சைனீஸ் டிராகன் கஃபேயின் 15 ஆவது உணவகம் கண்டியில் திறப்பு
இலங்கையின் சீன உணவுக் கலாச்சாரத்தில் எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வென்ற முன்னணி உணவக வலையமைப்பான சைனீஸ் டிராகன் கஃபே (Chinese Dragon Café), கண்டி நகரில் தனது புதிய உணவகத்தைத் திறந்துள்ளது. தனது வர்த்தக விரிவாக்கத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைப் பதிவு செய்வதாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது. இது இலங்கையில் அந்நிறுவனத்திற்குச் சொந்தமான 14-வது உணவகமாகவும், சர்வதேச அளவில் அதன் 15-வது உணவகமாகவும் அமைந்துள்ளது. கண்டி, பியஷோ பூங்கா, இலக்கம் 454 என்ற முகவரியில் அமைந்துள்ள இந்தப் புதிய உணவகம், பேராதனை வீதியிலிருந்து பியஷோ பூங்கா நோக்கிச் செல்லும் வழியில் சுமார் 230 மீட்டர் தொலைவில் லைட்ஹவுஸ் தேவாலயத்திற்கு அருகில் அமைந்துள்ளது. வரலாற்று மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடனும், சுற்றுலா மற்றும் வர்த்தக முக்கியத்துவத்துடனும் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ள கண்டி நகரம், தனது உணவக வலையமைப்பை விரிவுபடுத்துவதற்காக சைனீஸ் டிராகன் கஃபே தெரிவு செய்துள்ள மற்றுமொரு முக்கிய நகரமாகும். இந்தப் புதிய உணவகத்தின் மூலம் கண்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்களுக்கும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கும் சைனீஸ் டிராகன் கஃபேயின் தனித்துவமான உணவுகளைச் சுவைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
சைனீஸ் டிராகன் கஃபேயின் வரலாறு 1942-ஆம் ஆண்டு வரை நீள்கிறது. சீனத் தம்பதியினரால் பம்பலப்பிட்டியில் ஒரு சிறிய உணவகமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த வர்த்தகம், 84 வருடப் பயணத்தில் பல தலைமுறை வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வென்று இன்று நாட்டின் முன்னணி உணவக வலையமைப்பாக மாறியுள்ளது. பம்பலபிடிய, கல்கிசை, நுகேகொடை, இராஜகிரிய, பெலவத்தை, வத்தளை, கந்தானை, கடுவெல, யாழ்ப்பாணம், காலி, கொத்தட்டுவை, ஓரியன் சிட்டி மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளுக்குத் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ள இந்நிறுவனம், 2021-ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் தனது முதலாவது வெளிநாட்டு உணவகத்தைத் திறந்து சர்வதேச சந்தையில் கால்பதித்தது. பல வருடங்களாக சைனீஸ் டிராகன் கஃபே வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமடைந்திருப்பதற்கு அதன் தனித்துவமான சீன உணவுச் சுவை, உயர்ந்த உணவுத் தரம் மற்றும் பல்வேறு வகையான உணவுப் பட்டியல்களே காரணமாகும். குறிப்பாக, ஹொட் பட்டர் கட்டில்ஃபிஷ் (Hot Butter Cuttlefish) மற்றும் வாழை இலையில் பரிமாறப்படும் சீஃபுட் ஃப்ரைட் ரைஸ் (Seafood Fried Rice) ஆகியவை அதன் மிகவும் பிரபலமான உணவுகளில் முதலிடம் வகிக்கின்றன. இவற்றுடன் பல்வேறு வகையான ரைஸ் வகைகள், நூடுல்ஸ் உள்ளிட்ட பல்பேறு சீன உணவுகளை இங்கு சுவைத்து மகிழலாம். கண்டியில் அமைந்துள்ள புதிய உணவகம், வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நவீன வசதிகள் பலவற்றுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. விசாலமான, சௌகரியமான இருக்கை வசதிகளுக்கு மேலதிகமாக, பிரத்தியேக உணவு அறைகள் (Private Dining Rooms) மற்றும் சுற்றியுள்ள அழகிய காட்சிகளைப் பார்வையிடக்கூடிய விசேட கண்ணாடி மறைப்புடன் கூடிய இருக்கைப் பகுதி (Glasshouse Seating Area) என்பன இங்கு அமைக்கப்பட்டுள்ளன. குடும்பக் கொண்டாட்டங்கள், விசேட நிகழ்வுகள், நிறுவனக் கூட்டங்கள் மற்றும் தனிப்பட்ட சந்திப்புகளுக்கு இந்த வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். அத்துடன், இலவச உணவு விநியோகச் சேவை, உள்ளக மற்றும் வெளியக நிகழ்வுகளுக்கான உணவு வழங்கல் (Catering), நிறுவனங்களுக்கான உணவுத் தீர்வுகள் மற்றும் இணையவழி (Online) உணவு ஆர்டர் செய்யும் வசதிகளையும் சைனீஸ் டிராகன் கஃபே வழங்குகிறது.
