சித்திரை புத்தாண்டு விழாக்கள் பலவற்றுக்கு பூரண அனுசரணை வழங்கிய மெல்வா நிறுவனம்
இலங்கையின் முன்னணி உருக்கு கம்பி உற்பத்தியாளர்களான மெல்வா நிறுவனத்தின் அனுசரணையுடன் கடந்த சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாடெங்கிலும் பல்வேறு சித்திரை புத்தாண்டு விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. உள்நாட்டு பாரம்பரியத்தின் பிரகாரம் பண்டைய சம்பிரதாயங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி சித்திரை புத்தாண்டு விழாக்களில் கிராமிய விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அக்குரெஸ்ஸ, காலி, மித்தெனிய, பதுளை, மொனராகல, அம்பாறை, பொலனறுவை, தம்புத்தேகம, அனுராதபுரம், புத்தளம், இராஜாங்கனய, குருணாகல், கம்பகா, வீரகெட்டிய, தெனியாய, ஹப்புதளை, தம்பன, கொத்மலே, சிட்டிபுர, கெக்கிராவ, கொபெயிகனே, கேகாலை, தவலம மற்றும் மினுவாங்கொடை போன்ற பகுதிகளில் மேற்படி சித்திரை புத்தாண்டு விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
எப்பொழுதும் சுதேச அடையாளங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் மெல்வா நிறுவனம் இம்முறை சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இவ்வாறு பல்வேறு விழாக்களை ஏற்பாடு செய்தததன் நோக்கம் கிராமிய மற்றும் நகர மக்கள் மத்தியில் ஒற்றுமை மற்றும் ஐக்கியத்தை ஊக்குவிப்பதாகும். நீண்ட நெடிய காலமாக சிங்கள, தமிழ் கலாசாரங்களை மையப்படுத்தியதாக நடாத்தப்பட்டு வரும் கிராமீய விளையாட்டுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இவ் விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு, எதிர்கால சந்ததியினருக்கு எமது பண்டைய பாரம்பரியங்களை அறிமுகப்படுத்துவதும் இதன் ஒரு நோக்கமாகும். இலங்கையின் முதன்மையான உருக்கு கம்பி உற்பத்தியாளர்களான மெல்வா நிறுவனம் சமூக, கலாசார விழுமியங்களை ஊக்குவிப்பதற்கு தொடர்ந்தும் தமது பங்களிப்பினை வழங்கி வருகிறது. தமது நிறுவனம் சார் சமூக கடமையின் இன்னுமொரு அங்கமாக மேற்படி சித்திரை புத்தாண்டு விழாக்களுக்கு மெல்வா நிறுவனம் பூரண அனுசரணை வழங்கியுள்ளது. சிங்கள, தமிழ் புத்தாண்டு, வெசாக், தீபாவளி, தைப்பொங்கல், நத்தார், ரமழான் போன்ற சமய மற்றும் தேசிய பண்டிகைகளை முன்னிட்டும் மெல்வா நிறுவனம் இவ்வாறான நிகழ்ச்சிகளை நடாத்தி வருகிறது.