October 24, 2025
City of Dreams Sri Lanka வழங்கும் “சிக்னேச்சர் தீபாவளி கிளிட்ஸ்” நிகழ்ச்சியில் பங்கேற்கும் சுனில் ஷெட்டி
செய்தி

City of Dreams Sri Lanka வழங்கும் “சிக்னேச்சர் தீபாவளி கிளிட்ஸ்” நிகழ்ச்சியில் பங்கேற்கும் சுனில் ஷெட்டி

Oct 21, 2025

இந்த ஆண்டுக்கான தீபாவளி திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் City of Dreams Sri Lanka-வின் ஏற்பாட்டில் அக்டோபர் 23ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை ‘சிக்னேச்சர் தீபாவளி கிளிட்ஸ்’ (Signature Diwali Glitz) என்ற மூன்று நாள் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதன் முக்கிய அம்சமாக இந்தியாவின் முன்னணி பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி அக்டோபர் 25ஆம் திகதி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ரசிகர்களைச் சந்திக்கவுள்ளார்.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம்வந்து கொண்டிருக்கும் சுனில் ஷெட்டி, 100-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மோஹ்ரா, தில்வாலே, போர்டர் போன்ற வெற்றிப் படங்களுடன், ஹேரா பேரி மற்றும் பிர் ஹேரா பேரி போன்ற வெற்றிப் படங்களிலும் நடித்து புகழ் பெற்ற சுனில் ஷெட்டியின் பன்முகத் திறமை, கவர்ச்சி மற்றும் நீண்டகால நட்சத்திர ஆளுமை இந்த நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும்.

முதல் நாளான 23ஆம் திகதி உலகப் புகழ்பெற்ற Kathak Rockers குழுவினரின் அசத்தலான நடன நிகழ்ச்சி நடைபெறும். இவர்கள் பாரம்பரிய இந்திய கதக் நடனத்தின் தாள லயத்துடன் நவீன பாணியையும் இணைத்து ஒரு தனித்துவமான கலைநிகழ்ச்சியை வழங்க உள்ளனர். பாரம்பரிய கலையும் நவீன வடிவமும் இணையும் இந்த தனித்துவமான நிகழ்ச்சியானது கொழும்பு ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், இரண்டாவது நாளான 24ஆம் திகதி, பிரபல இந்திய நடிகை மற்றும் மாடல் நியா சர்மா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார். ‘நாகின் சீசன் 4’ என்ற வெற்றிகரமான இந்தியத் தொடரின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இலங்கை ரசிகர்களிடையே பிரபலமான இவர், தனது துணிச்சலான கவர்ச்சி மற்றும் திறமையான நடிப்பிற்குப் பெயர் பெற்றவர். எனவே, நியா சர்மாவின் வருகை ‘சிக்னேச்சர் தீபாவளி கிளிட்ஸ்’ நிகழ்ச்சிக்கு மேலும் அழகு சேர்க்கவுள்ளது.

இந்த ரிசார்ட் திறக்கப்பட்டதில் இருந்து, பல முன்னணி இந்திய பிரபலங்கள் தங்கள் விருப்பத் இடமாகக் கொழும்பைத் தேர்ந்தெடுக்கும் மரபைக் காண முடிகிறது. இவர்களின் வருகை, தெற்காசியா மற்றும் அதற்கு அப்பாலுள்ள நாடுகளுக்கு இடையிலான ஒரு கலாச்சார சந்திப்பாக இலங்கையை உயர்த்துவதற்கு ஒரு சான்றாகும். அதேபோல, இங்கு வருகின்ற அனைத்துக் கலைஞர்களும் மிகவும் ஆடம்பரமான NÜWA at City of Dreams Sri Lanka இல் தங்குவார்கள். இது கொழும்பின் உயர்தர சொகுசு தங்கும் வசதிகளை உலகறியச் செய்கிறது.

ஒளியின் திருவிழாவும், புத்துணர்வின் சின்னமுமான தீபாவளி, இந்த விழாவின் மைய கருப்பொருளாக அமைந்துள்ளது. இந்த ஆழமான உணர்வில், ‘சிக்னேச்சர் தீபாவளி கிளிட்ஸ் நிகழ்ச்சி’ இசை, நடனம், மற்றும் திரைத்துறை பிரபலங்களின் கலை ஆற்றலை ஒரே ஒளிமயமான கூரையின் கீழ் ஒன்றிணைக்கிறது.

கொழும்பு ஆசியாவின் அடுத்த பொழுதுபோக்கு மையமாக வேகமாக உருவெடுத்து வருகிறது. குறிப்பாக, உயர் வருமானம் கொண்ட இந்திய சுற்றுலாப் பயணிகளிடையே கொழும்பு ஒரு விருப்பத்திற்குரிய இடமாக மாறியுள்ளது. மேம்படுத்தப்பட்ட விமான இணைப்புகள், ஆடம்பர உட்கட்டமைப்பு வசதிகள், ஆடம்பர கடைத்தொகுதிகள், மற்றும் உயிர்ப்பான கலாச்சார சூழல் ஆகியவற்றின் காரணமாக, இலங்கை அருகிலுள்ள சிறந்த ஆடம்பர ஓய்விடமாக உருவெடுத்துள்ளது. உலகத்தரம் வாய்ந்த விருந்தோம்பல் சேவைகள், சிறந்த நிகழ்ச்சி அரங்குகள், மற்றும் சர்வதேச அளவிலான கலைஞர்களை இங்கு கொண்டுவருவதன் மூலம், கொழும்பை உயர்தர அனுபவ சுற்றுலாவின் புதிய மையப் புள்ளியாக நிலைநிறுத்துகிறது.

இலங்கையின் சுற்றுலா தொலைநோக்குப் பார்வை மிகவும் பெரியது: வெறும் கடற்கரைகளுக்கு அப்பாற்பட்ட அனுபவங்களைத் தேடும் தெளிவான சிந்தனையுள்ள பயணிகளுக்கான உயர்தர இலக்காக உருமாறுவது — அது ஆழ்ந்த கலாச்சார அனுபவங்கள், பிரமிப்பூட்டும் நிகழ்வுகள், உயர்தர உணவு அனுபவம், மற்றும் ஆடம்பர வாழ்க்கை முறை ஆகியவற்றை ஒருங்கிணைத்த சுற்றுலாத் தலமாக உருவெடுக்கும். எனவே, ‘சிக்னேச்சர் தீபாவளி கிளிட்ஸ்’ நிகழ்ச்சியின் மூலம், City of Dreams Sri Lanka இப்புதிய திசையில் முன்னோடியாகத் திகழ விரும்புகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, கொழும்பில் ஒரு பிரம்மாண்டமான அரங்கம் தயாராகியுள்ளது. அதில் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, நடிகை நியா சர்மா, மற்றும் கதக் ராக்கர்ஸ் குழுவினர் தீபாவளியின் ஒளிமயமான கொண்டாட்டத்திற்குப் புத்துயிர் கொடுக்கவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close