June 18, 2025
ரோயல் நர்சிங் ஹோம் தனியார் நிறுவனத்தின் ஐந்தாவது சொகுசு முதியோர் பராமரிப்பு இல்லம் 100 அறைகளுடன் ஹங்வெல்ல நகரில் திறக்கப்படவுள்ளது
செய்தி

ரோயல் நர்சிங் ஹோம் தனியார் நிறுவனத்தின் ஐந்தாவது சொகுசு முதியோர் பராமரிப்பு இல்லம் 100 அறைகளுடன் ஹங்வெல்ல நகரில் திறக்கப்படவுள்ளது

Nov 28, 2024

இலங்கையில் முதலாவதும் தனித்துவமானதுமான, தாதியர்களை கொண்ட  03 சொகுசு முதியோர் பராமரிப்பு இல்லங்கள் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் லண்டன் நகர் 4/4A Bloomsbury Square, London WC1A 2RP எனும் விலாசத்தில் அமைந்துள்ள சொகுசு முதியோர் பராமரிப்பு இல்லம் என மொத்தமாக 04 சொகுசு முதியோர் பராமரிப்பு இல்லங்களை கொண்டுள்ள ரோயல் நர்சிங் ஹோம் தனியார் நிறுவனத்தின் ஐந்தாவது சொகுசு முதியோர் பராமரிப்பு இல்லம் ஹங்வெல்ல நகரில் திறக்கப்படவுள்ளது. குளு குளு காற்று வீசும் களனி ஆற்றங்கரையோரமாக பசுமைச் சூழலைக் கொண்ட இரண்டு ஏக்கர் காணியில் அமைந்துள்ள 100 அறைகளை கொண்ட மேற்படி முதியோர் பராமரிப்பு இல்ல கட்டடம்  இதற்கு முன்னர் சுற்றுலா விடுதியாக காணப்பட்டுள்ளது. மேற்படி சுற்றுலா விடுதியை முதியோர் பராமரிப்பு வழிகாட்டுதல்களுக்கமைய  ISO 9001-2015 சர்வதேச தர நியமங்களின் பிரகாரம் புனரமைக்கப்பட்டு 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதியன்று திறக்கப்படவுள்ளது.

2007 ஆம் ஆண்டில் சர்வதேச தர முதியோர் பராமரிப்புத் துறையை முதல் தடவையாக இலங்கைக்கு அறிமுகப்படுத்திய மற்றும் மருத்துவர்கள், தாதி உத்தியோகத்தர்கள், தாதியர்கள் உள்ளிட்ட 1200 இற்கும் மேற்பட்ட பணியாட்டொகுதியை கொண்ட ரோயல் நர்சிங் ஹோம் நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவர் திரு மனுஜ ஹேவாவசம் முதியோர் பராமரிப்புத் துறையில் 25 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவத்தை கொண்டதொரு தொழில் வல்லுநராவார். இவர் இந்தியாவின் கான்பூர் சத்திரபதி ஷாகுஜி மஹாராஜ் பல்கலைக்கழகத்தில் வர்த்தக முகாமைத்துவம் தொடர்பான MBA பட்டத்தையும், சிங்கப்பூர் நாட்டின் பார்க்வே கல்லூரியில் சுகாதாரப் பாதுகாப்பு முகாமைத்துவம் தொடர்பான டிப்ளோமாவையும் இலங்கை தகவல் தொழில்நுட்ப பீடத்தின் டிப்ளோமாவையும் பெற்றுள்ளார். மேற்படி பரந்துபட்ட கல்வி பின்னணி வர்த்தகத் துறையிலும் சுகாதாரத் துறையிலும் வல்லுநராவதற்கு திரு ஹேவாவசத்துக்கு உறுதுணையாக இருந்துள்ளது. இவரின் தலைமையின் கீழ் ஆரம்பிக்கப்படவுள்ள ஹங்வெல்ல முதியோர் பராமரிப்பு இல்லம் நாட்டின் நிலவும் பொருளாதார நிலைமைகளுக்கேற்ப சிரேஷ்ட பிரஜைகளால் சமாளிக்கக்கூடிய வகையிலான நியாயமான கட்டணத்தில் சேவைகளை வழங்கவுள்ளது. அழகிய ரம்மியமான சூழலில் வாழ்க்கையின் முதுமைக் காலத்தை கழிப்பதற்கு விரும்பும் சிரேஷ்ட பிரஜைகளுக்கு மேற்படி ஹங்வெல்ல முதியோர் பராமரிப்பு இல்லம் மிகவும் பொருத்தமானதொரு இடமாக இருக்குமென திரு ஹேவாவசம் தெரிவித்தார்.

43 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close