ஐக்கிய இராச்சியத்தின் NHS மற்றும் Care England UK நிறுவனங்களுடன் IIHS புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடல்
இலங்கையின் சுகாதாரக் கல்வியின் முன்னோடியான International Institute of Health Sciences (IIHS) ஐக்கிய இராச்சியத்தின் முன்னணி சுகாதார சேவை நிறுவனங்களான National Health Services (NHS) மற்றும் Care England UK நிறுவனங்களுடன் நேரடி உறவுகளை ஏற்படுத்திக்கொண்ட தெற்காசியாவின் முதலாவது கல்வி நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது. IIHS மற்றும் NHS நிறுவனங்களுக்கிடையே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் IIHS வத்தளை வளாகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளதோடு அதன் கீழ் பாடவிதானங்களை தயாரித்தல், கிளினிக் பயிற்சி திட்டங்கள் மற்றம் அறிவு பரிமாற்றல் திட்டங்கள் தொடர்பாக இரண்டு நிறுவனங்களும் பரஸ்பர ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகின்றன. அதன் மூலம் IIHS நிறுவனத்தில் கல்வி கற்கும் மாணவ, மாணவியர்கள் சர்வதேச சுகாதார நியமங்கள் மற்றும் நடைமுறைகளுக்குட்படுவார்கள். இந்த ஒப்பந்தத்தின் பெறுபேறாக 100 இற்கும் மேற்பட்ட சுகாதார வல்லுநர்கள் மற்றும் தாதியர்கள் இங்கிலாந்துக்கு புலம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Care England UK நிறுவனத்துடன் நிருவப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் பரந்துபட்ட சுகாதார கல்வி வசதிகளை வழங்குவதற்கு IIHS நிறுவனத்துக்குள்ள அர்ப்பணிப்பை மேலும் மேம்படுத்துகிறது. முதியோர் பராமரிப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு சேவை வழங்குநர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் Care England UK ஒருங்கிணைந்த ஆராய்ச்சி கருத்திட்டங்கள், பயிற்சித் திட்டங்கள் மற்றும் பாட விதானங்களுக்கு சம்பவ கற்கை போன்ற விடயங்கள் தொடர்பாக IIHS நிறுவனத்துடன் ஒத்துழைப்புடன் செயற்படுகின்றது. Care England UK பிரதம நிறைவேற்று அதிகாரி பேராசிரியர் மார்டின் க்ரீன் அண்மையில் IIHS நிறுவனத்துக்கு களச் சுற்றுலாவொன்றை மேற்கொண்டிருந்ததோடு, அதன் போது கருத்து தெரிவித்த அவர் இந்த ஒத்துழைப்பு உடன்படிக்கையின் மூலம் இரண்டு நிறுவனங்களுக்குமே பல்வேறு அனுகூலங்கள் கிடைக்குமென குறிப்பிட்டார். இந்த கூட்டிணைவு உள்நாட்டில் மாத்திரமின்றி தெற்காசிய பிராந்தியத்தின் சுகாதார கல்வித் துறைக்கு பல்வேறு பரந்துபட்ட வாய்ப்புகளை உருவாக்குவதாகவும், அதன் மூலம் சம்பிரதாயபூர்வ எல்லைகளை உடைத்து மேம்பட்ட கல்வி மற்றும் நிஜ உலகின் சுகாதார சேவை நடைமுறைகளுக்கிடையே காணப்படும் இடைவெளியை நிரப்ப முடியுமெனவும் IIHS நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சிறப்பு மருத்துவர் கித்சிறி எதிரிசிங்க தெரிவித்தார். அது இலங்கையை சேர்ந்த தாதியர், பராமரிப்பாளர் மற்றும் பராமரிப்பு உதவியாளர்களுக்கு இங்கிலாந்தில் மேற்குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களில் தொழில் வாய்ப்புகளை பெறவும் உதவுமென அவர் மேலும் குறிப்பிட்டார். மேலும், இலங்கைக்கு அத்தியாவசியமான அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கும் இச் செயற்பாடு பெரிதும் உதவுமெனவும் டாக்டர் எதிரிசிங்க தெரிவித்தார். IIHS நிறுவனத்தில் முழுநேர உயர் கல்வியை கற்று NHS இல் சேவையாற்றுவதற்கு அவர்களாலேயே தெரிவு செய்யப்பட்ட உசானி தம்மிக்கா, பிரித்தானியாவின் சார்ள்ஸ் மன்னரின் பிறந்த தினத்துக்கு வாழ்த்து தெரிவிப்பதற்கு இணைத்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 Comment
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.