October 19, 2025
PV சூரிய சக்தி கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் புத்தாக்கச் சேவைகளுக்காக விருதுகளை வென்றுள்ள Solar Care International
செய்தி

PV சூரிய சக்தி கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் புத்தாக்கச் சேவைகளுக்காக விருதுகளை வென்றுள்ள Solar Care International

Oct 16, 2025

இலங்கையின் முன்னணி சூரிய சக்தி தீர்வுகள் மற்றும் பராமரிப்புச் சேவை வழங்குநரான Solar Care International தனியார் நிறுவனம் Global Business Excellence 2025 விருது விழாவில் இலங்கையின் சிறந்த சூரிய சக்தி பராமரிப்புச் சேவை வழங்குராவும், Elite Series விருது விழாவில் ஆண்டின் மிகுந்த புத்தாக்க சூரிய சக்தி நிறுவனமாகவும், Iconic Awards 2025 விருது விழாவில் ஆண்டின் சிறந்த சூரிய சக்தி பராமரிப்புச் சேவை வழங்குநராகவும் விருதுகளை வென்றுள்ளது. நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் தொழில்நுட்பச் சந்தைப்படுத்தல் பயிற்சியாளருமான திரு தசித்த கொடிதுவக்கு மேற்படி விருதுகளை பெற்றுக்கொண்டார். Solar PV பராமரிப்பு தொடர்பாக சர்வதேச அங்கீகாரத்தை பெற்றதொரு தொழில் வல்லுநரான அவர் உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியாக நிறுவியுள்ள கருத்திட்டங்களின் முழு கொள்ளளவு 320,000kW விடவும் அதிகமாகும். இலங்கை, இந்தியா மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளின் சூரிய சக்தி கருத்திட்டங்களுக்கு விற்பனைக்கு பிந்திய பூரண சேவையினை வழங்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட Solar Care International சூரிய சக்தி கட்டமைப்புகளை நிறுவுவதோடு பராமரிப்புச் சேவைகள் அனைத்தையும் வழங்குகிறது. 41 படிநிலைகளை கொண்ட பாதுகாப்பு பராமரிப்பு செயன்முறையை முதன் முறையாக இலங்கைக்கு அறிமுகப்படுத்திய பெருமையும் இந்த நிறுவனத்தையே சாரும்.

இந் நிறுவனம் சூரிய பெனல்களுக்கான Anti-soiling பாதுகாப்பு கவசங்கள், கட்டமைப்பு ஆரோக்கிய அறிக்கைகள், பறவைகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தடுக்கும் வகையிலான தீர்வுகள், பகுதியளவிலான சுய மற்றும் முழு அளவிலான சுய சுத்திகரிப்பு கட்டமைப்புகள், மூன்றாம் தரப்பு உத்தரவாதச் சான்றிதழ்கள் மற்றும் குடிமனை PV பயன்படுத்துவோருக்கு ஆலோசனை சேவைகள் உள்ளிட்ட புத்தாக்கத் தீர்வுகள் மற்றும் சேவைகள் பலவற்றை வழங்குகிறது. தரப்படுத்தப்பட்ட உற்பத்தி, பாதுகாப்பு, நீண்ட கால உழைப்பின் மூலம் TYPE SCI நிறுவுதல் செயன்முறை இந் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டவற்றில் சில உதாரணங்களாகும். உத்தரவாதப்படுத்தப்பட்ட உயர் தரத்திலான மூலப்பொருட்கள் மற்றும் சிறப்பு பொறியியல் ஆகியவைகளின் தொகுப்பான மேற்படி செயன்முறை குடிமனை, வணிக மற்றும் பயன்பாட்டு மட்ட கருத்திட்டங்களின் நீண்ட கால உழைப்பு மற்றும் வினைத்திறனை உறுதிப்படுத்துகிறது. 28 இற்கும் மேற்பட்ட உலகளாவிய சூரிய சக்தி கம்பனிகளுடன் பணியாற்றும் இந் நிறுவனம் தற்பொழுது 44,000KW இற்கும் மேற்பட்ட கொள்ளளவைக் கொண்ட பாதுகாப்புச் சேவைகளை வழங்கியுள்ளது. இலங்கை மற்றும் மாலைத்தீவு நாடுகளின் அங்கீகாரம் பெற்ற ChemiTek விநியோஸ்தரான இந்நிறுவனம் இலங்கை, இந்தியா மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளின் SolarCleano அங்கீகாரம் பெற்ற ஏக முகவராகவும் திகழ்கின்றது. நம்பகரமான, பாதுகாப்பான மற்றும் நிலைப்பேறான வலுசக்தி தீர்வுகளின் ஊடாக பிராந்தியத்தின் வலுசக்தியை உறுதிப்படுத்துவது இந் நிறுவனத்தின் பிரதான நோக்கமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close