Interbrand இன் உலகின் சிறந்த வர்த்தக நாமங்கள் பட்டியலில் 5ஆவது இடத்தைப் பிடித்துSamsung சாதனை
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத் துறையில் மேற்கொண்ட தொடர்ச்சியான முதலீடுகள் மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகளின் காரணமாக, Interbrand நிறுவனத்தின் 2026ஆம் ஆண்டுக்கான ‘சிறந்த உலகளாவிய வர்த்தக நாமங்கள்’ Best Global Brands) தரவரிசையில் Samsung Electronics நிறுவனம் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக 5ஆவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
இதன்படி, Samsung இன் தற்போதைய வர்த்தக நாம மதிப்பு 105.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், 2020ஆம் ஆண்டு முதல் உலகின் முன்னணி 5 வர்த்தக நாமங்களின் பட்டியலில் தனது இடத்தை எவ்வித மாற்றமுமின்றித் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்ட ஒரே ஆசிய நிறுவனம் என்ற தனித்துவமான பெருமையையும் Samsung தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இந்த அங்கீகாரம், செயற்கை நுண்ணறிவு துறையில் Samsung மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முதலீடுகளுக்கும் அடைந்து வரும் அபரிமிதமான வளர்ச்சிக்கும் கிடைத்த சான்றாக அமைந்துள்ளது. குறிப்பாக, AI குறைக்கடத்திகளின் (AI semiconductors) மேம்பாடு மற்றும் தனது தயாரிப்புகள் அனைத்திலும் AI அனுபவங்களை திறம்பட ஒருங்கிணைத்தமை ஆகியவை இந்த உயரிய அங்கீகாரத்திற்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன.
அத்துடன், ‘ஒரே சாம்சங்’ (One Samsung) என்ற விரிவான அணுகுமுறையின் கீழ், வாடிக்கையாளர்களின் தேவைகளை முதன்மையாகக் கொண்டு, தனது பல்வேறுபட்ட தயாரிப்புகளையும் சேவைகளையும் தடையின்றி இணைக்கும் Samsung இன் திறமையான வர்த்தக நாம உத்தியையும் இன்டர்பிராண்ட் தனது மதிப்பீட்டில் வெகுவாகப் பாராட்டியுள்ளது.
இந்த மைல்கல் சாதனை குறித்து Samsung ஸ்ரீலங்கா மற்றும் மாலைத்தீவுகளின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. டோங்கயூன் லீ கருத்து தெரிவிக்கையில், “தொடர்ந்து ஏழாவது ஆண்டாக உலகின் முதல் ஐந்து வர்த்தக நாமங்களில் ஒன்றாகத் திகழ்வது, Samsung நிறுவனத்தின் தொடர்ச்சியான புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கும் வாடிக்கையாளர் அனுபவங்களுக்கும் கிடைத்த ஒரு முக்கிய அங்கீகாரமாகும். AI, இணைக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்பு மேம்பாடு ஆகியவற்றில் நாம் செய்யும் முதலீடுகள், மக்களின் அன்றாட வாழ்க்கையில் தொழில்நுட்பத்தை மேலும் பயனுள்ளதாக மாற்றுவதற்கான எமது அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றன. இலங்கையிலுள்ள எமது வாடிக்கையாளர்களுக்கு இத்தகைய அனுபவங்களை நாங்கள் தொடர்ந்து வழங்கி வரும் நிலையில், அவர்களின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப தயாரிப்புகளையும் சேவைகளையும் உருவாக்குவதன் முக்கியத்துவத்தை இந்த அங்கீகாரம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.” எனக் குறிப்பிட்டார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கான தேவை உலகளவில் அதிகரித்து வரும் சூழலில், அதற்குத் தேவையான உயர்மதிப்பு Memory chips-களை தடையின்றி விநியோகித்து, குறைக்கடத்தி (Semiconductor) துறையில் Samsung இன் தீர்வுகள் (Device Solutions – DS) பிரிவு தனது சந்தை ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. மேலும், தொழில் நுட்பத்துறையிலேயே முதன்முறையாக HBM4 ரக Memory தயாரிப்புகளைப் பெருமளவில் உற்பத்தி செய்து, அவற்றை வெற்றிகரமாக சந்தைப்படுத்தியதன் மூலம் Samsung நிறுவனம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தொழில்நுட்ப மைல்கல்லை எட்டியுள்ளது.
மறுபுறம், Samsung இன் DX (Device experience) பிரிவானது ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள், தொலைக்காட்சிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் எனப் பரந்த அளவிலான சாதனங்களில் செயற்கை நுண்ணறிவு அம்சங்களையும், தடையற்ற இணைப்பு அனுபவங்களையும் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சமீபத்திய கண்டுபிடிப்பான Galaxy Z Fold8, அதன் புதிய வடிவமைப்பு மற்றும் 4:3 திரை அமைப்பின் மூலம் மடிக்கக்கூடிய (Foldable) ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளின் எல்லைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.
நிறுவனங்களின் நிதிச் செயல்பாடு, வாடிக்கையாளர்களின் கொள்முதல் தீர்மானங்களில் வர்த்தக நாமத்தின் செல்வாக்கு மற்றும் அதன் ஒட்டுமொத்த போட்டித்திறன் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டே இன்டர்பிராண்ட் நிறுவனம் இந்த வருடாந்த உலகளாவிய வர்த்தக நாமங்களை மதிப்பீடு செய்கிறது. மேலும், நிறுவனத்தின் வர்த்தக நாம உத்தி, வாடிக்கையாளர் புரிதல், தனித்துவமான அடையாளம், வாடிக்கையாளர் ஈடுபாடு, நிலைத்தன்மை மற்றும் நம்பிக்கை உள்ளிட்ட பல்வேறு முக்கிய காரணிகளையும் அடிப்படையாகக் கொண்டே இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்படுகிறது.

