September 24, 2026
டிஜிட்டல் எழுத்தறிவை மேம்படுத்துவது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) ட்ரில்லியன் கணக்கான டொலர்களை உருவாக்க வழிவகுக்கும்
செய்தி

டிஜிட்டல் எழுத்தறிவை மேம்படுத்துவது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) ட்ரில்லியன் கணக்கான டொலர்களை உருவாக்க வழிவகுக்கும்

Sep 24, 2026

டிஜிட்டல் எழுத்தறிவை மேம்படுத்த Huawei மற்றும் GSMA இணைந்து புதிய அறிக்கை வெளியீடு

Huawei மற்றும் GSMA அமைப்புகள் இணைந்து தயாரித்த ‘இடைவெளியைக் குறைத்தல்: செயற்கை நுண்ணறிவு (AI) யுகத்தில் டிஜிட்டல் எழுத்தறிவை மேம்படுத்துதல்’ என்ற தலைப்பிலான ஆய்வு அறிக்கை, யுனெஸ்கோவின் டிஜிட்டல் கற்றல் வாரத்தை முன்னிட்டு அண்மையில் வெளியிடப்பட்டது.  

இந்த அறிக்கையின் தரவுகளின்படி, உலகில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான மக்கள் (சுமார் 38 கோடி மக்கள்), தாங்கள் வாழும் பகுதிகளில் கையடக்கத் தொலைபேசி இணைய வசதி இருந்தபோதிலும் இன்னமும் இணையத்தைப் பயன்படுத்துவதில்லை. அவர்களுக்கு இடையே உள்ள குறைந்த அளவிலான டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப அறிவே இதற்கான முக்கிய காரணம் என்று புதிய ஆய்வு அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டுகிறது.  

உலகளவில் 310 கோடி மக்களைப் பாதிக்கும் டிஜிட்டல் சேவைகளின் பற்றாக்குறையை இந்த அறிக்கை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது. டிஜிட்டல் திறன்களின் குறைபாடு, பயனர்களின் நம்பிக்கையின்மை மற்றும் செயற்கை நுண்ணறிவு பற்றிய அறிவின்மை ஆகியவையே இந்த இடைவெளிக்கு முதன்மை காரணங்களாகும்.  

AI வழங்கும் வாய்ப்புகளும், சவால்களும்

தற்போதைய கணிப்புகளின்படி, இந்த டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப திறன் இடைவெளியைக் குறைப்பதன் மூலம் 2030 ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கூடுதலாக சுமார் 3.5 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களைச் சேர்க்க முடியும். இதில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பொருளாதாரப் பலன்கள் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட வளர்ந்து வரும் நாடுகளுக்கே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது உலக மக்கள் தொகையில் 96 சதவீதமானோருக்கு கையடக்கத் தொலைபேசி இணைய வசதி நேரடியாகக் கிடைக்கப் பெறுகின்றன.

யுனெஸ்கோவின் டிஜிட்டல் கற்றல் வாரத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, செயற்கை நுண்ணறிவானது வசதிகள் குறைந்த சமூகங்கள் டிஜிட்டல் உலகத்துடன் இணைவதற்கு ஒரு பாலமாகவும், அதே வேளையில் ஒரு தடையாகவும் செயல்படக்கூடும் எனத் தெரிவிக்கிறது. AI தொழில்நுட்பத்தால் இயங்கும் கருவிகள் மூலம் குறைந்த எழுத்தறிவு கொண்ட பயனர்கள் தட்டச்சு (Typing) செய்ய வேண்டிய அவசியத்தைத் தவிர்க்க முடியும் என்றாலும், டிஜிட்டல் தளங்களில் பாதுகாப்பாக இயங்குவதற்குத் தரவு இரகசியத்தன்மை மற்றும் டிஜிட்டல் அபாயங்களை அடையாளம் காணும் திறனை வளர்த்துக் கொள்வது அவசியமாகும்.
 

உலக வங்கியின் புள்ளிவிபரங்களை மேற்கோள் காட்டி, உருவாக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு Generative AI) எழுத்தறிவே தற்போதைய காலகட்டத்தில் அதிக நிதி மதிப்பைக் கொண்ட திறனாக விளங்குகிறது என்று இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. சாதாரண டிஜிட்டல் அறிவு அல்லது பாரம்பரிய யுஐ திறன்களால் கிடைக்கும் பலன்களை விடவும் அதிகமாக, இந்த GenAI திறனைக் கொண்டுள்ள நபர்கள் 36% வரை அதிக ஊதிய உயர்வைப் பெற வாய்ப்புள்ளது.  

அடிப்படை டிஜிட்டல் பயிற்சிகளை வழங்க சரியான தலையீடுகளும் முறையான திட்டங்களும் முன்னெடுக்கப்படாவிட்டால், AI தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி காரணமாகத் தற்போதுள்ள சமூக சமத்துவமின்மை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக இந்த அறிக்கை எச்சரிக்கிறது. முழுமையான இணைய வசதி கொண்ட பகுதிகளிலும் கூட இது சமமான பாதிப்பை ஏற்படுத்தும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close