புதிய உணவகத் திறப்பு குறித்து சைனீஸ் டிராகன் கஃபேயின் பிரதம செயற்பாட்டு அதிகாரி திரு லஹிருவன் லக்மால் கருத்து தெரிவிக்கையில், “கண்டி என்பது தனித்துவமான கலாச்சார மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்துடன், வளர்ச்சியடைந்த சுற்றுலாத் துறையையும் சுறுசுறுப்பான வர்த்தகச் சூழலையும் கொண்ட நகரமாகும். இந்நகரில் உள்ள வர்த்தக வாய்ப்புகள் குறித்து எமக்கு நல்ல புரிதல் இருக்கிறது. சைனீஸ் டிராகன் கஃபேயின் பிரபலமான சீன உணவுச் சுவைகளைக் கண்டி மக்களுக்கு கொண்டு சேர்க்க முடிந்ததையிட்டு எமக்குப் பெருமகிழ்ச்சி. இந்தப் புதிய உணவகத்தின் மூலம் புதிய வாடிக்கையாளர்களைச் சென்றடையவும், கண்டி மக்களுடன் நீண்டகால உறவுகளைக் கட்டியெழுப்பவும் நாம் எதிர்பார்க்கிறோம்.”என்றார். கண்டியில் புதிய உணவகத்தைத் திறந்து வைத்தமையானது, நாட்டின் முக்கிய நகரங்களுக்குத் தனது சேவைகளை விரிவுபடுத்தி வாடிக்கையாளர்களுக்கு மேலும் நெருக்கமாகச் செல்ல சைனீஸ் டிராகன் கஃபே முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்தின் மற்றுமொரு முக்கிய படியாகும். தனது பாரம்பரிய உணவுச் சுவையையும் தரத்தையும் பாதுகாத்துக் கொண்டு, நவீன உணவக வசதிகளையும் இலகுவான சேவைகளையும் அறிமுகப்படுத்துவதில் நிறுவனம் தொடர்ந்தும் செயற்பட்டு வருகிறது. 1942-இல் பம்பலபிடிய பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட சைனீஸ் டிராகன் கஃபேயின் பயணம், இன்று இலங்கையையும் தாண்டி விரிந்துள்ள ஒரு வெற்றிகரமான வர்த்தகப் பயணமாக மாறியுள்ளது. 84 வருட அனுபவம் மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கையின் அடிப்படையில், கண்டி புதிய உணவகத்துடன் தனது வர்த்தக வலையமைப்பை மேலும் பலப்படுத்தும் சைனீஸ் டிராகன் கஃபே, எதிர்காலத்திலும் புதிய சந்தை வாய்ப்புகளை அடையாளம் கண்டு தனது விரிவாக்கத்தைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்க்கிறது.

