November 9, 2024
ஆண்டின் சிறந்த கல்வி நிறுவனத்துக்கான Iconic விருதை வென்றுள்ள LPEC Campus
செய்தி

ஆண்டின் சிறந்த கல்வி நிறுவனத்துக்கான Iconic விருதை வென்றுள்ள LPEC Campus

Oct 3, 2024

இலங்கையின் கல்வித்துறையின் முன்னோடியாக திகழும் LPEC Campus,  Iconic Awards 2024 விருது விழாவில் சிறந்த கல்வி நிறுவனத்துக்கான விருதை வென்றுள்ளது. மேற்படி விருதானது LPEC Campus நிறுவனம் கொண்டுள்ள கல்வித் திறன், புத்தாக்கக் கற்பித்தல் முறைகள் மற்றும் பூரண மாணவர் அபிவிருத்திக்கான அயராத அர்ப்பணிப்புக்கு கிடைத்த சான்றுப்பத்திரமாகும். எதிர்கால தொழில் வல்லுநர்களை உருவாக்கவும் அவர்கள் தெரிவு செய்துள்ள துறைகளில் அவர்களை முதன்மையானவர்களாக மாற்றவும் மாணவர்களை வலுவூட்டுவதற்கு LPEC Campus நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு இந்த விருதின் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நவீன பாட விதானங்கள் மற்றும் நவீன வசதிகள் மூலம் LPEC Campus நிறுவனம் கல்வித் துறையில் புதிய திருப்புமனையை ஏற்படுத்தும் வகையில் தொழில் கல்வியில் முதல்வனாக மாறியுள்ளது.

நாட்டின் தொழில் படைக்கு ஏற்ற வகையில் தொழில் வல்லுநர்களை உருவாக்கும் LPEC Campus நிறுவனம் கடந்த 14 ஆண்டுகளாக ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட டிப்ளோமாதாரிகளை உருவாக்கியுள்ளதோடு பூரண அரச நிறுவனமான SDFL உடன் இணைந்து சான்றிதழ்களை வழங்கி வருகிறது. பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட UK Accredited, QS 5 STARS கொண்ட மலேசிய அரச பல்கலைக்கழகமான விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (MUST) மற்றும் கம்போடிய நாட்டு அரச பல்கலைக்கழகமான PSB ஆகிய பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பட்டப்படிப்பு பாடநெறிகளை வழங்கும் LPEC Campus, UK Accredited  கல்வி நிறுவனமாகும். கிரிபத்கொடை நகரில் அமைந்துள்ள LPEC Campus (www.lpec.lk) நவீன தொழில் சந்தையில் நிலவும் கேள்விக்கேற்ப உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அங்கீகாரம் பெற்ற டிப்ளோமா, பட்டப்படிப்பு, விஷேட பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின்படிப்பு பாடநெறிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. LPEC Campus நிறுவனம் மனித வள முகாமைத்துவம், மனித வள முகாமைத்துவ நிறைவேற்றாளர், வர்த்தக முகாமைத்துவம், சந்தைப்படுத்தல் முகாமைத்துவம், உளவியல் மற்றும் ஆலோசனைகள், சட்டம், தகவல் தொழில்நுட்பம், ஆங்கில டிப்ளோமா மற்றும் வர்த்தக நிர்வாக விஞ்ஞானமானி, தகவல் தொழில்நுட்ப விஷேட பட்டப்படிப்பு மற்றும் மனித வள முகாமைத்துவம் தொடர்பான வர்த்தக முகாமைத்துவம், வர்த்தக முகாமைத்துவம், உளவியல் மற்றும் ஆலோசனை தொடர்பான விஞ்ஞானமானி, சந்தைப்படுத்தல் முகாமைத்துவம் தொடர்பான வர்த்தக முகாமைத்துவம் ஆகிய பிரிவுகளில் பட்டப்படிப்பு பாடநெறிகளை வழங்குகிறது. 0112907133, 0112907429 ஆகிய தொலைபேசி இலக்கங்களில் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெற முடியும்.

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *