Samsung இன் Dialog Finance Lesi Pay வசதி நாடு முழுவதிலுமுள்ள அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்களுக்கும் விரிவாக்கம்
Samsung ஸ்ரீலங்கா நிறுவனம், Dialog Finance நிறுவனத்தின் ‘Lesi Pay’ இலகு தவணை கொடுப்பனவு வசதியை நாட்டின் முன்னணி அங்கீகரிக்கப்பட்ட Samsung விற்பனை நிலையங்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளது. முன்னதாக டயலொக் காட்சியறைகளில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த இச்சேவை, தற்போது நாடு முழுவதும் உள்ள சுமார் 400 அங்கீகரிக்கப்பட்ட Samsung விற்பனை நிலையங்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், Samsung ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் tablets-களை வாடிக்கையாளர்கள் மிக இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வகையில், 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இவ்வசதியை 1,000 விற்பனை நிலையங்கள் வரை விரிவுபடுத்தவும் Samsung நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Lesi Pay வசதி மூலம், தகுதியான வாடிக்கையாளர்கள் எவ்வித கடனட்டையோ, பிணையாளரோ இன்றி மாதம் ரூ. 3,657 முதலான குறைந்தபட்ச இலகு தவணை முறையில் அசல் Samsung சாதனங்களை கொள்வனவு செய்ய முடியும். இதற்கான கொடுப்பனவுக் கால அவகாசம் 18 மாதங்கள் வரை வழங்கப்படுகிறது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்கள் ஊடாகக் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு Samsung இன் உத்தியோகபூர்வ உத்தரவாதமும் குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு 24 மாதங்கள் வரையிலான Samsung Break-Free சலுகையும் வழங்கப்படும்.
இச்சலுகையானது Galaxy A07, Galaxy F07, Galaxy F06 5G, Galaxy A17 5G, Galaxy M17 5G ஆகிய ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் Galaxy Tab A11 tablet ஆகிய சாதனங்களுக்குப் பொருந்தும்.
டயலொக் ஃபைனான்ஸ் வழங்கும் Lesi Pay என்பது, தகுதியுடைய வாடிக்கையாளர்கள் தமக்கு விருப்பமான சாதனங்களின் விலையை முறைப்படுத்தப்பட்ட மாதத் தவணைகள் மூலம் பிரித்துச் செலுத்த உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு கடன் வசதியாகும். இத்திட்டம் கடனட்டை அல்லது பிணையாளரின் தேவையை முழுமையாக நீக்குவதுடன், வாடிக்கையாளர்கள் சாதனத்தைத் தேர்வு செய்வதற்கு முன்பாகவே Dialog Pay செயலி வாயிலாகத் தமது தகுதியை சுயமாகவே சரிபார்த்துக் கொள்ளவும் முடியும். இக்கடன் அனுமதி, திருப்பிச் செலுத்தும் கால அவகாசம் மற்றும் அதற்குரிய வட்டி வீதங்கள் என்பன டயலொக் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தீர்மானிக்கப்படும்.
வாடிக்கையாளர்கள் இச்சேவையைப் பெற Dialog Pay செயலியைப் பதிவிறக்கம் செய்து, முதலில் தமது தகுதியைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். அதனைத் தொடர்ந்து, இத்திட்டத்திற்குத் தகுதியான Samsung சாதனங்களில் தமக்கு விருப்பமானதைத் தேர்வுசெய்து, அருகிலுள்ள டயலொக் விற்பனை நிலையங்களில் நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம். இச்சேவையானது டயலொக் காட்சியறைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட Samsung சில்லறை விற்பனை நிலையங்கள் வாயிலாகக் கிடைப்பதால், இலங்கை முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் இதனை மிகவும் இலகுவாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்த விரிவாக்கம் குறித்து Samsung ஸ்ரீலங்கா மற்றும் மாலைத்தீவுக்கான முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. டோங்கியூன் லீ (Mr. Dongkyun Lee) கருத்து தெரிவிக்கையில், “Dialog Lesi Pay சேவையை எமது அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனை வலைப்பின்னலுக்கு விரிவாக்கம் செய்வதானது, இலங்கை முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அசல் Samsung சாதனங்களை மேலும் எளிதாகக் கிடைக்கச் செய்வதற்கான ஒரு முக்கியமான படியாகும். அதிகளவிலான விற்பனை நிலையங்கள் மூலம் இந்த வசதியை வழங்குவதன் மூலம், வாடிக்கையாளர்கள் தமக்கு விருப்பமான சாதனங்களை விலைக்கு வாங்குவதற்கு முடிவதுடன் Samsung நிறுவனத்தின் உத்தரவாதம் மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவைகளை அனுபவிக்கின்ற வாய்ப்பும் கிடைக்கிறது.” என்று தெரிவித்தார்.
இது குறித்து டயலொக் ஃபைனான்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பணிப்பாளருமான நசீம் மொஹமட் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையர்களின் அன்றாடத் தேவைகளுக்கு ஏற்ப நிதிச் சேவைகளை எளிமையாகவும், அணுகக்கூடியதாகவும் மாற்றுவதே டயலொக் ஃபைனான்ஸின் முக்கிய நோக்கமாகும். பிணையாளரோ கடனட்டையோ இன்றி வாடிக்கையாளர்கள் தமக்குத் தேவையான சாதனங்களைச் இலகுவான மற்றும் நெகிழ்வுத்தன்மை கொண்ட மாதத் தவணைகளில் சொந்தமாக்கிக் கொள்ள Lesi Pay வழிவகை செய்கிறது. Samsung இன் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை வலையமைப்பு ஊடாக இவ்வசதியை விரிவுபடுத்துவது, நாட்டின் அனைத்துப் பகுதி வாடிக்கையாளர்களுக்கும் நிதிச் சேவைகளை மிக அருகில் கொண்டு சேர்ப்பதற்கான ஒரு முக்கியமான படியாகும். இதுபோன்ற கூட்டாண்மைகள் மூலம் நிதி அணுகலுக்கும் டிஜிட்டல் இணைப்புக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து, மக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தும் தொழில்நுட்பத்தின் பலன்களைப் பெற அதிகளவிலான இலங்கையர்களுக்கு வலுவூட்டுவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.” என்றார்.
மேலதிக தகவல்களுக்கு, வாடிக்கையாளர்கள் Dialog Pay செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது அருகிலுள்ள ஏதேனும் ஒரு டயலொக் காட்சியறை அல்லது அங்கீகரிக்கப்பட்ட Samsung சில்லறை விற்பனை நிலையங்களுக்குச் சென்று பெற்றுக் கொள்ள முடியும்.

