
Vista Solar Energy நிறுவனத்துக்கு ஆண்டின் சிறந்த சூரிய ஒளி மூலமான மின்வலுத் தீர்வு வழங்குநருக்கான Asia Miracle 2025விருது
இலங்கையின் புதுப்பிக்கத்தக்க சக்தி துறையில் முன்னோடியாக திகழும் Vista Solar Energy நிறுவனம் Asia Miracle 2025 விருது விழாவில் ஆண்டின் சிறந்த சூரிய ஒளி மூலமான மின்வலுத் தீர்வு வழங்குநர் எனும் விருதை வென்றுள்ளது. குடிமனைகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான சூரிய ஒளி மூலமான மின்வலுத் தீர்வுகளை வழங்கி நிலைபேறான வலுசக்தி உற்பத்தி மற்றும் நுகர்வை உயர்த்துவதற்கு பெரும் பங்களிப்பை வழங்கி வரும் Vista Solar Energy நிறுவனம் கடந்த காலங்களில் இத் துறையின் முன்னோடியாக மாறி தூய்மையான வலுசக்தி மூலங்கள் தொடர்பாக ஆர்வங்கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு பரந்தளவிலான பலதரப்பட்ட உற்பத்திகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மேம்பட்ட வினைத்திறனுடன் கூடிய சூரிய பெனல் கட்டமைப்புகள், ஒன்றுக்கொன்று மாறுபட்ட தேவைகளுக்கேற்ற தொழில்நுட்ப உதவிகள் மற்றும் காற்றாலை வலுசக்தி தீர்வுகள் அவற்றில் முதன்மையானவை ஆகும்.
Vista பணியாட்டொகுதியினர் சூரிய ஒளி மூலமான வலுசக்தி தீர்வுகள் தொடர்பான அடிப்படை ஆலோசனை செயற்பாடுகளிலிருந்து சூரிய ஒளி கட்டமைப்பு நிறுவுதல் மற்றும் பராமரிப்பு வரையான சகல சேவைகளையும் வழங்குகின்றனர். சகல வாடிக்கையாளர்களுக்கும் ஒரே செயன்முறையினை பின்பற்றாது அந்தந்த வாடிக்கையாளரின் வளாகத்தின் அமைவிடம், வலுசக்தி நுகர்வு அமைப்பு, எதிர்கால தேவைகளுக்கேற்றதான சேவை வழங்கல் ஆகியவை தனித்துவமான பண்புகளாகும். அதன் ஊடாக நிறுவப்படும் சகல சூரிய பெனல் கட்டமைப்புகளிலிருந்தும் அதிகபட்ச பலனை பெறக்கூடியதாக இருக்கும். உள்நாட்டு காலநிலை மாற்றங்களுக்கு தாங்குதிறன் கொண்டதான உயர் தரத்திலான மூலப்பொருட்களை கொண்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ள சூரிய பௌல்கள் வாடிக்கையாளர்களின் மின்சார பட்டியல் கட்டணத்தை குறைந்த மட்டத்தில் பேணி புதை படிவ எரிபொருளிலான மின் உற்பத்தியை குறைக்கிறது. இந்த சூரிய பெனல்களை பொருத்திய நாளிலிருந்தே மின்சார கட்டணம் குறைந்துள்ளதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். Vista Solar Energy சுற்றாடல் பொறுப்புக்கூறலுடன் கூடிய பயிர்ச்செய்கை நடைமுறைகளை பின்பற்றி வெனிலா, பழ வகைகள் மற்றும் இதர பயிர்ச் செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள Agrovista நிறுவனத்தின் இணை நிறுவனமாகும். புதுப்பிக்கத்தக்க சக்தியின் மூலம் சூழலை பாதுகாக்கும் அந் நிறுவனத்தின் நோக்கு நிலைபேறான விவசாய நடைமுறைகளை ஊக்குவிப்பதற்கான Agrovista நிறுவனத்தின் நோக்குடன் நன்கு பொருந்துகின்றமை குறிப்பிடத்தக்கது.