August 17, 2025
GenAI இன் தொழில்நுட்பக் குறைபாடுகள் நிறுவனங்களின் இணையப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?
செய்தி

GenAI இன் தொழில்நுட்பக் குறைபாடுகள் நிறுவனங்களின் இணையப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

Mar 10, 2025

சைபர் தாக்குதல்களை எதிர்த்துப் போராடி அவற்றை தோற்கடிப்பதற்கான சமீபத்திய பாதுகாப்பு தீர்வுகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான Sophos சமீபத்தில் புதிய அறிக்கையை வெளியிட்டது. 400 தகவல் தொழில்நுட்பத் தலைவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் ‘சைபர் பாதுகாப்பிற்கான AI இன் வணிக யதார்த்தம்’ (“Beyond the Hype: The Businesses Reality of AI for Cybersecurity”) என்ற தலைப்பில் இந்த அறிக்கையை Sophos வெளியிட்டுள்ளது. இந்த ஆயவில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின்படி, 65% பேர் செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தியுள்ளதாகவும், 89% பேர் GenAI இணையப் பாதுகாப்பு கருவிகள் தங்கள் நிறுவனத்தை பாதிக்கக்கூடும் என கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும், புதிய Sophos X-Ops ஆய்வின்படி ‘சைபர் குற்றவாளிகள் இன்னும் முழுமையாக செயல்படவில்லை’ என்ற கருப்பொருளில் வெளியிடப்பட்ட அறிக்கையில், சைபர் குற்றவாளிகள் AI-ஐப் பயன்படுத்தும் முறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனுடன் சம்பந்தப்பட்ட சில நிலப்பரப்பு தொடர்புகளை ஆய்வு செய்த பின்னர், குற்றவாளிகள் இன்னும் GenAI பற்றி சந்தேகம் கொண்டுள்ளதாகவும், சில குற்றவாளிகள் மின்னஞ்சல் கோப்புகளை உருவாக்குதல் மற்றும் தரவுப் பகுப்பாய்வு போன்ற பணிகளை தானியங்கி முறையில் செய்ய இதைப் பயன்படுத்துவதாகவும் Sophos X-Ops மூலம் கண்டறிந்துள்ளது. மற்றொரு குழுவினர் இதை spam செய்வதற்கும், சமூக ஊடக பொறியியல் கருவிகளில் சேர்ப்பதற்கும் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து Sophos இன் உலகளாவிய செயல்பாடுகளுக்கான தலைமை தொழில்நுட்ப அதிகாரி Chester Wisniewski கருத்து தெரிவிக்கையில், ‘வாழ்க்கையின் பல விடயங்களைப் போலவே, AI கருவிகள் குறித்தும் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இயந்திரங்களுக்கு சிந்திக்கும் திறனை நாம் வழங்கவில்லை என்றாலும், பெரிய அளவிலான தரவுகளை செயலாக்குவதை துரிதப்படுத்தும் வாய்ப்பை அளித்துள்ளோம். பாதுகாப்பு தொடர்பான பணிகளை துரிதப்படுத்த ஆச்சரியப்படும் வகையில் பயன்படுத்தக்கூடிய இந்த கருவிகளின் நன்மைகளை அடைய, அவற்றைப் பற்றி அவர்களுக்கு சிறந்த புரிதல் இருக்க வேண்டும்’ என்று கூறினார்.

ஆய்வில் உள்ளடக்கிய நிறுவனங்களில் 98% நிறுவனங்கள் இணையப் பாதுகாப்பு உள்கட்டமைப்பில் ஏதாவது ஒரு விதத்தில் AI தொடர்புடையதாக இருக்கும் நிலையில், AI ஐ அதிகமாகச் சாரந்திருப்பது குறித்து தொழில்நுட்பத் தலைவர்கள் கவலை தெரிவித்தனர். பதிலளித்தவர்களில் 87% பேர் சைபர் பாதுகாப்பு தொடர்பான பொறுப்புக்கூறல் இல்லாதது குறித்து கவலை கொண்டிருப்பதாகத் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close