July 30, 2026
Odiliya Homes & Residencies குழுமத்தின் உத்தியோகபூர்வ பிராண்ட் தூதுவராக லசித் மலிங்க நியமனம்
செய்தி

Odiliya Homes & Residencies குழுமத்தின் உத்தியோகபூர்வ பிராண்ட் தூதுவராக லசித் மலிங்க நியமனம்

Jul 30, 2026

இலங்கையின் சொகுசு குடியிருப்பு மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் ஒரு முன்னணி பிராண்டான Odiliya Homes & Residencies  குழுமத்தின் உத்தியோகபூர்வ பிராண்ட் தூதுவராக, உலகப் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரான  லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.  நிறுவனத்தின் எதிர்கால ஊக்குவிப்புத் திட்டங்கள், சர்வதேச சந்தை ஈர்ப்பு மற்றும் பிராண்ட் பிம்பத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு தனித்துவமான பந்துவீச்சாளராக உலக கிரிக்கெட் வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் தனது பெயரைப் பொறித்த லசித் மலிங்க, தனது வெற்றி மனப்பான்மை, புதுமையான பார்வை மற்றும் தனித்துவமான ஆளுமை காரணமாக இலங்கையை சர்வதேச அளவில் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு வலுவான விளையாட்டுப் பிம்பமாக திகழ்கிறார். இந்த விழுமியங்கள், Odiliya Homes & Residencies பிராண்டின் சிறப்பு, நம்பகத்தன்மை மற்றும் நவீன வாழ்க்கை முறை ஆகிய தொலைநோக்குப் பார்வையுடன் நன்கு பொருந்துவதாக  அந்நிறுவனம் குறிப்பிடுகிறது.

“இலங்கையில் முதன்முறையாக ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு தனித்துவமான ஹோட்டல் வலையமைப்பே Icon. இந்த Icon பிராண்டை உலகளவில் கொண்டு செல்ல திரு. மலிங்க எங்களுடன் கைகோர்த்துள்ளார். Icon மிரிஸ்ஸ, Icon V காலி, Icon தல்பே ஆகிய இந்த ஹோட்டல் வலையமைப்பு எதிர்காலத்தில் நாடு முழுவதும் விரிவடையும். கிரிக்கெட் விளையாட்டில் பெரும் Icon ஆக திகழும்  லசித் மலிங்க, இலங்கையில் உள்ள Icon ஹோட்டல் வலையமைப்பின் புகழை உலகளவில் கொண்டு செல்ல கைகோர்த்திருப்பது ஒரு சிறப்புமிக்க விடயமாகும். இது இலங்கை ரியல் எஸ்டேட் சந்தைக்கு வெளிநாட்டு முதலீடுகளையும் அந்நிய செலாவணியையும் ஈர்ப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். சிறப்பு, புதுமை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு சொத்து மேம்பாட்டு பிராண்டாக, Odiliya Homes & Residencies இலங்கையின் சொகுசு கட்டுமானத் துறைக்கு புதிய தரநிலைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், சர்வதேச அளவிலான வாழ்க்கை அனுபவங்களையும் உயர் முதலீட்டு வாய்ப்புகளையும் உருவாக்கும் தனது நோக்கத்தை மேலும் வலுப்படுத்த ஆவலுடன் உள்ளது,” என Odiliya Homes & Residencies இன் தலைவர் திரு ஜனத் ரோஹித்த தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close