November 8, 2024
ஆண்டின் சிறந்த முதலீட்டு நிறுவனத்துக்கான Asia Miracleவிருதை வென்றுள்ள Dearo Investment நிறுவனம்
செய்தி

ஆண்டின் சிறந்த முதலீட்டு நிறுவனத்துக்கான Asia Miracleவிருதை வென்றுள்ள Dearo Investment நிறுவனம்

Jul 21, 2024

இலங்கையின் முன்னணி முதலீட்டு நிறுவனமான Dearo Investment நிறுவனம் MUGP எனும் சர்வதேச அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற Asia Miracle விருது விழாவில் ஆண்டின் சிறந்த அபிவிருத்தி முதலீட்டு நிறுவனம் என்ற விருதை வென்றுள்ளது. அதன் போது மனித நேயம் மற்றும் சமூக அபிவிருத்திக்காக மேற்கொண்ட பணிகளை பாராட்டி Dearo Investment  நிறுவனத்தின் பணிப்பாளரும் தலைமை நிறைவேற்று அதிகாரியுமான திரு பிரசன்ன சஞ்சீவ அவர்களுக்கு கௌரவ பட்டமும் அளிக்கப்பட்டது. இலங்கை முழுவதும் முதலீட்டுச் சேவைகளையும் டிஜிட்டல் முதலீட்டுத் தீர்வுகளையும் வழங்கும் Dearo Investment  நுண், சிறிய மற்றும் மத்திய அளவிலான தொழில்துறைகளை அபிவிருத்தி செய்வதில் கூடுதல் கவனம் செலுத்துகிறது. இந் நிறுவனம் இன்றளவில் முதலீட்டுத் துறைக்கு மேலதிகமாக தொழில்முயற்சிகள் மற்றும் சட்டங்கள், உணவு பாணங்கள், சுற்றுலா, கல்வி, மென்பொருள் மற்றும் தொழில்நுட்பம், வாகனங்கள், கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டம் போன்ற பொருளாதார அபிவிருத்திக்கு கனிசமான பங்களிப்பை வழங்கும் பல்வேறு துறைகளுக்கு தமது வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளது.

Dearo Investment  வழங்கும் பிரதான முதலீட்டுச் சேவைகளில் தனியார் முதலீட்டுச் சேவைகள், தொழில்முயற்சி முதலீட்டுச் சேவைகள், பல்வேறு வகையிலாள கடன் வசதிகள் ஆகியவை முதன்மை இடத்தை பெறுகின்றன. புத்தாக்கத்துக்கும் வினைத்திறனுக்கும் முன்னுரிமை அளித்து செயற்படுகின்ற இந்நிறுவனத்தில் பணியாற்றும் அனுபவமிக்க பாணியாட்டொகுதியினர் அந்தந்த வாடிக்கையாளர் தேவைகளை செவ்வனே அடையாளங்கண்டு ஏற்புடைய சேவைகளை வழங்குகின்றனர். தற்பொழுது நாடளாவிய ரீதியில் 06 கிளை அலுவலகங்கள் நிறுவப்பட்டுள்ளதோடு இவ்வருடம் நிறைவடைவதற்குள் நாடெங்கிலும் சுமார் 30 கிளை அலுவலகங்களை திறப்பதற்கு நிறுவனம் எதிர்பார்த்துள்ளது. சுபாஷ் குணரத்ன, உபுல் எதிரிசூரிய மற்றும் தரிந்து தனஞ்சய சமரவிக்ரம ஆகியோரை கொண்ட பணிப்பாளர் சபையுடன் Dearo Investment   நிறுவனத்துக்கு தலைமைத்துவம் வழங்கும் திரு பிரசன்ன சஞ்சீவ வங்கியியல் மற்றும் நிதித் துறையில் 15 ஆண்டுகளுக்கு மேல் சேவையாற்றியுள்ளார். சந்தைப்படுத்தல் துறை சார்ந்ததாக பேராதெனிய பல்கலைக்கழகத்தில் MBA மற்றும் BBA பட்டப்படிப்புகளை பூர்த்தி செய்துள்ள அவர் இலங்கை வங்கியாளர்கள் மற்றும் நிறுவனம் சார் நிதி கற்கை நிறுவனங்களிடம் கடன் முகாமைத்துவம் மற்றும் வங்கியியல்/நிதியியல் தொடர்பான டிப்ளோமா பாடநெறியையும் கற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *