Vision AI தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய Samsung Mini LED தொலைக்காட்சி வரிசை இலங்கையில் அறிமுகம்
இலங்கை நுகர்வோரின் வீட்டுப் பொழுதுபோக்கிற்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்க்கும் வகையில், அதிநவீன திரைத் தொழில்நுட்பம், Vision AI அம்சங்கள், வியக்க வைக்கும் ஒலி அனுபவம் மற்றும் அதிநவீன கேமிங் வசதிகளைக் கொண்ட தனது புதிய Mini LED தொலைக்காட்சி தயாரிப்பு வரிசையை Samsung ஸ்ரீலங்கா நிறுவனம் அண்மையில் உத்தியோகபூர்வமாக இலங்க சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
Samsung இன் சிறந்த படத் தரம், ஒலி கட்டுப்பாடு மற்றும் நவீன வீடுகளுக்கு ஏற்ற பிரம்மாண்ட திரை அளவுகளுடன் கூடிய ஸ்மார்ட் இணைப்பு வசதிகளுடன் அறிமுகமாகும் இந்த Mini LED தொலைக்காட்சி தயாரிப்பு வரிசையானது, நுகர்வோருக்கு அன்றாட பொழுதுபோக்கில் ஒரு புதிய அனுபவத்தை எளிதாக வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த புதிய தொலைக்காட்சி மாதிரிகள் முக்கியமாக இரண்டு பெரிய திரை அளவுகளில் கிடைக்கின்றன. Mini LED மற்றும் Vision AI தொழில்நுட்பங்களைக் கொண்ட 75 அங்குல UA75M70HARXSG மாதிரியானது ரூ. 649,999 எனும் விலையிலும், 85 அங்குல திரையைக் கொண்ட UA85M70HARXSG மாதிரியானது ரூ. 839,999 எனும் விலையிலும் தற்போது விற்பனை செய்யப்படுகின்றன. இதன் மூலம், வீட்டில் இருந்தபடியே ஒரு திரையரங்கு அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள நுகர்வோரால் முடியும்.
இந்தத் தொலைக்காட்சி தொடரின் மிகவும் சிறப்பு வாய்ந்த அம்சம் இதன் NQ4 AI Gen2 Processor ஆகும். தொலைக்காட்சி திரையின் காட்சிகளையும், ஒலி அமைப்பையும் தானாகவே பகுப்பாய்வு செய்து, பார்வையாளருக்கும் சுற்றியுள்ள சூழலுக்கும் ஏற்றவாறு உயர்தரத்தில் திரையில் காட்சிப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு. இதன் காரணமாக, பார்வையாளர்கள் தெளிவான மற்றும் சிறந்த தரமான காட்சிகளை அனுபவிக்க முடியும்.
Samsung இன் மேம்படுத்தப்பட்ட Mini LED தொழில்நுட்பமானது, வெளிச்சத்தை மிகத் துல்லியமாகக் கட்டுப்படுத்தி காட்சிகளின் மாறுபட்ட தன்மையை கணிசமாக உயர்த்துகிறது. இதில் உள்ள துல்லியமான Lighting Control அமைப்பின் காரணமாக, ஆழமான கருமை நிறத்தையும், மிக பிரகாசமான வெளிச்சத்தையும் அதன் இயல்பான தன்மையோடு பார்வையாளர்களால் அனுபவிக்க முடிகிறது. மேலும், இதிலுள்ள Pure Spectrum தொழில்நுட்பமானது, நிஜ உலகின் வண்ணங்களை உள்ளவாறே மிகவும் துடிப்பாக திரையில் பிரதிபலிக்கிறது.
பார்வையாளர்களின் காட்சி மற்றும் ஒலி அனுபவத்தை தானாகவே உயர்த்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள AI-இயக்கப்படும் அம்சங்கள் மூலம், குறைந்த தரத்தையுடைய காட்சிகளை உயர்தரத்திற்கு மாற்ற முடிவதுடன், பின்னணி இசை அல்லது சத்தங்கள் இருக்கும் போது கூட நிகழ்ச்சிகளின் உரையாடல்களைப் பார்வையாளர்களுக்கு மிகவும் தெளிவாக வழங்க முடிகிறது.
வேகமான இயக்கம் மற்றும் வசதியான கேமிங் அனுபவத்தை எதிர்பார்க்கும் நுகர்வோருக்காக, Variable Refresh Rate (VRR) மற்றும் Auto Low Latency Mode (ALLM) உள்ளிட்ட பல அதிநவீன தொழில்நுட்பங்கள் இந்த Samsung Mini LED தொலைக்காட்சிகளில் சேர்க்கப்பட்டுள்ளன.
உயர்தர காட்சித் தரம் மற்றும் சிறந்த செயல்திறன் தவிர, இந்த புதிய Mini LED தொலைக்காட்சி வரிசையானது மிகவும் மெலிதான மற்றும் கவர்ச்சிகரமான வடிவமைப்பைக் கொண்டுள்ளதால், வரவேற்பறைக்கு அழகிய தோற்றத்தை வழங்குகிறது.
Dolby Vision மற்றும் Dolby Atmos அம்சங்கள் இந்த தயாரிப்பு வரிசையின் மற்றொரு முக்கிய சிறப்பம்சமாகும். திரைப்பட திரையரங்கு போன்ற தெளிவான, கவர்ச்சிகரமான காட்சிகள் மற்றும் ஒலியமைப்பின் மூலம் பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்க இந்த அம்சங்கள் உதவுகின்றன.
இந்த அறிமுகம் குறித்து Samsung ஸ்ரீலங்கா மற்றும் மாலைதீவுகளுக்கான Samsung நுகர்வோர் இலத்திரனியல் பிரிவின் பணிப்பாளரும் தலைவருமான சப்ரி அன்சார் கருத்துத் தெரிவிக்கையில், “Samsung நிறுவனமாக நாங்கள் எப்போதும் உலகத்தரம் வாய்ந்த உயர்தர தொழில்நுட்ப விநியோகங்களை இலங்கை நுகர்வோருக்கு அறிமுகப்படுத்த பாடுபடுகிறோம். எங்களது புதிய Mini LED தொலைக்காட்சி வரிசையானது, சிறந்த காட்சித் தரம், செயற்கை நுண்ணறிவு அம்சங்கள், சிறப்பான ஒலி அமைப்பு மற்றும் கேமிங் வசதிகள் மூலம் நுகர்வோரின் பொழுதுபோக்கு அனுபவத்தை உச்சகட்டத்திற்கு கொண்டு செல்லும் என நம்புகிறோம். நுகர்வோரின் வாழ்வியல் முறைகள் தொடர்ந்து மாறிவரும் சூழலில், மக்கள் தொலைக்காட்சியைப் பார்க்கும், கேமிங் செய்யும் மற்றும் வாழும் முறையை முற்றிலும் மாற்றியமைக்கும் தனித்துவமான ஸ்மார்ட் அனுபவங்களை உருவாக்க நாங்கள் எப்போதும் உழைக்கிறோம்,” எனக் குறிப்பிட்டார்.
சர்வதேச தரம் வாய்ந்த உயர்தர தயாரிப்புகளையும் தொழில்நுட்பத்தையும் இலங்கை நுகர்வோருக்கு கொண்டு சேர்ப்பதில் Samsung இன் அர்ப்பணிப்பை இந்த புதிய தொலைக்காட்சித் தொடர் தெளிவாக வெளிப்படுத்துகிறது. இது அதிநவீன திரைத் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவால் இயங்கும் தனிப்பயனாக்கம் மற்றும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட ஸ்மார்ட் வாழ்க்கை முறையை ஒன்றிணைத்து வீட்டுத் தொழில்நுட்பங்களை மேலும் மேம்படுத்துகிறது.
நாடளாவிய ரீதியில் உள்ள Samsung இன் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடமிருந்தும், Singer Sri Lanka, Singhagiri மற்றும் Damro விற்பனையகங்களிலிருந்தும் இந்த புதிய தொலைக்காட்சித் தொடரை நுகர்வோர் கொள்வனவு செய்ய முடியும். தேர்வு செய்யப்பட்ட காட்சியறைகளில் சிறப்புச் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளைப் பெற முடிவதுடன், வாடிக்கையாளர்களின் செலுத்தும் திறனுக்கு ஏற்ப இலகு தவணை செலுத்தும் முறைகளிலும் இந்த Mini LED தொலைக்காட்சியை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். இச்சலுகைகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் விதிகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டவை.

