November 6, 2024
HNB FINANCE இன் 3 புதியதங்கக்கடன் மத்திய நிலையங்கள் திறந்து வைப்பு
செய்தி

HNB FINANCE இன் 3 புதியதங்கக்கடன் மத்திய நிலையங்கள் திறந்து வைப்பு

Aug 27, 2024

தங்கக் கடன் சேவைகளுக்காக அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இலங்கையின் முன்னணி நிதிச் சேவை நிறுவனங்களில் ஒன்றான HNB FINANCE PLC, கல்கமுவ, கெக்கிராவ மற்றும் மஹியங்கனை ஆகிய கிளைகளில் தனது 3 புதிய தங்கக் கடன் மத்திய நிலையங்களை அண்மையில் திறந்து வைத்தது.

இதன்படி, கல்கமுவ கிளையின் தங்கக் கடன் மத்திய நிலையம் இல. 349/A, அநுராதபுரம் வீதி கல்கமுவ, கெக்கிராவ கிளையின் தங்கக் கடன் மத்திய நிலையம் இல. 36/A, யக்கல்ல வீதி கெக்கிராவ மற்றும் மஹியங்கன கிளையின் தங்கக் கடன் மத்திய நிலையம் இல. 207, பதியதலாவ வீதி மஹியங்கன ஆகிய இடங்களிலும் திறக்கப்பட்டுள்ளன.

இதில் கல்கமுவ மற்றும் கெக்கிராவ ஆகிய கிளைகளில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தங்கக் கடன் மத்திய நிலையங்களின் திறப்பு விழா நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக HNB FINANCE நிதி அலைவரிசையின் முகாமைத்துவத் தலைவரும், உதவிப் பொது முகாமையாளருமான திரு.பெதும் சம்பத் குரே மற்றும் தயாரிப்பு வணிக முகாமைத்துவத்தின் தலைவரும், பொது முகாமையாளருமான திரு. லக்ஷ்மன் எராஜ் ஆகிய இருவரும் கலந்துகொண்டதுடன், மஹியங்கன கிளையின் திறப்பு விழா நிகழ்வின் பிரதம அதிதிகளாக HNB FINANCE செயல்பாட்டு வசதிகள் முகாமைத்துவப் பிரிவின் பிரதி பொது முகாமையாளர் பிமல் செனவிரத்ன மற்றும் நிதி அலைவரிசையின் முகாமைத்துவத் தலைவரும், உதவிப் பொது முகாமையாளருமான திரு.பெதும் சம்பத் குரே ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன், இவ்விரு நிகழ்வுகளிலும் உதவிப் பொது முகாமையாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் கிளை முகாமையாளர்கள் உள்ளிட்ட பல சிறப்பு விருந்தினர்களும் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், கல்கமுவ, கெக்கிராவ மற்றும் மஹியங்கனை ஆகிய கிளைகளில் திறந்து வைக்கப்பட்ட HNB FINANCE இன் 3 புதிய தங்கக் கடன் மத்திய நிலையங்கள் தொடர்பில் HNB FINANCE PLC நிறுவனத்தின் தங்கக் கடன் பிரிவின் தலைவர் திரு. லக்ஷ்மன் ரணசிங்க கருத்து தெரிவிக்கையில், ‘இப்புதிய தங்கக் கடன் மத்திய நிலையங்கள் நிச்சயமாக கல்கமுவ, கெக்கிராவ மற்றும் மஹியங்கன ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு சேவை செய்யும். எங்களுடைய தனித்துவமான தங்கக் கடன் திட்டங்கள் மூலம் எங்களின் சாத்தியமான மற்றும் தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு அதிக பயனை வழங்க முயற்சிக்கிறோம்’ என்று அவர் தெரிவித்தார்.

மேலும், அதிகபட்ச பயனை வணிகங்களுக்கும் தனிநபர்களுக்கும் மிகுந்த கவனத்துடன் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இப்புதிய தங்கக் கடன் மத்திய நிலையங்கள், வாடிக்கையாளர்களுக்கு தங்கத்திற்கு எதிராக கடன்களை வழங்கும் என அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு பிராந்தியத்திலும் உள்ள தற்போதைய மற்றும் சாத்தியமான வாடிக்கையாளர்களுக்கு வசதியாக இப்புதிய தங்கக் கடன் மத்திய நிலையங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், தற்போது பாவடிக்கையாளர்களுக்கு நிறுவனத்தின் நவீன தங்கக் கடன் தயாரிப்புகளான தங்கக் கடன் (Gold Loan), தங்கத் திட்டம் (Gold Plan) மற்றும் VIP தங்கக் கடன் போன்றவற்றைப் பெறலாம். இந்த சேவைகள் தொழில்துறையில் மிகச்சிறந்த தங்க விலைகளுடன் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படுகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதில் HNB FINANCE PLC இன் தங்கத் திட்டம் என்பது ஒரு தனித்துவமான சலுகையாகும், குறிப்பாக, வாடிக்கையாளர்களுக்கு தவணை முறையில் பணத்தை செலுத்தி தங்கள் விருப்பத்திற்கேற்ப தங்க நகைகளை வாங்க முடியும். அதேபோல, மக்களுக்கு தமது தங்க சேமிப்பை அதிகரிக்கவும், குழந்தைகளின் பண்டிகைத் தேவைகளுக்காக தங்கங்களை வாங்கவும் வாய்ப்பளிக்கிறது. எனவே, இந்தத் திட்டம் எதிர்காலத்தில் உடனடி நிதித் தேவைகளை நிறைவேற்ற வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த முதலீட்டு வாய்ப்பாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அதேபோல, தங்களுடைய தங்கப் உடைமைகளுக்கு எதிராக பணக் கடனைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு, HNB FINANCE இன் VIP தங்கக் கடன் திட்டம் சிறந்த தேர்வாகும். இந்தத் திட்டம் எந்தவொரு வணிகத்திற்கும் அல்லது தனிநபருக்கும் மிகவும் தனிப்பயனாக்கப்பட்ட கவனிப்புடன் அதிகபட்ச மதிப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் கடனுக்கு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு HNB FINANCE முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்கும். இதில் வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப தனிப்பட்ட சேவைகளும் அடங்கும்.

எனவே, அன்றாட நடவடிக்கைகளுக்கு திரவ பணப்புழக்கம் இன்றியமையாததாக இருப்பதால், கடன் பெற விரும்பும் பல வணிகங்கள் அதிக வட்டி விகிதங்களுடன் கூடிய கடன்களுக்கு விண்ணப்பிக்கின்றன அல்லது வேறு வழிகளை விட விரைவாக பணம் கிடைக்க தள்ளுபடி காசோலைகளைப் பெறுகின்றன. இந்த சூழலில், எந்தவொரு வணிகமும், தங்களுடைய தங்கப் பொருட்களுக்கு எதிராக கடனைப் பெற விரும்பும் எந்தவொரு தனிநபரும் HNB FINANCE மூலம் கடனுக்கு விண்ணப்பித்து அதன் நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

HNB FINANCE இன் நிபுணர்கள் தங்கப் பொருட்களை முழுமையாக ஆய்வு செய்து எந்த முரண்பாடுகளுக்கும் இடமளிக்க மாட்டார்கள். ஒப்புதல் கிடைத்தவுடன், வாடிக்கையாளர்கள் எந்த சிரமமும் இன்றி ஒருசில நிமிடங்களில் கடன் தொகையைப் பெறுவதற்கான விரைவான அனுபவத்தைப் பெற்றுக் கொள்வர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *