May 11, 2026
கேதல்ல(Kadella) எண்டர்பிரைசஸ் தனியார் நிறுவனத்துக்குபீப்பல்ஸ் எக்சலன்சீ இரட்டை விருதுகள்
செய்தி

கேதல்ல(Kadella) எண்டர்பிரைசஸ் தனியார் நிறுவனத்துக்குபீப்பல்ஸ் எக்சலன்சீ இரட்டை விருதுகள்

May 11, 2026

இலங்கையின் முன்னணி கட்டுமான நிறுவனமான கேதல்ல (Kadella)  எண்டர்பிரைசஸ் தனியார் நிறுவனம், பீப்பல்ஸ் எக்சலன்சீ விருது விழாவில் இரண்டு விருதுகளை வென்று, கட்டுமானத் துறையில் ஒரு நம்பகமான பெயர் என்ற தனது நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில், கேதல்ல எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு “இலங்கையின் புத்தாக்க தொழில்முனைவுத் தலைவர்” மற்றும் “இலங்கையின் மிகவும் நம்பகமான தொழில்முயற்சி நிறுவனம்” ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன. இந்த இரட்டை அங்கீகாரமானது, புதுமை, தரம் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றில் இந்நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.

குடியிருப்பு கட்டுமானத்திற்குப் பெயர் பெற்ற கேதல்ல எண்டர்பிரைசஸ், தனது வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப ஆடம்பர வீட்டுத் திட்டங்கள், குடும்பத்திற்கு ஏற்ற வீடுகள், சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டிடங்கள் மற்றும் நவீன கட்டிடக்கலைக் கருத்துருக்களில் நிபுணத்துவம் பெற்றுள்ளது. இந்நிறுவனம் ISO 9001:2015 சான்றிதழ் பெற்றுள்ளதுடன் உயர் தரநிலைகளைப் பேணுதல், நியாயமான விலைகள், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், நிலைத்தன்மை மற்றும் திறமையான தொழில் வல்லுநர்களையும் தொழிலாளர்களையும் பணியமர்த்துதல் ஆகியவற்றிற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறது. “எங்கள் வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டிற்குள் தரமான வீடுகளைக் கட்டுவதே எங்களின் தொலைநோக்குப் பார்வை. சிறந்த மூலப்பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலமும், கடுமையான தர நிர்ணயங்களைப் பின்பற்றுவதன் மூலமும், நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளோம். வசதியான, உயர்தரமான வீடுகளைக் கட்டுப்படியான விலையில் வழங்குவதே எங்கள் குறிக்கோள். இது பல இலங்கைக் குடும்பங்களுக்கு சொந்த வீடு என்ற கனவை நனவாக்குகிறது,” என இந்தச் சாதனை குறித்துக் கருத்துத் தெரிவித்த நிறுவனத்தின் தலைவர் கிரிஷாந்த முத்துகுட தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close