November 19, 2025
இலங்கையின் உழைக்கும் தொழில்முனைவோருக்கான நிதியுதவி அணுகலை பலப்படுத்தும் Mahindra Ideal Finance
செய்தி

இலங்கையின் உழைக்கும் தொழில்முனைவோருக்கான நிதியுதவி அணுகலை பலப்படுத்தும் Mahindra Ideal Finance

Nov 5, 2025

இலங்கை முழுவதும் உள்ள மக்கள் முச்சக்கர வண்டிகள், வேன்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சிறிய ரக லொறிகளை வெறுமனே போக்குவரத்திற்காக மட்டும் நம்பியிருக்கவில்லை, வருமானத்திற்காகவும் நம்பியிருக்கின்றனர். அவர்கள் டெலிவரி ரைடர்கள், விநியோகஸ்தர்கள், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோர் மற்றும் சுயதொழில் புரிபவர்கள் ஆவர், இவர்களது அன்றாட உழைப்பு உள்ளூர் பொருளாதாரங்களை ஆதரித்து மேம்படுத்துகிறது. ஆயினும்கூட, நாட்டின் பொருளாதாரத்திற்கு அவர்கள் பங்களித்த போதிலும், ஒழுங்கமைக்கப்பட்ட கடன் வசதியைப் பெறுவது அவர்களுக்கு சவாலாகவே உள்ளது, மேலும் அவர்கள் முறையான நிதி நிறுவனங்களால் போதுமான சேவையைப் பெறாதவர்களாகவே இருந்து வருகின்றனர்.

இலங்கை மத்திய வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட, வங்கி அல்லாத நிதி நிறுவனமான Mahindra Ideal Finance Ltd.. (MIFL), இந்த சிறிய தொழில்முனைவோர் பிரிவினருக்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட லீசிங் மற்றும் கடன் தயாரிப்புகளை வழங்குவதன் மூலம் இந்த இடைவெளியைக் இல்லாமல் செய்கிறது. தங்களது அன்றாட வருமானத்திற்காக வாகனங்களைச் சார்ந்துள்ள தனிநபர்கள் மீது இந்நிறுவனம் குறிப்பாக கவனம் செலுத்துகிறது. அத்துடன், அவர்களது சம்பாதிக்கும் திறனை மேம்படுத்த உதவும் வகையில், ஒழுங்கமைக்கப்பட்ட, திரும்பத் திரும்பப் பெறக்கூடிய நிதி வசதிகளையும் வழங்குகிறது.

Mahindra Ideal Finance Ltd. நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவப் பணிப்பாளருமான Mufaddal A. Choonia கருத்து தெரிவிக்கையில், “நாங்கள், வழக்கமான கடன் வழங்கும் விதிமுறைகளுக்குப் பொருந்தாத வாடிக்கையாளர்களுடன் பணியாற்றுகிறோம், ஆனால் இவர்கள்தான் உண்மையான பொருளாதார நடவடிக்கைகளை இயக்குபவர்கள் ஆவர். எங்களது இலக்கு, “சம்பாதித்து செலுத்து (earn and pay)” என்ற பிரிவைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு, அவர்களின் வருமான முறைக்கு ஏற்ப சேவை செய்யக்கூடிய நிதித் தீர்வுகளை வழங்குவதாகும். அவர்களுக்காக வடிவமைக்கப்படாத அமைப்புகளுக்குள் நாங்கள் அவர்களைப் பொருத்த முயற்சிப்பதில்லை. இலங்கையில் உள்ளடக்கிய நிதி அணுகலின் எதிர்காலம் இதுதான் என்று நாங்கள் நம்புகிறோம்.” என தெரிவித்தார்.

வேதனப் பட்டியல் (payslips), நிலையான சொத்துக்கள் (fixed assets) அல்லது CRIB பதிவுகள் (CRIB histories) இல்லாத இந்தத் தனிநபர்களுக்குக் கிடைக்கும் நிதியுதவி குறைவாக இருப்பதால், இந்த வாடிக்கையாளர் பிரிவு மற்றும் சிறு, நுண் மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான (MSMEs) இலங்கையின் கடன் பற்றாக்குறை 13 பில்லியன் அமெரிக்கக டொலர்களுக்கும் அதிகமாக உள்ளது. பலர் முறைசாரா தொழில்களில் (informally) பணிபுரிகின்றனர். இதனால், பெரும்பாலான நிதி நிறுவனங்கள் கோரும் ஆவணத் தேவைகள் அல்லது பாரம்பரிய பிணைய நிபந்தனைகளை (traditional collateral conditions) அவர்களால் பூர்த்தி செய்ய முடிவதில்லை. அவர்கள் முறையான வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தினாலும், முறைப்படுத்தப்பட்ட கடனைப் பெறுவது அவர்களுக்கு இன்னமும் குறைவாகவே உள்ளது.

மேலும், இலங்கையில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பதிவுசெய்யப்பட்ட முச்சக்கர வண்டிகள் உள்ளன, இவற்றில் சுமார் 800,000 வர்த்தக போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்தத் துறை அண்ணளவாக 760,000 குடும்பங்களுக்கும் 2.8 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கும் ஆதரவளிக்கிறது. தரவுகளின்படி, முச்சக்கர வண்டி ஓட்டுநர்களில் 98% பேர் பாரம்பரிய வேலைவாய்ப்பு கட்டமைப்புகளுக்கு வெளியே இயங்கினாலும், முறையான வங்கிகள் மூலம் சுறுசுறுப்பாக சேமிக்கிறார்கள் என்று காட்டுகிறது. இந்த வாடிக்கையாளர்களில் பெரும்பாலோருக்கு, வாகனங்களைப் பெறுவதற்கு லீசிங் (Leasing) மட்டுமே உள்ள ஒரே வழிமுறையாகும். இந்த வாடிக்கையாளர் பிரிவைப் பற்றி Mahindra Ideal Finance Ltd. (MIFL)க்கு இருக்கும் ஆழமான புரிதல், இந்த வாடிக்கையாளர்களின் கடன் திருப்பிச் செலுத்தும் சுழற்சிகள் அவர்களின் அன்றாடப் பணப்புழக்கத்திற்கு ஏற்ப அமைவதை உறுதிசெய்கிறது, இதன் மூலம் வாடகைத் தொகையைச் செலுத்துவது எளிதாகிறது.

MIFLஇன் நிதி மாதிரி (financing model), வாகன உரிமையை மேலும் அணுகக்கூடியதாகவும் செலவு குறைந்ததாகவும் மாற்றுவதன் மூலம் இந்த நிலையை மாற்ற முயல்கிறது. இது வியாபாரி கூட்டாண்மைகள் மற்றும் நெகிழ்வான கடன் கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் பணப்புழக்க சுழற்சிகளுக்குப் பொருத்தமான விதிமுறைகளில் ஈடுபட அனுமதிக்கிறது. இதன் மூலம், MIFL நீண்ட கால வருமான தக்கவைப்பு மற்றும் சொத்து உரிமையை நோக்கிய பாதையை வழங்குகிறது. இவை இரண்டும் குடும்ப அளவில் பொருளாதார மீள்திறனை உருவாக்குவதற்கு முக்கியமானவை ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close