May 1, 2024
சஞ்சீவனி ஆயுர்வேத நிறுவனத்துக்கு Pinnacle Sri Lanka விருது
செய்தி

சஞ்சீவனி ஆயுர்வேத நிறுவனத்துக்கு Pinnacle Sri Lanka விருது

Mar 25, 2024

ஆயுர்வேத ஓளடத உற்பத்தித் துறையில் முன்னோடியாக திகழும் சஞ்சீவனி ஆயுர்வேத நிறுவனம், Pinnacle Sri Lanka 2023 விருது விழாவில் ஆண்டின் சிறந்த வாஜிகரண இராசாயன ஓளடத உற்பத்தியாளருக்கான விருதை வென்றுள்ளது. MUGP சர்வதேச அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி விருது விழா அண்மையில் கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்றதோடு அதன் போது நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி திரு எச்.எம்.டீ.எஸ் சந்தகெலும் தமக்கான விருதை பெற்றுக்கொண்டார்.

ஹெலஉடகந்த பாரம்பரிய மருத்துவ பரம்பரையிலிருந்து வரும் மருத்துவ அறிவை மேம்படுத்தி ஹெலஉட மனின்னலாகே அந்திரிஸ் அவர்கள் மருத்துவச்சியான தமது மனைவியுடன் சேர்ந்து ஹெலகந்த ஹெல வெத கெதர ஔடத உற்பத்தி நிலையத்தை தொடங்கியதன் மூலம் சஞ்சீவனி பாரம்பரிய மருத்துவ நாமத்துக்கு அடித்தளமிடப்பட்டது. 1960 ஆம் ஆண்டு ஹெலஉட மனின்னலாகே சுவனேரிஸ் அவர்கள் சஞ்சீவனி ஆயுர்வேத வர்த்தகநாமத்தை தொடங்கினார். ஆயுர்வேத திணைக்களத்தில் 5150 ஆம் பதிவு இலக்கத்தின் கீழ் சிறப்பு விஷ மருத்துவராக தன்னை பதிவு செய்துகொண்ட அவர் 12492 பதிவு  இலக்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சர்வாங்க ஆயுர்வேத மருத்துவராக உடைவு, முறிவு, பாம்பு விஷம் உள்ளிட்ட சர்வாங்க மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டார். அதை தொடர்ந்து சஞ்சீவனி ஆயுர்வேத நிறுவனத்தின் உரிமையாளரான ஹெலஉட மனின்னலாகே ஞானரத்ன அவர்கள் தமது உற்பத்தியகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஓளடதங்களை நாடெங்கிலும் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்தார்.1992 ஆம் ஆண்டில் மேற்படி உற்பத்தியகம் ஆயுர்வேத திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. மேற்படி பரம்பரையின் நான்காவது தலைமுறையை பிரதிநிதித்துவப்படுத்தும் பொறியியலாளரான நிறுவனத்தின் தற்போதைய உரிமையாளர் திரு ஹெலஉட மனின்னலாகே துலாஞ்சன் சமீர சந்தகெலும் சஞ்சீவனி வர்த்தகநாமத்தை சர்வதேசத்துக்கு கொண்டு சென்றுள்ளார். ஆரோக்கியமான உடல், உள வாழ்க்கை முறைக்கு வழிகாட்டும் சஞ்சீவனி ஸ்ரீ மத் மதன மோதக்கய, நீண்ட நேரத்துக்கு உறவு கொள்ளும் வகையிலான பாலியல் சக்தி, இன்பம் மற்றும் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் காமேஸ்வரி இராசாயனய, ஆண்குறி சுருங்குவதை தடுத்து பாலியல் ஆற்றலை மேம்படுத்தி செக்ஸ் சுகாதாரத்தை பாதுகாக்கின்ற அஸ்வகந்த எண்ணெய் போன்றவை இந் நிறுவனத்தின் உற்பத்திகளில் முதன்மையானவை ஆகும். மேலும், அரிஷ்ட, ஆசவ, கல்க, சூர்ண, மோதக்க, குவாத்த வகைகளும் பல்வேறு எண்ணெய் வகைளும் அவற்றில் அடங்கும். சஞ்சீவனி ஆயுர்வேத விற்பனை நிலையம் M23 வன் கோல்பேஸ் வளாகத்தில் அமைந்துள்ளது. www.sanjeewanieayurveda.com இணையதளத்தின் ஊடாகவும் மேற்படி உற்பத்திகளை கொள்வனவு செய்ய முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *