September 27, 2026
ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் நிறுவனத்தின் பதில் பிரதம நிறைவேற்று அதிகாரியாக ஆசிரி விக்கிரமாராச்சி நியமனம்
செய்தி

ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் நிறுவனத்தின் பதில் பிரதம நிறைவேற்று அதிகாரியாக ஆசிரி விக்கிரமாராச்சி நியமனம்

Sep 27, 2026

இலங்கையின் முன்னணி பொது காப்புறுதி நிறுவனமும் தேசிய காப்புறுதிதாரருமான நிறுவனமுமான ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல்  லிமிடெட் நிறுவனத்தின் (SLIC General)பதில் பிரதம நிறைவேற்று அதிகாரியாக FCII (UK), Chartered Insurer தகைமையைக் கொண்ட திரு. ஆசிரி விக்கிரமாராச்சி அவர்கள், 2026 செப்டெம்பர் 21ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

திரு. விக்ரமராச்சி அவர்கள் முன்னணி உள்நாட்டு மற்றும் சர்வதேச காப்புறுதி நிறுவனங்களில் 19 ஆண்டுகளுக்கும் மேலாகக் கடமையாற்றி காப்புறுதித்துறை தொடர்பில் சிறந்த அனுபவத்தைக் கொண்டுள்ளார். காப்புறுதிப் பொறுப்பேற்பு, காப்புறுதி கோரல்கள், மறுகாப்புறுதி மற்றும் தொழில்நுட்ப செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவருக்கு விரிவான அனுபவம் உள்ளது. பதில் பிரதம நிறைவேற்று அதிகாரியாக நியமனம் பெறுவதற்கு முன்னர் அவர், ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் நிறுவனத்தில் பொது காப்புறுதிப் பிரிவின் பிரதம அதிகாரியாக பணியாற்றி, நிறுவனத்தின் முக்கிய தொழில்நுட்பப் பணிகளை மேற்பார்வை செய்தார்.

காப்புறுதித்துறையில் வழங்கப்படும் உயர்ந்த தொழிசார் தகைமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஐக்கிய இராச்சியத்தின் பட்டய காப்புறுதி நிறுவனத்தின் (CII) நிறுவனத்தின் Fellowship (FCII) தகைமையை இவர் பெற்றுள்ளார். 2011ஆம் ஆண்டில் ACII மற்றும் பட்டய காப்புறுதிதாரர் தகைமைகளைப் பெற்றதன் மூலம், இந்தத் தகைமையைப் பெற்ற இளம் இலங்கையர்களில் ஒருவராக அவர் திகழ்ந்தார். அத்துடன், 2012ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற காப்புறுதி மாநாட்டு நிகழ்வில், 2011ஆம் ஆண்டில் ACII தகைமை பெற்றவர்களில் சிறந்த பெறுபேற்றைப் பெற்றவருக்கு வழங்கப்படும் மிகச் சிறந்த மாணவர் விருதையும் அவர் பெற்றார்.

இந்த நியமனம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷனின் தலைவர் திரு. நுசித் குமாரதுங்க, “ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் நிறுவனத்தின் பதில் பிரதம நிறைவேற்று அதிகாரியாக திரு. ஆசிரி விக்கிரமாராச்சியை நியமிப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். அவரது தொழில்நுட்ப அறிவு, காப்புறுதித் துறையில் பெற்றுள்ள அனுபவம் மற்றும் எமது நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பான ஆழமான புரிதல் ஆகியவை, இந்த முக்கியமான கட்டத்தில் நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அவருக்கு வலுசேர்க்கின்றன. பொது காப்புறுதிப் பிரிவின் பிரதம அதிகாரியாக அவர் பணியாற்றியுள்ள நிலையில், ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் நிறுவனத்தை எதிர்காலத்தை நோக்கி முன்னெடுத்துச் செல்லும் எமது தலைமைத்துவத்திற்கு அவர் பெறுமதியான தொடர்ச்சியை வழங்குவார்” எனக் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் நிறுவனம் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட கலாசாரத்தை மேலும் வலுப்படுத்தும் பயணத்தைத் தொடரும் நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் அனுபவம், சேவைச் சிறப்பு, புத்தாக்கம் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றுக்கு மேலும் வலுவான முக்கியத்துவம் வழங்குவதில் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.

ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் நிறுவனம் இலங்கையின் முதன்மையான பொது காப்புறுதி நிறுவனமாகவும், நாட்டின் பெறுமதிமிக்க பொது காப்புறுதி வர்த்தகநாமமாகவும், 2026ஆம் ஆண்டில் மிகவும் நேசிக்கப்படும் முதன்மையான பொது காப்புறுதி வர்த்தகநாமமாகவும், அத்துடன் Fitch A+ தரப்படுத்தலைப் பெற்ற இலங்கையின் உயர்ந்த Fitch தரப்படுத்தப்பட்ட பொது காப்புறுதி நிறுவனமாகவும் திகழ்கிறது.

ஆறு தசாப்தங்களுக்கும் மேலான பாரம்பரியத்தைக் கொண்ட ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் நிறுவனம், மோட்டார், சொத்து, கடல்சார், மருத்துவம், தனிநபர் விபத்து, பயணம் உள்ளிட்ட பல்வேறு பொது காப்புறுதி தீர்வுகள் மூலம் தனிநபர்கள், குடும்பங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தேசிய நலன்களுக்கு விரிவான பாதுகாப்பை வழங்கி வருகிறது. நாடு முழுவதும் பரந்த வலையமைப்பின் ஊடாக இந்தச் சேவைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் – விரிவான பாதுகாப்பிற்கான நம்பகமான தெரிவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close