December 22, 2024
NCE ஏற்றுமதி விருது விழாவில் RIOCOCO நிறுவனத்திற்கு புகழ்மிக்க இரண்டு விருதுகள்
செய்தி

NCE ஏற்றுமதி விருது விழாவில் RIOCOCO நிறுவனத்திற்கு புகழ்மிக்க இரண்டு விருதுகள்

Dec 25, 2023

உலகளவில் பிரபல்யம் பெற்றுள்ள தெங்கு சார்ந்த உற்பத்தி நிறுவனமான RIOCOCO லங்கா தனியார் நிறுவனம், தேசிய ஏற்றுமதி சபை (NCE) ஏற்பாடு செய்த 2023 ஆம் ஆண்டுக்கான உயர் தேசிய ஏற்றுமதி விருது விழாவில் பாரியளவிலான பிரிவில் மிகவும் நாகரீகமான வர்த்தக ஏற்றுமதியாளர் எனும் விருதை வென்றுள்ளது. இத் தனித்துவமான வெற்றியின் மூலம் இரண்டு தசாப்தங்களுக்கு மேலான RIOCOCO லங்கா நிறுவனத்தின் வரலாற்றுக்கு மேலுமொரு மறக்க முடியாத அடையாளத்தை நிறுவனம் பதிவு செய்துள்ளது. ஏற்றுமதி அபிவிருத்தி சபை 30 ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்த மேற்படி விருது விழா கொழும்பு ஷெங்ரீலா ஹோட்டலில் நடைபெற்றது. ஒரு நிறுவனத்திற்கு வருடத்திற்கு ஒரு தடவை மாத்திரம் கிடைக்கக்கூடிய இந்த விருதை வழங்குகையில் சுற்றாடல், சமூகப் பொறுப்பு மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் குறித்த நிறுவனம் வெளிப்படுத்தியுள்ள பங்களிப்பும் நாகரீகமான வர்த்தகம் தொடர்பாக தேசிய ஏற்றுமதி சபை வெளியிட்டுள்ள சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள 08 பிரமானங்களும் கருத்தில் கொள்ளப்பட்டன. NCE விருது விழாவில் தெங்கு மற்றும் தெங்கு சார்ந்த உற்பத்திகள் பிரிவின் பாரியளவிலான பிரிவின் வெங்கலப் பதக்க விருதையும் RIOCOCO நிறுவனம் வென்றுள்ளது.

“இந்த வெற்றியுடன் நாம் உலகளவில் மாத்திரமல்ல இலங்கையிலும் உச்சம் தொட்ட நிறுவனம் என்பது உறுதியாகியுள்ளது. எமது இந்த பயணத்தில் பெரும் உறுதுணையாக இருந்து எமது வளர்ச்சிக்கு உதவிய அனைவருக்கும் நன்றி. இதற்கு முன்னரும் ஐக்கிய அமெரிக்கா, தெற்காசிய நாடுகள் மற்றும் உள்நாட்டு வர்த்தக துறையில் வழங்கப்பட்ட ஏராளமான விருதுகள் மற்றும் பாராட்டுகளை எமது நிறுவனம் பெற்றுள்ளது. இச் சகல வெற்றிகளுடன் சமூக மற்றும் பொருளாதார நீதியை அடிப்படையாக கொண்ட வெற்றிப் பயணத்துக்கு பிரவேசிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம்.” என RIOCOCO நிறுவனத்தின் அதிபரும் தலைமை நிறைவேற்று அதிகாரியுமான திரு ஷான் ஹலம்ப தெரிவித்தார். மண் பாவனையற்ற பெருந்தோட்டத் துறை உற்பத்திச் செயற்பாடொன்றை ஆரம்பித்தல் தொடர்பான எவ்வித திட்டமும் காணப்படாத ஒரு காலப்பகுதியில் தெங்கு சார்ந்த மூலப்பொருட்களை கொண்டு அவ்வாறான உற்பத்தியொன்றை ஆரம்பிக்கக் கூடிய சாத்தியம் தொடர்பாக திரு ஹலம்ப ஆர்வம் காட்டினார். அதன் விளைவாக 2004 ஆம் ஆண்டில் RIOCOCO நிறுவனம் உதயமான நிலையில் மிகக் குறுகிய காலத்திலேயே பெரும் வெற்றியை பதிவு செய்ததோடு தற்பொழுது இம் முயற்சி 65 இற்கு மேற்பட்ட நாடுகள் வரை வியாபித்து பெரும் விருட்சமாக வளர்ந்துள்ளது. RIOCOCO நிறுவனத்தின் தலைமையகம் வாரியபொல, கட்டுபொத்த பிரதேசத்தில் அமைந்துள்ளதோடு நாடெங்கிலும் அமைந்துள்ள கைத்தொழிற்சாலைகள் மற்றும் மூலப்பொருள் உற்பத்திசாலை வலையமைப்பொன்றின் மூலம் நிறுவனம் தமது உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *