கட்டுக்குருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயத்தில் பல வெற்றிகளை குவித்துள்ள மெல்வா நிறுவனத்தின் வீரர்கள்
நாட்டின் முன்னணி உருக்குக் கம்பி உற்பத்தியாளரான மெல்வா நிறுவனத்தின் அனுசரணையை பெற்ற மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தய வீரர்களான குஷான் சமோத் மற்றும் ஜனீத் சமீர ஆகியோர் அண்மையில் நடைபெற்ற இரண்டு முன்னணி மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் பல வெற்றிகளை பெற்றுள்ளனர். இலங்கை ரேசிங் சாரதிகள் மற்றும் ஓட்டப் பந்தயச் சங்கத்தின் (SLARDAR) ஏற்பாட்டில் நடைபெற்ற கட்டுக்குருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயத்தில் குஷான் சமோத் 600 CC பிரிவில் முதலிடத்தையும் 1000 CC பிரிவில் இரண்டாமிடத்தையும் வென்றுள்ளார். மற்றைய வீரரான ஜனீத் சமீர அதே தொடரில் Tracker பிரிவில் முதலாமிடத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை ஒட்டோஸ்போர்ட் சாரதிகளின் சங்கம் ஏற்பாடு செய்த ரொதர்ஹேம் – கட்டுக்கருந்த டர்மேக் பந்தயத்தில் 1000 CC Grand Prix (22 Laps) பிரிவில் முதலாமிடத்தை தமது Honda CBR1000 வகை மோட்டார் சைக்கிளை ஓட்டிய குஷான் சமோத் வென்றுள்ளார். அதே பந்தயத்தில் தமது Honda CBR600 வகை மோட்டார் சைக்கிளில் பங்கெடுத்த ஜனீத் சமீர ஏராளமான சைக்கிள் ஓட்டப் பந்தய வீரர்களுடன் போட்டியிட்டு 04 ஆம் இடத்தை வென்றுள்ளார். கடந்த காலம் முழுவதும் நாட்டின் மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயத் துறையின் அபிவிருத்திக்கு மெல்வா நிறுவனம் பெரும் பங்காற்றியுள்ளது. அதன் கீழ், நீர்கொழும்பு பகுதியை பிறப்பிடமாக கொண்ட திறமையான மோட்டார் சைக்கிள் வீரர்களான குஷான் சமோத் மற்றும் ஜனீத் சமீரவுக்கு இரண்டு அதிவேக மோட்டார் சைக்கிள்களை மெல்வா நிறுவனம் அன்பளிப்புச் செய்துள்ளது. இதன் மூலம் நாட்டின் இளம் தலைமுறையினரிடையே மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயங்களை பிரபல்யப்படுத்துவதற்கும், அதன் ஊடாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்கக்கூடிய இலங்கை மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தய வீரர்களை உருவாக்குவதற்கும் நிறுவனம் எதிர்பார்த்துள்ளது. வர்த்தக நோக்கங்களுக்கு அப்பால் சென்று எப்பொழுதும் கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற மக்களுக்கு பெரிதும் முக்கியத்துவமிக்க துறைகளின் வளர்ச்சி கருதி மெல்வா நிறுவனம் தொடர்ந்து பங்களிப்பு செய்து வருகிறது.