December 2, 2024
Aberdeen Holdings, மாணவர்களை ஊக்குவிக்கும் முயற்சியாக “Inspiring the Leaders of Tomorrow” என்ற தொழில் வழிகாட்டல் முயற்சியை ஆரம்பித்துள்ளது
செய்தி

Aberdeen Holdings, மாணவர்களை ஊக்குவிக்கும் முயற்சியாக “Inspiring the Leaders of Tomorrow” என்ற தொழில் வழிகாட்டல் முயற்சியை ஆரம்பித்துள்ளது

Oct 7, 2023

இலங்கையிலுள்ள இளைஞர்,யுவதிகள் சரியான தொழில் வழிகாட்டல் இல்லாமை போன்ற பாரதூரமான பிரச்சினையை எதிர்கொண்டுள்ள நிலையில், இது அவர்களின் வாய்ப்புக்களை முழுமையாக கண்டுகொள்வதற்கும், அடைவதற்கும் தடையாக உள்ளது. இதைப் புரிந்துகொண்டு, Aberdeen Holdings (Pvt) Ltd சமீபத்தில் “Inspiring the Leaders of Tomorrow” என்ற மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் முயற்சியை முன்னெடுத்துள்ளது. இலங்கையில் இளைஞர்,யுவதிகள் மத்தியில் முழுமையான தொழில் வழிகாட்டல் மற்றும் ஆதரவின் அவசியத்தை நிவர்த்தி செய்யும் நோக்கில், இந்த நிகழ்வானது 2023 ஜூலை 29 அன்று Ex-Pack Corrugated Cartons PLC நிறுவனத்தில் இடம்பெற்றது.

“Inspiring the Leaders of Tomorrow” என்ற செயலமர்வுக்கு இளம் சிந்தனைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததுடன், சுயமாக-கண்டுபிடித்தல் மற்றும் வலுவூட்டுகின்ற மாற்றத்திற்கான பயணத்தை மேற்கொள்ள அவர்களை இது ஊக்குவிக்கிறது. மாணவர்களுக்கு அவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புக்கள் மற்றும் வழிமுறைகளைக் காண்பிப்பது, வழிகாட்டுதல் மற்றும் தேவையான வளங்களை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொள்ள இது அவர்களுக்கு உதவியது. இலங்கை தனது திறமைசாலிகளை நாட்டிற்குள் தக்கவைத்துக்கொள்ள முயற்சிப்பதால், இத்தகைய முயற்சிகள் மிகவும் முக்கியமானவை. குறிப்பாக, போதுமான தொழிற்பயிற்சி மற்றும் தொழில் வழிகாட்டுதல்களை வழங்குவதன் மூலம், புலம்பெயர்தல் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பைத் தங்களது ஒரேயொரு தெரிவாக நாடாமல், மாணவர்கள் தாங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் மற்றும் சாத்தியங்களைக் கண்டறிய உதவும். உறுதியான அர்ப்பணிப்புடனும், தூரநோக்குடனான குறிக்கோளுடனும், இந்த முயற்சியானது எதிர்கால தலைவர்களை செதுக்குவதற்கு பாடுபடுவதுடன், இலங்கையின் வளர்ச்சிவாய்ப்புக்களை முழுமையாக வெளிக்கொண்டு வர வழிகோலுகின்ற எதிர்காலத்தை முன்வைக்கிறது.

அடுத்த தலைமுறையின் அறிவாற்றலை வளர்ப்பதற்கான ஆழ்ந்த அர்ப்பணிப்பு இந்த முயற்சியின் மையமாக உள்ளது. இலங்கையின் ஒளிமயமான எதிர்காலத்திற்கான தூரநோக்குடனான குறிக்கோளுடன், “Inspiring the Leaders of Tomorrow” நிகழ்வு 40 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்துகொள்ள வழிகோலியது. புகழ்பெற்ற உத்வேகமளிக்கும் பேச்சாளரும், Tolmark இன் தலைமைப் பயிற்றுவிப்பாளரும், GlinMax இன் பணிப்பாளருமான திரு. ஸம்றீன் ஸரூக் அவர்கள், மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பிரதான உரையை ஆற்றினார். இது நிகழ்வில் பங்குபற்றியவர்கள் மத்தியில் வலுவான ஊக்கத்தை ஏற்படுத்தியதுடன், அவர்களுக்கு மிகவும் தேவையான வழிகாட்டுதலையும் தெளிவையும் வழங்கியது.

