July 27, 2024
சிறந்த கைத்தொழிலுக்கான தங்க பதக்க விருதை வென்றுள்ள Nisudha Food Products நிறுவனம்
செய்தி

சிறந்த கைத்தொழிலுக்கான தங்க பதக்க விருதை வென்றுள்ள Nisudha Food Products நிறுவனம்

Jan 4, 2024

நாட்டின் முன்னணி உணவுப் பொருள் உற்பத்தி நிறுவனமான Nisudha Food Products தனியார் நிறுவனம், கை்தொழில் அபிவிருத்தி சபை ஏற்பாடு செய்த தேசிய உயர் கைத்தொழில் – 2023 விருது விழாவில் மத்திய அளவிலான பிரிவின் தெங்கு சார்ந்த கைத்தொழிலுக்கான தங்கப் பதக்க விருதை வென்றுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் கொழும்பு தாமரை தடாகம் மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் நடைபெற்ற மேற்படி விருது விழாவில் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு சுதேஷ் குலசிங்க தமக்கான விருதை பெற்றுக்கொண்டார். குருணாகல் மாஎலிய எனும் பிரதேசத்தில் அமைந்துள்ள Nisudha Food Products தனியார் நிறுவனம் 20 ஆண்டுகளுக்கு மேலாக உயர் தரத்திலான உணவு உற்பத்திகளை மேற்கொண்டு வருகின்றது. அவற்றின் பெரும்பாலான உணவுகள் தெங்கு சார்ந்த உற்பத்திகளாக இருப்பதோடு அவற்றை சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் நிறுவனம் நாட்டின் பொருளாதாரத்தை வலுவூட்டுவதற்கு பெரிதும் பங்காற்றி வருகின்றது. Virgin coconut Oil, தேங்காய் எண்ணெய், வெள்ளை தேங்காய் எண்ணெய், இளநீர், Coconut Chips, Coconut Sugar, Coconut Jam, Coconut Flour, வாசனைத் திரவியங்கள் மற்றும் கறுவா உற்பத்திகள் மேற்படி உற்பத்திகளில் அடங்கும். ஏராளமானோருக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கியள்ள Nisudha Food Products தனியார் நிறுவனம் தமது உற்பத்திகளுக்கு தேவையான தேங்காய்களை உள்நாட்டிலேயே முழுமையாக பெற்றுக்கொள்கின்றது. மேற்படி நிறுவனம் சர்வதேச ரீதியில் பெரும் கிராக்கி உள்ள Virgin coconut Oil உற்பத்திக்கு கூடுதல் கவனம்  செலுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு, வெளிநாட்டு விருதுகள் பலவற்றை வென்றுள்ள Nisudha Food Products நிறுவனம் FSSC 22000, ISO 22000:2018 மற்றும் EU ORGANIC, USDA ORGANIC, KOREAN ORGANIC போன்ற இயற்கை பசுமை சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு தரச் சான்றிதழ்களையும் வென்றுள்ளது. “ஆரோக்கியமானதும் தரமானதுமான உணவு வகைகளை உற்பத்தி செய்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடிந்துள்ளமையிட்டு நாம் பெரிதும் பெருமை அடைகின்றோம். எமது அத்தனை உற்பத்திகளும் ஆரோக்கியமான தலைமுறையொன்றை உருவாக்குவதற்கு உறுதுணையாக விளங்குகின்றன. அர்ப்பணிப்புடன் உழைத்து வரும் எமது நிறுவனத்தின் பணியாளர்களுக்கும், எமது நுகர்வோர்களுக்கும் நன்றி தெரிவிக்கின்றோம். அவர்களே இந்த வெற்றிப் பயணத்தின் பின்னாலுள்ள பிரதான சக்தி ஆகும்.” என நிறுவனத்தின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த சுதேஷ் குலசிங்க தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *