லபுக்கெல்ல தோட்டத்தின் கதை – பாரம்பரிய தேயிலைப் பாரம்பரியமும் எதிர்காலப் புத்தாக்கத்தையும் சங்கமிக்கும் ஒரு கலவை
இலங்கையின் மத்திய மலைநாட்டின் பனிபடர்ந்த மலைகளுக்கு மேலே, குளிர்ந்த காற்று மரகதச் சரிவுகளில் மெல்ல வீசும் இடத்தில், புகழ்பெற்ற லபுகெல்ல எஸ்டேட் அமைந்துள்ளது. 1870ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தத் எஸ்டேட்டானது, பாரம்பரியம், புத்தாக்கம் மற்றும் சமூக சேவை ஆகியவற்றை ஒன்றிணைத்து, இலங்கை தேயிலையின் அடையாளத்தைத் தொடர்ந்து வடிவமைக்கும் விதத்தில், நாட்டின் மிகவும் பிரபலமான தேயிலைத் தோட்டங்களில் ஒன்றாக காலத்தின் சோதனையைத் தாங்கி நிற்கிறது. இன்று, Damro குழுமத்தின் தொலைநோக்குடைய நிர்வாகத்தின் கீழ், லபுக்கெல்ல இலங்கையின் தேயிலைப் பாரம்பரியத்தின் அடையாளமாகவும், அதன் பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத்திற்குச் செழுமையான பங்களிப்பாளராகவும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
காலனித்துவ ஆரம்பத்திலிருந்து நவீன சிறப்பு வரை
லபுக்கெல்லவின் தோற்றத்திற்கு 1870ஆம் ஆண்டுக்கு செல்வோம், அப்போது அது காலனித்துவ உரிமையின் கீழ் ரம்பொடை என்னுமிடத்தில் முதன்முதலில் நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் Ceylon Co. Ltd. நிறுவனத்தாலும், பின்னர் Eastern Produce & Estates Co. Ltd. நிறுவனத்தாலும் நிர்வகிக்கப்பட்ட இந்தத் எஸ்டேட், விதிவிலக்கான தரத்துடன் தேயிலையை உற்பத்தி செய்வதற்காக விரைவாக அங்கீகாரம் பெற்றது. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், 1,500 மீட்டருக்கு மேல் பயிரிடப்பட்ட உயர் நிலத் தேயிலைகளின் தனிச்சிறப்பான, மெல்லிய, புத்துணர்ச்சியூட்டும் மற்றும் பூக்களின் நறுமணம் கொண்ட அதன் பச்சை இலை அதன் தனித்துவமான சுவைக்காகப் பெரிதும் மதிக்கப்பட்டது.
உயர் நிலப் பயிர்ச்செய்கையில் பரிசோதனை செய்த முதல் எஸ்டேட்களில் லபுக்கெல்லையும் ஒன்றாகும். மேலும் இது நாட்டின் தேயிலை ஏலங்கள் மற்றும் ஏற்றுமதிகளில் ஒரு அடிப்படைக் காரணியாகப் பங்களித்தது. லபுக்கெல்லேயின் Condegalla பிரிவின் தேயிலைச் செடிகள், 1867 இல் Solomon and Gabriel De Worms ஆகியோரால் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விதைகளில் இருந்து நடப்பட்டன. அவை இலங்கையின் பழமையான வணிகத் தேயிலைச் செடிகளில் ஒன்றாகும். இன்றும் அவை பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதே காலகட்டத்தில், ஜேம்ஸ் டெய்லர் (James Taylor) லூல்கொண்தெர (Loolecondera) தோட்டத்தில் முதல் தேயிலைத் தோட்டத்தை உருவாக்கினார். அவர் William Mackwood கொண்டேகல்ல தோட்டத்தைப் பார்வையிட்டார். இது இலங்கையின் உலகளாவிய தேயிலைத் தொழிலுக்கு அடித்தளமிட்டது.
தோட்டத்தின் உண்மையான பெயரான ‘லபுகெல்லே’ (‘Labukele’) என்பது ‘லபு’ (‘Labu’) (கிராம மக்களால் உண்ணப்படும் ஒரு வகை பூசணி/பழம்) நிறைந்த ஒரு காட்டை (Jungle) குறிக்கிறது. இந்தக் காடு தேயிலை நடுவதற்கு அகற்றப்பட்டது. மேலும் அதன் வழியாகப் பாயும் குடா ஓயா (Kuda Oya), கோத்மலை நீர்த்தேக்கத்திற்கு (Kotmale Reservoir) நீர் வழங்கும் முக்கிய கங்கைகளில் ஒன்றாக இன்றும் உள்ளது.
1970களில் தேசியமயமாக்கலுக்குப் பிறகு, லபுக்கெல்ல Janatha Estate மேம்பாட்டு சபையின் (JEDB) கீழ் வந்தது. இது இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக அதன் செயல்பாடுகளை நிர்வகித்தது. 1992இன் தனியார்மயமாக்கல் செயல்முறை ஒரு புதிய சகாப்தத்திற்கு வழிவகுத்தது. அப்போது அகலவத்தை பிளாண்டேஷன்ஸ் லிமிடெட் (Agalawatte Plantations Ltd.) அதன் குத்தகையை எடுத்துக் கொண்டது. பல ஆண்டுகளாக, Mackwoods, Free Lanka மற்றும் பிரவுன்ஸ் பிளாண்டேஷன்ஸ் (Browns Plantations) உள்ளிட்ட முன்னணி தோட்ட முகவர்கள் அதன் வளர்ச்சிக்கு வழிகாட்டினர்.
2017 ஆம் ஆண்டில் Damro குழுமத்தால் கையகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்த எஸ்டேட் ஒரு தீவிர நவீனமயமாக்கல் செயற்பாட்டைத் தொடங்கியது. தினசரி செயல்பாடுகளில் தொழில்நுட்பம், நிலையான சிறந்த நடைமுறைகள் மற்றும் சமூக மேம்பாடு ஆகியவற்றை உறுதிசெய்வதன் மூலம், லபுக்கெல்ல தேயிலை தொடர்ந்து Pure Ceylon Teaஇன் மிகவும் விரும்பப்படும் மூலங்களில் ஒன்றாக உள்ளது.
பாரம்பரியம், மக்கள் மற்றும் நிலைத்தன்மையை வளர்த்தல்
வெஸ்ட்வர்ட் ஹோ! (Westward Ho!) மற்றும் கொண்டேகல (Condegalla) எஸ்டேட்கள் உட்பட 537 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் விரிந்துள்ள லபுக்கெல்ல, 435க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைப் பயன்படுத்துகிறது. இவர்களில் 65% பேர் பெண்கள் ஆவர். இவர்களே ரம்கொடை பிராந்தியம் முழுவதும் வாழ்வாதாரத்தின் அடித்தளமாக உள்ளனர்.
சமூக மேம்பாடு அதன் செயல்பாடுகளுக்கு மையமாக உள்ளது. தோட்டக் குடும்பங்கள் குழந்தை மேம்பாட்டு மையங்கள், கல்வி உதவித்தொகைகள் மற்றும் நிதிச் சேவைகள் மற்றும் மானியத்துடன் கூடிய பொருட்களை வழங்கும் கூட்டுறவுச் சங்கங்கள் ஆகியவற்றால் பயனடைகின்றன. மருத்துவமனைகள், நடமாடும் மருத்துவச் சேவை மற்றும் பயிற்சி பெற்ற மருத்துவ மற்றும் நலன்புரி ஊழியர்களுடன் கூடிய ஒரு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட சுகாதார முயற்சிகள், சுகாதாரப் பாதுகாப்பிற்கான அணுகலை உறுதி செய்கின்றன. வீட்டுவசதி மற்றும் சுகாதாரத் திட்டங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகின்றன. மேலும், தொழிலாளர்களின் அர்ப்பணிப்பைப் அங்கீகரிக்கும் வருடாந்திர விருது வழங்கும் விழாக்கள், கண்ணியம் மற்றும் மரியாதைக்கான கலாச்சாரத்தை வலுப்படுத்துகின்றன.
மழைக்காடு கூட்டணி (Rainforest Alliance), ISO 22000 உணவுப் பாதுகாப்பு முகாமைத்துவம், HACCP மற்றும் ISO 9001-2000 உள்ளிட்ட சான்றிதழ்களைக் கொண்டிருக்கும் லபுக்கெல்ல, நிலையான விவசாயத்திற்கான ஒரு முன்மாதிரியாகும். சமஉயரச் செய்கை (Contour planting), மண் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு மற்றும் இயற்கையான கிருமிநாசினி கட்டுப்பாடு போன்ற நடைமுறைகள் தோட்டத்தின் சூழலியல் சமநிலையைப் பாதுகாக்கின்றன. ட்ரோன் மூலம் கிருமிநாசினி மருந்து தெளிப்பு மற்றும் ஆற்றல் திறன் கொண்ட இயந்திரங்கள் போன்ற புத்தாக்கங்கள், உலகளாவிய நெறிமுறைகளுடன் கூடிய மூலப்பொருட்களைப் பெறும் (ethical sourcing) போக்குகளுக்கு ஏற்ப அதன் கார்பன் தடம் (carbon footprint) குறைப்பை உறுதி செய்கின்றன.
உற்பத்திக்கு அப்பால், இந்தத் தோட்டம் ஒரு கலாச்சார அடையாளமாகத் திகழ்கிறது. அதன் காலனித்துவ கால முகாமையாளர் பங்களா மற்றும் பசுமையான தேயிலைத் தோட்டப் பரப்புகள் ஆகியவை இலங்கையின் காட்சிப் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக உள்ளன. இது கலைஞர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பயணிகளைக் கவர்கிறது. மேலும், 160 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட அதன் கொண்டேகல பிரிவின் தேயிலைச் செடிகளில் ஒரு உயிருள்ள பாரம்பரியத்தைப் பாதுகாத்து வருகிறது. இவை இன்றும் சில மிகச்சிறந்த பாரம்பரிய Pure Ceylon Teaஐ உற்பத்தி செய்கின்றன.
தேயிலை மற்றும் சுற்றுலா வழியாக ஒரு நுழைவாயில் – புகழ்பெற்ற லபுக்கெல்லே தேயிலை மையம்
Kandy–Nuwara Eliya வீதியின் அழகிய பாதையில், 5,250 அடி உயரத்தில் அமைந்துள்ள Labookellie Tea Centre, Agalawatte Plantations PLC-க்கு சொந்தமானது மற்றும் Damro Group-ஆல் நிர்வகிக்கப்படுகிறது. இது இலங்கையின் தேயிலை பாரம்பரியத்தின் மையப்பகுதிக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை வரவேற்று, இலங்கை தேயிலையின் பாரம்பரியத்தில் ஆழமான அனுபவத்தை வழங்குகிறது.
பார்வையாளர்கள் புதியதாக தயாரிக்கப்பட்ட தேநீரை சுவைப்பதுடன், பசுமையான காட்சிகளை கண்டு களிக்கலாம். அத்துடன், தேயிலை தயாரிக்கும் பாரம்பரிய செயல்முறையை நேரில் காண தொழிற்சாலையை சுற்றிப் பார்க்கலாம் மற்றும் Labookellie Special Blend (லபூக்கெல்ல சிறப்பு கலவை) உட்பட உயர்தர தேயிலை வகைகளை வாங்கிச் செல்லலாம். இந்த தேயிலை நிலையம் இயற்கையின் அழகு, வளமான வரலாறு மற்றும் நேரடி அனுபவங்கள் ஆகியவற்றை இணைத்து, தன்னை ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக நிலைநிறுத்தியுள்ளது. இந்த எஸ்டேட்டில் உள்ள சுற்றுலா மூலம் வர்த்தகம், விருந்தோம்பல் மற்றும் கலாச்சார பரிமாற்றம் ஆகியவை ஊக்குவிக்கப்பட்டு, உள்ளூர் பொருளாதாரம் பலப்படுத்தப்படுகிறது. மேலும், இது இலங்கையின் தேயிலை கலாச்சாரத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தும் ஒரு வாயிலாகவும் அமைகிறது.
5,250 அடி உயரத்தில் அமைந்துள்ள லபூக்கெல்ல தொழிற்சாலை, அதன் தோட்டத்தில் அதிகபட்ச உயரம் 6,900 அடியாக உள்ளது. இந்தத் தொழிற்சாலை, மத்திய மலை நாட்டில் உள்ள தேயிலைத் தொழிற்சாலைகளில், நல்ல உற்பத்தி நடைமுறைகளுக்காக (good manufacturing practices), தொழில்துறை அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்து (Industrial Development Authority) முதன்முதலில் 2005ஆம் ஆண்டு Three-Star Awardஐ பெற்றமை குறிப்பிடத்தக்கது.
சிலோன் தேயிலையின் உயிரோட்டமான, வளர்ச்சியடையும் நினைவுச் சின்னம்
இலங்கையின் வெளிநாட்டுச் செலாவணி வருவாயை நிலைநாட்டுவதில் லபூக்கெல்ல எஸ்டேட் தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வருகிறது. இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஒவ்வொரு கிலோகிராம் தேயிலையும், உலகின் மிகச்சிறந்த கருப்புத் தேயிலையை உற்பத்தி செய்வதில் நாட்டிற்கு உள்ள நூற்றுக்கணக்கான ஆண்டுகால நற்பெயரைக் குறிக்கிறது. இந்தத் எஸ்டேட் பாரம்பரியத்தையும் புத்தாக்கத்தையும் சமநிலைப்படுத்துவதுடன், சமூகங்களை வளர்த்து, சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, தேயிலை மூலம் இலங்கையின் உலகளாவிய அடையாளத்தை பலப்படுத்துகிறது.