இந்த முயற்சியின் மையமானது எதிர்கால சிற்பிகளான இளைஞர்,யுவதிகள் மத்தியில் முழுமையாக பயன்படுத்தப்படாத அவர்களின் திறன் பற்றிய உறுதியான நம்பிக்கையாகும். இந்த முயற்சியானது, இந்த இளம் தலைவர்கள் மற்றும் புத்தாக்குனர்களுக்கு அவர்களின் பின்னணி பேதமின்றி, அவர்கள் தேர்ந்தெடுத்த முயற்சிகளில் சிறந்து விளங்குவதற்குத் தேவையான கருவிகள், அறிவு மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதில் Aberdeen Holdings இன் ஓயாத அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த குறிக்கோள் பல நற்பலனளிக்கும் செயலமர்வுகள், கருத்தரங்குகள், வழிகாட்டல் நிகழ்ச்சித்திட்டங்கள், டிஜிட்டல் வளங்கள் மற்றும் நிதியியல் ஆதரவு வழிமுறைகள் ஆகியவற்றின் மூலம் முன்னெடுத்துச் செல்லப்படுவதுடன், இவை அனைத்தும் வெகு விரைவில் பொருத்தமான தருணத்தில் அறிமுகப்படுத்தப்படும்.

Aberdeen இன் மாணவர் தொழில் வழிகாட்டல் முயற்சி உடனடி சவாலை எதிர்கொள்வது மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் ஒரு நிலைபேற்றுடனான நற்பலனுக்கான திட்டங்களையும் கொண்டுள்ளது. இந்த அர்ப்பணிப்பு பல்வேறு தொழில் துறைகளில் பரந்து விரிந்துள்ள புகழ்பெற்ற தொழில் வல்லுநர்கள் மற்றும் நிறுவனங்களுடனான மூலோபாய ஒத்துழைப்புகளால் மேலும் வலுப்படுத்தப்படுகிறது. வழிகாட்டுதல், யதார்த்த உலக நுண்ணறிவு மற்றும் ஆழமாக ஆராயும் அனுபவங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான ஆதரவு கட்டமைப்பை மாணவர்களுக்கு வழங்குவதே முக்கிய குறிக்கோள் ஆகும். இவை அனைத்தும் சிறந்த தீர்மானங்களை எடுப்பதற்கு பங்களிக்கின்றன. இறுதியில், இந்த முயற்சியானது நடைமுறை அறிவு மற்றும் திறன்களைக் கொண்ட மாணவர்களை மேம்படுத்த முயல்வதுடன், அவர்களின் எதிர்கால தொழில் வாழ்க்கைப் பாதைகளில் நம்பிக்கையுடன் முன்செல்ல அவர்களை தயார்படுத்துகிறது.

Aberdeen நிறுவனம் தொடர்பான விபரங்கள்

Aberdeen Holdings (PVT) Ltd நிறுவனம் ஒரு வலிமையான கூட்டு நிறுவனங்களின் குழுமமாக உள்ளதுடன், அதன் செல்வாக்கு பதினொரு வேறுபட்ட துறைகளில் மெச்சத்தக்க அளவில் வியாபித்துள்ளது. Aberdeen Holdings அதன் ஆரம்பத்திலிருந்தே மருந்துகள், பொதியிடல், பண்டங்கள், விமான சேவை, போக்குவரத்து மற்றும் விநியோக ஏற்பாட்டியல், தேயிலை மற்றும் கோப்பி, மின் உற்பத்தி, மீள்சுழற்சி, விவசாயம், விநியோகச் சங்கிலி முகாமைத்துவம் மற்றும் டிஜிட்டல் துறை போன்ற தொழில் துறைகளில் இடையறையின்றி தன்னை உள்ளிணைத்துக் கொண்டது. மேன்மைக்கான அதன் ஓயாத அர்ப்பணிப்பு, அதன் பரந்த குடையின் கீழ் தளைத்தோங்கி வரும் பதின்மூன்று நிறுவனங்களில் வெளிப்படுகிறது. இந்த நிறுவனங்களில் Ex-Pack Corrugated Cartons, Expoteas, Expo Commodities, FITS Air, Bio Extracts, Neptune Recyclers, Lanka Commodity Holdings, FITS Express, FITS Retail, Damn Fine – Coffee Roasters, HIENERGY, Ruhunu Farms, மற்றும் Antler Foundry ஆகியவை அடங்கும். ஒட்டுமொத்தமாக, இந்த நிறுவனங்கள் 1300 க்கும் மேற்பட்ட அர்ப்பணிப்புள்ள தொழில் வல்லுநர்களைப் பணியில் அமர்த்தியுள்ளதுடன், இது 1.2 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வில் நேர்மறையான தாக்கத்திற்கு வித்திட்டுள்ளது. பல்வேறு துறைகள் மற்றும் மேன்மைக்கான அர்ப்பணிப்புடன், Aberdeen Holdings (PVT) Ltd, அது தொழிற்படும் எண்ணற்ற துறைகளில் புத்தாக்கம் மற்றும் முன்னேற்றத்தின் பாதையை செதுக்கி, ஒரு வலுவான குழுமமாக முன்னிலையில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *