October 24, 2025
Thimark Technocreations கென்யாவின்National Power Company (KenGen) நிறுவனத்துடன் கருத்திட்ட உடன்படிக்கை கைச்சாத்து
செய்தி

Thimark Technocreations கென்யாவின்National Power Company (KenGen) நிறுவனத்துடன் கருத்திட்ட உடன்படிக்கை கைச்சாத்து

Oct 23, 2025

ISO 9001:2015 சர்வதேச தரச் சான்றிதழை வென்றுள்ள Thimark Technocreations தனியார் நிறுவனம் கென்யாவின் National Power Company (KenGen) நிறுவனத்துடன் 156,000 அமெரிக்க டொலர் பெறுமதியான கருத்திட்டமொன்றுக்கு உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளது. இது இலங்கை பொறியியல் சேவை வழங்குநர் துறையில் தனித்துவமானதொரு மைல்கல்லாகும். இதன் கீழ் Thimark Technocreations நிறுவனம்(KenGen)  நிறுவனத்துக்காக  KILGHARRAH 600 எனும் பெயரில் அழைக்கப்படும் ஓரிடத்திலிருந்து பிறிதொரு இடத்துக்கு எடுத்துச் செல்லக்கூடிய Hydraulic Trash Rack Cleaning  இயந்திரமொன்றை வடிவமைத்தல், உற்பத்தி செய்தல், கொண்டு செல்லுதல், பொருத்துதல் மற்றும் செயற்படுத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதற்குரிய அத்தனை செயற்பாடுகளும் சர்வதேச தர நியமங்களுக்கமைய மேற்கொள்ளப்படுகின்றன. சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட மின் பொறியியல் மற்றும் தானியக்க பொறியியல் தீர்வுகளை வழங்குவதற்கு Thimark Technocreations நிறுவனம் கொண்டுள்ள ஆற்றல் இதன் மூலம் மேலும் உறுதியாகியுள்ளது. அவ்வாறான இயந்திரமொன்றை இலங்கையில் திட்டமிட்ட மற்றும் உற்பத்தி செய்த முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

“இந்த கருத்திட்டத்தை பெற முடிந்தமை Thimark Technocreations நாம் பெற்ற வெற்றி மாத்திரமல்ல. அது இலங்கையின் பொறியியற் துறையின் தரத்தை உலக அரங்கில் நிரூபிக்க கிடைத்த மகத்தானதொரு தருணமாகும். சர்வதேச தர நியமங்களுக்கமைய உயர் பெறுமதியுடைய பொறியியற் தீர்வுகளை திட்டமிடவும் உற்பத்தி செய்யவும் இலங்கை கம்பனிகளுக்கு முடியுமென்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.” என Thimark Technocreations நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவப் பணிப்பாளருமான தரங்க மாரசிங்க தெரிவித்தார். Steel Fabrication சேவை வழங்கும் நிறுவனமாக தொடங்கப்பட்ட Thimark Technocreations தற்போது கைத்தொழில் பொறித்தொகுதிகள் மற்றும் நீர் சார்ந்த துறைகளுக்கான தீர்வுகளின் (Sludge Scrapers, Trash Cleaners, Sluice Gates) தொடங்கி DPMC (Bajaj), Senaro, Dyno, NWOW, Lencar, Ranomoto போன்ற வாகன அசெம்பிளிக்கான வர்த்தகநாமத்துக்கு தேவையான துணைக்கருவிகள் உற்பத்தி வரை அதன் வணிக நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. கென்ய நாட்டு கருத்திட்டத்தை பெற்றதன் மூலம் ஆக்கத்திறன், தானியக்கத்திறன், FEM பகுப்பாய்வு மென்பொருள் பாவனையின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற கட்டமைப்பு சார்ந்த செல்லுப்படித்தன்மை போன்ற துறைகளுக்கு இந் நிறுவனம் கொண்டுள்’ள சிறப்புத் திறன் உறுதியாகின்றது. ஆபிரிக்க பிராந்தியத்தில் தனித்துவமானதொரு நாடான கென்யாவுக்கு சேவை வழங்குவதற்கு வாய்ப்பை பெற்றதன் மூலம் பிராந்தியச் சந்தைக்கு பிரவேசிக்கவும் முடியும். “இதன் மூலம் சர்வதேச ரீதியாக போட்டியிடுவதற்கான எமது ஆற்றல் நிரூபிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இலங்கைக்கு கனிசமான அந்நியச் செலாவணியும் கிடைக்கிறது. எமது நாட்டின் பொறியியற் தொழில்நுட்பம் தொடர்பாக சர்வதேச ரீதியாக காணப்படும் அங்கீகாரத்தை உயர்த்தவும் புத்தாக்கத்தை ஊக்குவிக்கவும் எம்மால் முடிந்துள்ளது.” தரங்க மாரசிங்க மேலும் தெரிவித்தார். Thimark Technocreations வருங்காலத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைக்கு பயணிகள் வாகன அபிவிருத்தி மற்றும் புத்தாக்க தீர்வுகளை வழங்கி தமது வணிக நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் எதிர்கால கைத்தொழில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு புரட்சிகரமான வகிபாகத்தை ஆற்றுவதே இந் நிறுவனத்தின் பிரதான நோக்கமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close