July 27, 2024
கொழும்பு நகரத்தை அழகுபடுத்தும் நடவடிக்கைகளுக்கு அனுசரணை வழங்கும் மெல்வா நிறுவனம்
செய்தி

கொழும்பு நகரத்தை அழகுபடுத்தும் நடவடிக்கைகளுக்கு அனுசரணை வழங்கும் மெல்வா நிறுவனம்

Dec 31, 2023

இலங்கையின் முன்னணி உருக்கு கம்பி உற்பத்தியாளரான மெல்வா நிறுவனம் சமூகக் கடமையினை சரியாக உணர்ந்து செயற்படுமொரு நிறுவனம் என்ற வகையில் நகரங்களை அழகுபடுத்தும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து கொழும்பு நகர மண்டப ஒடெல் சுற்றுவட்டாரத்திலிருந்து தாமரைத் தடாகம் அரங்கு வரை உள்ள வீதியின் சுற்றுச் சூழலை அழகுபடுத்தும் நடவடிக்கைகளுக்கு தமது பூரண அனுசரணையினை வழங்கியுள்ளது. அதன் பிரகாரம் வீதிக்கு மத்தியில் அழகிய தாவரத் தொகுதிகளை உருவாக்கி பராமரிக்கும் செயற்பாடுகள் மெல்வா நிறுவனத்தின் மேற்பார்வையிலும் அனுசரணையிலும் மேற்கொள்ளப்படுகின்றன.

அபிவிருத்தி அடைந்த நாடொன்றை கட்டுயெழுப்புவதில் நகரங்களை அழகுபடுத்தும் செயற்பாடு முன்னுரிமை பெறுவதோடு குறிப்பாக கட்டுமானங்களின் போது சூழலை அழகுபடுத்தும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதானது தற்போது கட்டாயமாக உள்ளது. இலங்கையின் கட்டுமானத்துறைக்கு பெருமளவில் பங்களிப்பு வழங்கும் மெல்வா நிறுவனமும் இயற்கைக்கு குறைந்த பாதிப்பு ஏற்படும் வகையில் சூழலை அழகுபடுத்துவதற்கு முன்னுரிமை அளித்து நிலைபேறான அபிவிருத்தியை நோக்கிய பயணம் இருக்க வேண்டுமென்பதை ஏற்றுக்கொள்ளும் நிறுவனம் என்ற வகையில் சூழல் நேய நிகழ்ச்சித்திட்டங்களுக்கு தமது கூடுதல் பங்களிப்பை தொடர்ந்தும் வழங்கி வருகிறது. கொழும்பு நகரின் மையப்பகுதியான நகர மண்டப பிரதேசத்துக்கு அன்றாடம் இலட்சக்கணக்கான மக்கள் வருகின்றனர். கொழும்பு தேசிய மருத்துவமனை, கொழும்பு கண் மருத்துவமனை, கொழும்பு பல் மருத்துவமனை, கொழும்பு மாநகர சபை, தாமரைத் தடாக அரங்கு, கொழும்பு பொது நூலகம். மியுசியஸ் கல்லூரி, விஹாரமாதேவி பூங்கா போன்ற தேசிய முக்கியத்துவமிக்க பல்வேறு இடங்களை கொண்டுள்ள இப் பகுதியில் சூழலை அழகாக பேணுவதன் மூலம் இப் பகுதிக்கு வந்து செல்லும் மக்களின் மன நிம்மதிக்கு பங்களிப்பு செய்ய முடியும். இச் சகல விடயங்களையும் கவனத்தில் கொண்டு மெல்வா நிறுவனம் இவ்வாறு நகர மண்டப வளாகத்தின் சூழலை அழகுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. தொடர்ந்தும் இவ்வாறான சூழல் அழகுபடுத்தல் நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு வழங்குவதற்கு மெல்வா நிறுவனம் தயாராக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *