December 20, 2024
சுகாதாரக் கல்வியின் முன்னோடியான IIHS நிறுவனத்தினால் பல்வேறு புதிய பாடநெறிகள்அறிமுகம்
செய்தி

சுகாதாரக் கல்வியின் முன்னோடியான IIHS நிறுவனத்தினால் பல்வேறு புதிய பாடநெறிகள்அறிமுகம்

Jan 19, 2024

தெற்காசிய பிராந்தியத்தின் சுகாதாரக் கல்வியின் முன்னோடியான International Institute of Health Sciences (IIHS) தாதியர் சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் தொடர்புடைய ஏராளமான பாடநெறிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் பிரகாரம், Nursing, Biomedical Science, Physiotherapy, Health Administration, Digital Health, Radiography, Optometry, Pharmacy, Nutrition and Health, Sports and Exercise Science, Paramedic science, Psychology, Education போன்ற பல்வேறு துறைகளுக்குரிய சான்றிதழ் பாடநெறி, உயர் சான்றிதழ் பாடநெறி, டிப்ளோமா, பட்டப்படிப்பு, பட்டப்பின் படிப்பு மற்றும் முதுமானி பட்டப்படிப்பு ஆகியவற்றை IIHS நிறுவனம் வழங்குகின்றது.

உயர் தரப் பரீட்சைக்கு எந்த பிரிவில் தோற்றி இருந்தாலும் மேற்படி பாடநெறிகளை கற்க முடியுமென்பதோடு, சாதாரணத் தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கும் அடிப்படை பாடநெறியை பூர்த்தி செய்து மேற்படி பாடநெறிகளை கற்க முடிகின்றமை குறிப்பிடத்தக்கது. மேற்படி பாடநெறிகளின் பெறுமதியில் 15 இல் ஒரு மடங்கை விட குறைவான கட்டணத்தில் IIHS நிறுவனத்தினூடாக மேற்படி பாடநெறிகளை கற்க முடியும். ஐக்கிய இராச்சியத்தின் (Coventry) கொவென்ட்ரீ பல்கலைக்கழகத்துடனான ஒப்பந்தத்தின் பிரகாரம் மேற்படி பாடநெறிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இரண்டு தசாப்தங்களுக்கு மேற்பட்ட வரலாற்றை கொண்டுள்ள IIHS நிறுவனம் சர்வதேச நியமங்கள் மற்றும் தரத்துக்குட்பட்டு சுகாதார கல்வித் துறைகளுடன் தொடர்புடைய பல்வேறு பாடநெறிகளை கற்பதற்கு தெற்காசிய பிராந்திய மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கின்றது.  அதற்கு மேலதிகமாக ஆராய்ச்சி மற்றும் சமூக அபிவிருத்தி போன்ற துறைகளுடன் தொடர்புடைய பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களையும் செயற்படுத்தி வரும் IIHS  நிறுவனம் ஆயிரக்கணக்கிலான சுகாதார தொழில் வல்லுனர்களை உருவாக்கவும், மேலும் பல தொழில் வல்லுநர்களின் தொழில்முறை திறனை மேம்படுத்தவும் கடந்த காலங்களில் நடவடிக்கை எடுத்துள்ளது. அவ்வாறு கல்வி கற்கும் மாணவர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு உதவி அளிக்கும் நோக்கத்துடன் IIHS நிறுவனம் ஐக்கிய இராச்சியத்தின் National Health Services (NHS) மற்றும் Care England UK போன்ற உயர் மட்ட சுகாதார சேவை பங்குதாரர்களுடன் நேரடி உறவுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *