August 18, 2026
தெற்காசியாவின் மிகப்பெரிய முதியோர் பராமரிப்பு நிறுவனத்தின் புதிய அத்தியாயம் ஆரம்பம்
செய்தி

தெற்காசியாவின் மிகப்பெரிய முதியோர் பராமரிப்பு நிறுவனத்தின் புதிய அத்தியாயம் ஆரம்பம்

Aug 17, 2026

தெற்காசியாவின் முதியோர் பராமரிப்புத் துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் ரோயல் நர்சிங் ஹோம் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் புதிய தலைமையகம், இலக்கம் 82, பார்ன்ஸ் பிளேஸ், கொழும்பு 07 என்ற முகவரியில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்தியாவின் போர்டியா மெடிக்கல் நிறுவனத்தை விஞ்சி, 1,600க்கும் மேற்பட்ட நிரந்தர சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்களைப் பணியமர்த்தியுள்ள ரோயல் நர்சிங் ஹோம் நிறுவனம், கல்கிசை, மஹரகம, பன்னிப்பிட்டிய, கடுவலை, மாலபே, ஹங்வெல்ல, அத்துருகிரிய மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் லண்டன் ஆகிய இடங்களில் எட்டு பராமரிப்பு இல்லங்களை உள்ளடக்கிய விரிவான சேவை வலையமைப்பை நடத்தி வருகிறது.

ரோயல் நர்சிங் ஹோம் நிறுவனம் இலங்கையின் தனியார் துறைக்குச் சொந்தமான மிகப்பெரிய நோயாளர் காவுவண்டிச் சேவை வலையமைப்பையும் நிர்வகித்து வருகிறது. இந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தின் மூலம், தெற்காசியாவின் மிகப்பெரிய முதியோர் பராமரிப்புச் சேவை நிறுவனமாக அது தன்னை நிலைநிறுத்தியுள்ளது.

தலைவர் மனுஜ ஹேவாவசம் அவர்களின் தலைமையில், 25 தாதியர் குழுவுடன் 2007ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ரோயல் நர்சிங் ஹோம் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம், கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு அண்மையான காலப்பகுதியில் இலங்கையின் முதியோர் மற்றும் நோயாளர் பராமரிப்புத் துறைகளின் மேம்பாட்டிற்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது.

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ISO 9001:2015 தர முகாமைத்துவ முறைமைச் சான்றிதழைப் பெற்ற இலங்கையின் முதலாவது மற்றும் ஒரே முதியோர் பராமரிப்புச் சேவை நிறுவனமாகவும் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குபடுத்தல் சபையின் அங்கீகாரத்தையும் இந்நிறுவனம் பெற்றுள்ளது.

கொழும்பு 07இல் அமைக்கப்பட்டுள்ள புதிய தலைமையகத்தின் திறப்பு விழா, நிறுவனத்தின் 19 ஆண்டுகால தொடர்ச்சியான சேவைப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. அத்துடன், தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் ரோயல் நர்சிங் ஹோம் நிறுவனத்தின் முதியோர் பராமரிப்புச் சேவைகளைத் தொடர்ந்து விரிவுபடுத்தும் புதிய அத்தியாயத்தின் ஆரம்பத்தையும் இது குறிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close