
லக்மீ நிறுவனத்தின் கொழும்பு அலுவலகம் ஹேவ்லொக் டவுன் பிரதேசத்தில் வைபவ ரீதியாக திறப்பு
சுவையில் புரட்சி செய்த லக்மீ, சுதேச உற்பத்தி துறைக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமது கொழும்பு அலுவலகத் தொகுதியை ஹேவ்லொக் டவுன் பகுதியில் அண்மையில் திறந்துள்ளது. எப்பொழுதும் தரத்திற்கும் சுதேச பண்புகளுக்கும் முதலிடம் அளிக்கும் லக்மீ ஹோல்டிங்ஸ் நிறுவனம் சந்தையில் போட்டி உற்பத்திகளுடன் சரி நிகராக போட்டியிட்டு மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் பெரிதும் வென்றுள்ளது. அனுராதபுரம் மற்றும் திருகோணமலை பிரதேசங்களில் தாபிக்கப்பட்டுள்ள கைத்தொழிற்சாலைகள் ஊடாக லக்மீ நிறுவனம் 500 இற்கும் மேற்பட்டோருக்கு நேரடி தொழில் வாய்ப்புகளை வழங்கியுள்ளது.
லக்மீ ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் இப் புதிய தடம் தொடர்பாக கருத்து தெரிவித்த அதன் ஸ்தாபகரும் தலைவருமான திரு உசான் உடுமுல்ல “லக்மீ ஹோல்டிங்ஸ் ஆகிய நாம் எப்பொழுதும் சுதேச பண்புகளுக்கு முன்னுரிமை அளித்து செயற்படுகின்றோம். எமது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு கொடுப்பதாக நினைத்தே நாம் சகல உற்பத்திகளையும் மேற்கொள்கிறோம். எமது முன்னேற்றத்தின் இரகசியமும் அது தான். எமது இந்த புதிய தடத்தின் மூலம் லக்மீ ஹோல்டிங்ஸ் சேவை வலையமைப்பை மேலும் விஸ்தரிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். எம்முடன் இருக்கின்ற ஊழியர்களையும், வழங்குநர்களையும், எம்மை ஊக்குவிப்பவர்களையும், நண்பர்களையும் நன்றியுடன் நினைவு கூருகின்றேன்” என்றார். உயர் தரத்திலான போசாக்கை நாட்டு மக்களுக்கு அளிக்கும் லக்மீ ஹோல்டிங்ஸ் சோயா சந்தையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்திய உற்பத்தியாளரும் ஆகும். அவர்கள் நாட்டு மக்களின் சுவை உணர்வுகளை நன்கு அறிந்து கொண்டு சோறுக்கு பொருத்தமாக தடயம் பட்டா எனும் பெயரில் தனித்துவமான சோயா உற்பத்தியொன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். அத்தோடு நின்று விடாது உள்நாட்டு வாசனைத் திரவியங்களை சேர்த்து பல்வேறு சோயா உற்பத்தி வகைகளையும் சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர். அதற்கு மேலதிகமாக சீரியல் உற்பத்திகளாக குழந்தைகளுக்கு போசாக்கை அளிக்கும் லக்போஷ சீரியல், சுவை மிகுந்த பல்வேறு வகை ஜேம் உற்பத்திகள், உணவு மேசையின் சுவையை அதிகரிக்கும் சோஸ் மேஜிக் நூடில்ஸ் மற்றும் பல்வேறு பான வகைகளையும் சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளன.