December 12, 2024
Chevron Lanka ஆனது Uber SL உடன் கைகோர்க்கிறது  Uber மூலம் உழைப்போருக்கு Caltex வர்த்தகநாமத்தின் உராய்வு நீக்கிகளின் மீது பிரத்தியேக அனுகூலங்கள்
செய்தி

Chevron Lanka ஆனது Uber SL உடன் கைகோர்க்கிறது  Uber மூலம் உழைப்போருக்கு Caltex வர்த்தகநாமத்தின் உராய்வு நீக்கிகளின் மீது பிரத்தியேக அனுகூலங்கள்

Nov 12, 2024

Caltex வர்த்தகநாமத்தின் சந்தைப்படுத்துனர்கள் மற்றும் விநியோகஸ்தர்களாக திகழும் செவ்ரோன் லுப்ரிகண்டஸ் லங்கா பிஎல்சி (Chevron Lanka), இலங்கையிலுள்ள ஊபர் நிறுவனத்துடன் கைகோர்ப்பதை மகிழ்வுடன் அறியத்தருகிறது. சவாரிக்காகவும் பொருட்களை கொண்டு சேர்க்கவும் (delivery) ஊபர் பயன்படுத்தும் ஓட்டுனர்கள் இப்போது செவ்ரோன் லங்காவின் அதிஉன்னதரக உராய்வு நீக்கிகளை (lubricants) அணுக முடியும். இவை இயந்திரத்தின் செயற்திறனை மேம்படுத்தல், வாகன ஆயுளை நீட்டித்தல், விசேட விலையில் எரிபொருள் வினைத்திறனை சிறப்பித்தல் ஆகியவற்றுக்கு புகழ் பெற்றவை. இது அவர்களுக்கு வாகனத்துக்கு தேவையான பராமரிப்பை மேற்கொண்டு பாதையில் எவ்வித சிக்கலுமின்றி பாதுகாப்பாக தம் பணியை ஆற்ற உதவும்.

Uber Eats தங்களின் ‘Get Almost, Almost Anything’ வாக்குறுதியை பலப்படுத்தும் வகையில் ‘கார் பராமரிப்பு’ என்ற புதிய பிரிவை அறிமுகப்படுத்த உள்ளது. இனி இலங்கையர்கள் அவர்களின் விருப்பமான டெலிவரி தளத்தின் மூலம் முன்னணி தரமான உராய்வுநீக்கிகளை சில கிளிக்குகளிலேயே கொள்வனவு செய்ய முடியும்.

“நாங்கள் ஊபர் இலங்கையுடன் இணைந்து பணிபுரிய மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இது நாட்டின் இரு துறைகளில் உள்ள ஊபர் ஓட்டுநர்களுக்கு ஒரு விசேட மதிப்புடன் கூடிய உதவியாக இருக்கும்,” என செவ்ரோன்  லூப்ரிகென்ட்ஸ் லங்கா பிஎல்சி நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பெர்ட்ரம் பால் அவர்கள் தெரிவித்தார். மேலும் தொடர்ந்த அவர் “ஒரு வாகனத்தை பராமரிப்பது ஓட்டுநர்களுக்கு முக்கியமானது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அத்துடன் எங்கள் உராய்வுநீக்கி உற்பத்திகள் இயந்திரத்தின் ஆயுட்காலத்தையும் செயல்திறனையும் மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த ஒத்துழைப்பின் மூலம், அவர்கள் ஒரு புதிய நிலையான திறன் மற்றும் மதிப்பினை அனுபவிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

“கூரியர்கள் மற்றும் ஓட்டுநர்களே ஊபரின் வெற்றிக்கு அவசியமானவர்கள். அவர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும், அவர்களுக்கு உதவிடும் பல அனுகூலங்களை வழங்கவும் நாம் தொடர்ந்து முயன்று வருகின்றோம்.” என Uber Delivery – இலங்கை நிறுவனத்தின் தேசப் பணிப்பாளரான வருண் விஜேவர்தனே அவர்கள் எடுத்துரைத்தார். மேலும் தொடர்ந்த அவர் “செவ்ரோன் லங்காவுடன் இந்த கூட்டாண்மை மூலம் அவர்களின் வெற்றியில் பங்களிக்கின்றோம். அதாவது, இயக்குவதற்கான செலவுகளை குறைப்பதற்கும் வாகன நம்பகத்தன்மையை மேம்படுத்துவதற்கும் உதவுகிறோம். இதற்காக எங்கள் செயலி வழி சேவைகளில் ஒரு புதிய பிரிவையும் சேர்த்துள்ளோம், இதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைக்கேற்றவாறு உயர்தரமான உராய்வு நீக்கிகளை கொள்வனவு செய்யலாம்” என்றார்.

ஊபரின் Mobility மற்றும் Delivery துறைகளில் உள்ள ஓட்டுநர்கள், Caltex அங்கீகாரம் பெற்ற விநியோகஸ்தர்கள் ஊடாக செவ்ரோன் லங்காவின் உயர்தரமான உராய்வு நீக்கிகளை விசேட சலுகைகளுடன் கொள்வனவு செய்ய முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *