December 22, 2024
செத் ரூ ஆயுர்வேத அழகுகலை பயிற்சி கல்லூரி பாடநெறிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு
செய்தி

செத் ரூ ஆயுர்வேத அழகுகலை பயிற்சி கல்லூரி பாடநெறிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

Jan 9, 2024

மூன்நாம் நிலை மற்றும் தொழில் கல்வி ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட ஒரே ஆயுர்வேத அழகுகலை கல்வி நிறுவனமான செத் ரூ ஆயுர்வேத அழகுகலை பயிற்சி கல்லூரியினால் நடாத்தப்பட்ட பாடநெறிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம் அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அதன் போது அழகுகலை உற்பத்தி தொழில்நுட்பம் தொடர்பான உயர் சான்றிதழ் டிப்ளோமா/டிப்ளோமா பாடநெறி, பாத் அன்ட் பொடி கெயார் உற்பத்திகளை மேற்கொள்ளுதல் தொடர்பான சான்றிதழ் பாடநெறி, ஆயுர்வேத அழகுகலை சான்றிதழ் பாடநெறி, உயர் சான்றிதழ் பாடநெறி/டிப்ளோமா சான்றிதழ், ஆயுர்வேத தைல பாடநெறி மற்றும் சுகந்த சிகிச்சை பாடநெறி ஆகிய பாடநெறிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த 170 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

2014 ஆம் ஆண்டில் கலாநிதி மஹேஸ் அத்துரலிய அவர்களினால் தொடங்கப்பட்ட செத் ரூ அழகுகலை பயிற்சிக் கல்லூரியின் தலைமை அலுவலகமும் மேலுமொரு கிளை அலுவலகமும் வத்தளையில் அமைந்துள்ளது. ISO:9001 தரச் சான்றிதழையும் வென்றுள்ள செத் ரூ ஆயுர்வேத அழகுகலை கல்லூரியில் இத் துறையில் பல தசாப்த கால அனுபவத்தை கொண்டுள்ள மருத்துவக் குழுவொன்றினால் கற்பிக்கப்படுகின்றன. நவீன தொழில்நுட்பத்தின் துணையுடன் Day Cream, Night Cream, Fairness Cream, Pimple Cream, Foot Cream, Body Lotion மற்றும் Body Butter போன்ற மேற்கத்திய மற்றும் ஆயுர்வேதம் ஆகிய இரு பிரிவுகளுக்குமுரிய அழகுகலை உற்பத்திகளை மேற்கொள்ளும் முறை தொடர்பான அறிவு மற்றும் முழுமையான பயிற்சியை பெறுவதற்கு இந் நிறுவனத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது. “செத் ரூ ஆயுர்வேத பயிற்சி கல்லூரி இலங்கை கட்டளைகள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள தர நியமங்கள் உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச தர நியமங்களுக்கு உட்பட்டு வழங்கப்படும் கற்கை பாடநெறிகளை பூர்த்தி செய்துள்ள மாணவ, மாணவியர்கள் அதிக அங்கீகாரத்துடன் கூடிய வருமானம் பெறுகின்ற அழகுகலை தொழில் வல்லுனர்களாகவும் தொழில்முனைவோர்களாகவும் மாறியுள்ளனர். அவ்வாறான ஒரு நிலையை அடைய வேண்டுமெனில், செத் ரூ ஆயுர்வேத அழகுகலை பயிற்சி கல்லூரி மாதிரியான மூன்றாம் நிலை மற்றும் தொழில் பயிற்சி கற்கை ஆணைக்குழு மற்றும் துறை சார்ந்த ஏனைய நிறுவனங்களில் பதிவு செய்யப்பட்டதொரு நிறுவனத்தை தெரிவு செய்ய வேண்டும்.” என கலாநிதி மஹேஸ் அத்துரலிய தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *