December 12, 2024
பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்ற தேசிய மக்கள் சக்திக்கு JAAF வாழ்த்து தெரிவிப்பதுடன் எதிர்காலத்தில் ஒத்துழைக்கும் என நம்புகிறது
செய்தி

பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்ற தேசிய மக்கள் சக்திக்கு JAAF வாழ்த்து தெரிவிப்பதுடன் எதிர்காலத்தில் ஒத்துழைக்கும் என நம்புகிறது

Nov 18, 2024

இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதித் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்ககளின் மன்றம் (JAAF), நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் வலுவான பெரும்பான்மை ஆணையை வென்றதற்காக தேசிய மக்கள் சக்திக்கு (NPP) தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது. இந்த புதிய அத்தியாயத்தின் மூலம், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கும், நிலையான தொழில்களை உருவாக்குவதற்கும், 2030 ஆம் ஆண்டளவில் 25 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி இலக்கை அடைவதற்கும் சமகாலத் தலைமையுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கான தமது உறுதிப்பாட்டை JAAF மீண்டும் வலியுறுத்துகிறது.

இலங்கையின் ஜவுளி மற்றும் ஆடைத் தொழில் தேசிய பொருளாதாரத்தில் ஒரு முக்கிய காரணியாக இருப்பதுடன் இது முக்கியமான ஏற்றுமதி வருவாயை உருவாக்குகிறது மற்றும் லட்சக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. நாடு பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் போது பொது மற்றும் தனியார் துறைகளுக்கு இடையில் ஒத்துழைப்பின் ஊடாக இலங்கை ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்தியை நோக்கிய பயணத்திற்கு உறுதியான அடித்தளத்தை அமைக்க முடியும் என JAAF நம்பிக்கை கொண்டுள்ளது. தேசிய பொருளாதாரத்தின் மறுமலர்ச்சிக்கு முக்கியமான தொழில்துறையின் போட்டித்தன்மை மற்றும் பொருளாதார பங்களிப்பை மேம்படுத்தும் கொள்கைகளில் புதிய பாராளுமன்றம் கவனம் செலுத்தும் என சங்கம் நம்பிக்கைக தெரிவிக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த JAAFஇன் பொது செயலாளர் யொஹான் லோரன்ஸ், “தற்போதைய உலகளாவிய சூழலில், வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு ஏற்ற சூழலை உருவாக்குவது முன்னெப்போதையும் விட முக்கியமானது. புதிய அரசாங்கம் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஊக்குவிக்கும், வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கும் மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் நம்பகமான பங்காளி என்ற இலங்கையின் நற்பெயரை மேலும் வலுப்படுத்தும் கொள்கைகளை இயற்றும் என நம்புகிறோம். மேலும், ஒழுங்குமுறை செயல்முறைகளை நெறிப்படுத்துவதன் மூலமும், வர்த்தக வசதிகளை மேம்படுத்துவதன் மூலமும், சாதகமான வர்த்தக உடன்படிக்கைகளைப் பாதுகாப்பதன் மூலமும், ஆடைத் தொழிற்துறையானது நிலையான வளர்ச்சியையும் இலங்கையர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்க முடியும்.” என தெரிவித்தார்.

நெறிமுறை உற்பத்தியில் ஒரு தலைவராக, சமூக மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பின் உயர் தரங்களை பராமரிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் JAAF உறுதிபூண்டுள்ளது. மேலும் இலங்கையின் ஆடைத் தொழில்துறையானது அதன் நெறிமுறை மற்றும் பொறுப்பான நடைமுறைகளுக்காக சர்வதேச நற்பெயரைப் பெற்றுள்ளது. இந்த விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கும், பொறுப்பான உற்பத்தி இலக்காக இலங்கையின் நற்பெயரை தொடருவதற்கும் புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற JAAF எதிர்பார்த்துள்ளது.

நிலையான ஆடைகளுக்கான உலகளாவிய தேவை அதிகரித்து வருவதால், நெறிமுறை மூலோபாயங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பு ஆகியவற்றில் தலைமை தாங்குவதற்கான வாய்ப்பு இலங்கைக்கு உள்ளது. இலங்கையின் ஆடைத் தொழில்துறைக்கு பொறுப்பான மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு கட்டமைப்பை உருவாக்குவதற்கு சட்டமியற்றுபவர்களுடன் இணைந்து பணியாற்ற புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற JAAF எதிர்பார்ப்புடன் உள்ளது.

புத்தாக்கம், நிலையான வளர்ச்சி மற்றும் நெறிமுறை நடைமுறைகள் ஆகியவற்றில் வலுவான அர்ப்பணிப்பு மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க JAAF உறுதிபூண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *