனைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கம்பஹா நகரபிதா எரிக் லக்ஷ்மன் எதிரிவிக்ரம, மூத்த கிரிக்கெட் வீரர்களான சனத் ஜயசூரிய மற்றும் உபுல் தரங்க உள்ளிட்ட முக்கிய அதிதிகளும் துறைசார் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். மோட்டார் சைக்கிள் துறையில் 23 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ள செனாரோ மோட்டார் நிறுவனம், 100% இலங்கை உரிமையின் கீழ் இயங்கும் ஒரு உள்நாட்டு வர்த்தக நிறுவனமாகும். நாட்டின் மோட்டார் சைக்கிள் உற்பத்தித் துறையைப் பலப்படுத்துவதும், உள்நாட்டுத் கைத்தொழில் அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்வதும் இந்நிறுவனத்தின் பிரதான நோக்கங்களாகும். செனாரோ மோட்டார் சைக்கிள்களில் 35% உள்நாட்டுப் பெறுமதி சேர்க்கை மேற்கொள்ளப்படுவதுடன், இதன் மூலம் உள்நாட்டு உற்பத்திச் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்கும், புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், தேசியப் பொருளாதாரத்திற்குப் பங்களிப்புச் செய்வதற்கும் நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு பிரதிபலிக்கின்றது.

கம்பஹா, மிரிஸ்வத்த பகுதியில் நிறுவப்பட்டுள்ள புதிய செனாரோ சிக்னேச்சர் காட்சியறை, நவீன வசதிகளுடன் வாடிக்கையாளர்களுக்கு மேலான சேவை அனுபவத்தை வழங்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் பல்வேறு மோட்டார் சைக்கிள் மாதிரிகளையும் அது தொடர்பான சேவைகளையும் வாடிக்கையாளர்கள் மிக இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. புதிய காட்சியறை திறப்பு விழாவை முன்னிட்டு விசேட ஆரம்ப நிகழ்வொன்று இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து அழைக்கப்பட்ட அதிதிகளுக்காக விசேட சிநேகபூர்வ ஒன்றுகூடலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் யக்கல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஸ்வர்ணகுமார ஜயரத்ன மற்றும் கம்பஹா பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஜகத்பிரிய உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்தப் புதிய காட்சியறை திறப்பு விழாவானது செனாரோ மோட்டார் நிறுவனத்தின் வர்த்தக விரிவாக்கத்தில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கின்றது. தனது செயற்பாடுகளை மேலும் விரிவுபடுத்தி, வாடிக்கையாளர்களின் தேவைகளுக்குப் பொருத்தமான மோட்டார் சைக்கிள்களையும் சேவைகளையும் மிக வினைத்திறனாக வழங்குவதற்கு நிறுவனம் தொடர்ந்தும் முதலீடு செய்து வருகின்றது. முழுமையாக இலங்கை உரிமையைக் கொண்ட வர்த்தக நிறுவனமாக செனாரோ நிறுவனம், உள்நாட்டுப் பெறுமதி சேர்க்கையை அதிகரிப்பதற்கும், நாட்டின் மோட்டார் சைக்கிள் கைத்தொழிலின் நீண்டகால அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்வதற்கும் முன்னுரிமை அளிக்கின்றது. இறக்குமதி செய்யப்படும் முடிவுப் பொருட்கள் மீதான தங்கியிருத்தலைக் குறைத்து, உள்நாட்டுத் கைத்தொழில்களைப் பலப்படுத்துவதற்கு நிறுவனம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்தில் இந்த அணுகுமுறை விசேட முக்கியத்துவம் பெறுகின்றது. கம்பஹாவில் புதிய செனாரோ சிக்னேச்சர் காட்சியறை திறக்கப்பட்டதன் மூலம், புத்தாக்கம், வாடிக்கையாளர் சேவைச் சிறப்பு மற்றும் உள்நாட்டுத் கைத்தொழில் அபிவிருத்தி ஆகியவற்றுக்காக செனாரோ மோட்டார் நிறுவனம் கொண்டுள்ள நீண்டகால அர்ப்பணிப்பு மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close