September 13, 2024
IIHSநிறுவனத்தின் சான்றிதழ் மற்றும் பட்டமளிப்பு விழா வெற்றிகரமாக நிறைவு
செய்தி

IIHSநிறுவனத்தின் சான்றிதழ் மற்றும் பட்டமளிப்பு விழா வெற்றிகரமாக நிறைவு

Jan 19, 2024

தெற்காசிய பிராந்தியத்தில் சுகாதாரக் கற்கை துறையின் முன்னோடியாக திகழும் International Institute of Health Sciences (IIHS) நிறுவனத்தில் பட்டப்படிப்பு மற்றும் சான்றிதழ் பாடநெறிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த சுமார் 800 மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா அண்மையில் கொழும்பில் நடைபெற்றுள்ளது. மேற்படி நிறுவனத்தின் 15 ஆவது பட்டப்படிப்பு மற்றும் சான்றிதழ் பாடநெறி பட்டமளிப்பு விழாவான இதில் அடிப்படை, டிப்ளோமா, இளங் கலைப் பட்டம், பட்டப்பின் படிப்பு மற்றும் முனைவர் பட்டம் போன்ற பல துறை பாடநெறிகளை பூர்த்தி செய்த மாணவர், மாணவியர்களுக்கு அவர்களுக்குரிய பட்டங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. இம் முறை பட்டப் படிப்புகள் மற்றும் சான்றிதழ் பாடநெறிகளை பூர்த்தி செய்த மாணவ, மாணவியர்களோடு IIHS நிறுவுனம் இதுவரை உலகளவில் உருவாக்கியுள்ள சுகாதார துறை தொழில் வல்லுனர்களின் எண்ணிக்கை 3,500 இற்கும் அதிகமாகும். இதில் 2500க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் தாதியர் உத்தியோகத்தர்களாக பணிபுரிகின்றனர். இது நாளுக்கு நாள் அதிகரிக்கும் சுகாதாரத் துறை வல்லுநர்களின் தேவையை வழங்குவதற்கு IIHS நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துவதாக உள்ளது. இந் நிறுவனத்தில் கற்ற சுமார் 500 இற்கும் மேற்பட்ட சுகாதார துறை வல்லுநர்கள் தற்பொழுது பல்வேறு நாடுகளில் தொழில் புரிகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி பட்டமளிப்பு விழாவில் ஐக்கிய இராச்சியத்தின் (Coventry) கொவென்ட்ரீ பல்கலைக்கழகம் வழங்கும் தகைமைகளை பூர்த்தி செய்துள்ள சுமார் 790 இற்கும் மேற்பட்டோர் பட்டம் பெற்றுள்ளமை தனித்துவமானதொரு மைல்கல் ஆகும். (Coventry) கொவென்ட்ரீ பல்கலைக்கழக வரலாற்றில் சர்வதேச கிளை ஒன்றில் 790 மாணவர்கள் ஒரே நேரத்தில் பட்டம் பெறுவது இதுவே முதல் முறை. IIHS நிறுவனம் நீண்ட காலமாக (Coventry) கொவென்ட்ரீ பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயற்படுவதோடு அதன் மூலம் உயர் தரத்திலான ஏராளமான பாடநெறிகளை அறிமுகப்படுத்தவும் IIHS நிறுவனத்தினால் முடிந்துள்ளது. இலங்கையில் முதல் தடவையாக அதிகளவிலான முதுகலை பட்டம் பெற்ற தாதியர் உத்தியோகத்தர்களுக்கு பட்டமளிக்கும் நிகழ்வும் இங்கு நடைபெற்றது. இரண்டு தசாப்தங்களுக்கு மேற்பட்ட வரலாற்றை கொண்டுள்ள IIHS நிறுவனம் உலக தரத்திலான நியமங்கள் மற்றும் தரப் பண்புகளுக்குமைய சுகாதாரத் துறைக்கேற்புடைய பல்வேறு பாடநெறிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கு மேலதிகமாக, ஆராய்ச்சி மற்றும் சமூக அபிவிருத்தி போன்ற துறைகள் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களையும் இந் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் ஊடாக ஆயிரக் கணக்கிலாளன சுகாதாரத் துறை வல்லுநர்களை உருவாக்கவும், மேலும் பலருடைய தொழில்முறை திறனை மேம்படுத்தவும்  IIHS நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *