July 23, 2025
நிம்னா & இசுரு: TikTok மூலம் இலங்கையர்களை மகிழ்விக்கும் தம்பதியர்
செய்தி

நிம்னா & இசுரு: TikTok மூலம் இலங்கையர்களை மகிழ்விக்கும் தம்பதியர்

Jul 18, 2025

‘வாழ், காதலி, சிரி’ என்ற கோட்பாட்டை உண்மையாக கடைபிடிப்பவர்கள் மிகக் குறைவு. அப்படி இருப்பவர்களும் அதை தனிப்பட்ட வாழ்வில் மட்டுமே வைத்திருப்பர். ஆனால் நிம்னா மற்றும் இசுரு (@nimnastiktok)) என்ற TikTok ஜோடி, தங்களது அன்றாட வாழ்வின் தனித்துவங்களையும், அவர்களிடையே உள்ள இயல்பான புரிதலையும் ஆயிரக்கணக்கான இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியாக பகிர்ந்து வருகின்றனர். சிலர் அவர்களை வேடிக்கையான, வேகமான காணொளிகளுக்காக அறிவர். மற்றவர்கள் தம்பதி உள்ளடக்கத்தில் விளம்பரங்களை எளிதாக இணைக்கும் திறனுக்காக அறிவர். ஆனால் அவர்களை அறிந்த எவரும் சொல்வர் – அந்த குரல்தான் சிறப்பு. அந்த தனித்துவமான கீச்சுக் குரல், வேகமாக்கப்பட்ட தொனி, இப்போது அவர்களின் அடையாளமாக மாறிவிட்டது. நிம்னா மற்றும் இசுருவை அறிந்திருந்தால், அவர்களின் முகங்களைக் காணும்போதே அந்த குரலை தங்கள் மனதில் கேட்க முடியும்.

நிம்னா கண்டியைச் சேர்ந்த பேராதனை பல்கலைக்கழக பட்டதாரி. இசுரு குருநாகலைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர். இருவரும் பாரம்பரியமான பாதையில் நிலையான வேலைகளுடன் இருந்தனர். ஆனால் படைப்பாற்றல் மிக்கவர்கள். கொரோனா பெருந்தொற்று காலத்தில் வெறும் ஆர்வத்தினாலும், சிறிது சலிப்பினாலும் TikTok இல் வீடியோக்களை பதிவு செய்யத் தொடங்கினர். அவர்களின் ஆரம்பகால வீடியோக்கள் சாதாரண தம்பதி தருணங்களைக் காட்டின. வேடிக்கையான விவாதங்கள், கிண்டல்கள், விளையாட்டான உரையாடல்கள். இவை திரைக்கதை இல்லாமலேயே உண்மை வாழ்க்கையைப் பிரதிபலித்ததால் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. ஆனால் அவர்களை உண்மையில் பிரபலமாக்கிய காரணம் முற்றிலும் எதிர்பாராதது.

ஒரு நாள் மிக நீளமான வீடியோவை TikTok இன் கால வரம்பிற்குள் கொண்டு வர, அதை குறைக்காமல் வேகப்படுத்த முடிவு செய்தனர். இந்த தற்செயலான முடிவின் விளைவாக உருவான கீச்சுக் குரல் எதிர்பாராத வகையில் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த குரல் வீடியோக்களுக்கு நகைச்சுவை சேர்த்து, விரைவில் அவர்களின் அடையாளமாக மாறியது. காலப்போக்கில், இந்த உயர் குரல் வடிகட்டி அவர்களின் வர்த்தகநாமத்தின் தனித்துவமான அம்சமாக மாறி, உள்ளடக்கம் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியாக மாறும் சூழலில் அவர்களை வேறுபடுத்திக் காட்டியது. இப்போது அவர்களின் உண்மையான குரல்களைக் கேட்பது பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது.

அவர்களின் உள்ளடக்கம் வெறும் நகைச்சுவை அல்லது எடிட்டிங் திறமை மட்டுமல்ல, மாறாக அன்றாட தம்பதி வாழ்க்கையின் இயல்பான தருணங்களில் வேரூன்றியது. சிறு கருத்து வேறுபாடுகள், உள் நகைச்சுவைகள், வெவ்வேறு ஆளுமைகள். பார்வையாளர்கள் இந்த அன்றாட கணவன்-மனைவி தருணங்களுடன் தங்களை தொடர்புபடுத்திக் கொள்கின்றனர். விளையாட்டுத்தனமான உள்ளடக்கத்தை வழங்கினாலும், இருவரும் கார்ப்பரேட் துறையில் பணிபுரிந்த அனுபவத்தால் தொழில்முறையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கின்றனர். வர்த்தகநாமங்களுடன் இணைந்து பணிபுரியும்போது, பிரச்சாரம் குறித்த ஆய்வு செய்து, பார்வையாளர்களுக்கு மகிழ்வூட்டும் வகையில் வர்த்தகநாம செய்தியை படைப்பாற்றலுடன் இணைக்கின்றனர். பணம் சம்பாதிக்கும் உள்ளடக்கத்திலும், உண்மைத்தன்மையை பராமரிப்பதில் அவர்கள் சிறந்து விளங்குகின்றனர்.

அவர்களின் உள்ளடக்கம் வெறும் நகைச்சுவை அல்லது எடிட்டிங் திறமை மட்டுமல்ல, மாறாக அன்றாட தம்பதி வாழ்க்கையின் இயல்பான தருணங்களில் வேரூன்றியது. சிறு கருத்து வேறுபாடுகள், உள் நகைச்சுவைகள், வெவ்வேறு ஆளுமைகள். பார்வையாளர்கள் இந்த அன்றாட கணவன்-மனைவி தருணங்களுடன் தங்களை தொடர்புபடுத்திக் கொள்கின்றனர். விளையாட்டுத்தனமான உள்ளடக்கத்தை வழங்கினாலும், இருவரும் கார்ப்பரேட் துறையில் பணிபுரிந்த அனுபவத்தால் தொழில்முறையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கின்றனர். வர்த்தகநாமங்களுடன் இணைந்து பணிபுரியும்போது, பிரச்சாரம் குறித்து ஆய்வு செய்து, பார்வையாளர்களுக்கு மகிழ்வூட்டும் வகையில் வர்த்தகநாம செய்தியை படைப்பாற்றலுடன் இணைக்கின்றனர். பணம் சம்பாதிக்கும் உள்ளடக்கத்திலும் உண்மைத்தன்மையை பராமரிப்பதில் அவர்கள் சிறந்து விளங்குகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close