பாரம்பரிய வரம்புகளை தாண்டி XR Lab மற்றும்High-Fidelity Simulation Lab ஆய்வுக்கூடத்தை திறந்துள்ள IIHS நிறுவனம்
பாரம்பரிய எல்லைகளை தாண்டிய கற்கை அனுபவத்தை மாணவர்களுக்கு அளிப்பதற்கு தம்மை அர்ப்பணித்துள்ள தெற்காசியாவின் முதன்மையான சுகாதார கல்வி நிறுவனமான International Institute of Health Sciences (IIHS) நிறுவனம் நிறுவியுள்ள நவீன வசதிகளுடன் கூடிய XR Lab மற்றும் High-Fidelity Simulation Lab ஆய்வுக்கூடம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேற்படி விஞ்ஞான ஆய்வுக்கூடம் அதி நவீன Virtual Reality (VR), Augmented Reality (AR) மற்றும் Mixed Reality (MR) ஆகிய தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது. மேற்படி வசதிகளை ஏற்படுத்தியதன் மூலம் IIHS நிறுவனம் டிஜிட்டல் வசதிகளுடன் மாணவர்களுக்கான கற்கை வசதிகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு தாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளது. மேற்படி விஞ்ஞான ஆய்வுக்கூட வசதிகளுடன் சிக்கலான கோட்பாட்டு மற்றும் செய்முறைகளை இலகுவாக கற்று மேலும் மேம்பட்ட கற்கை அனுபவத்தை பெறுவதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமென்பதோடு அதன் மூலம் வெறுமனே பார்வையாளர்களாக இல்லாமல் கற்கைச் செயற்பாட்டின் முனைப்பான பங்குதாரர்களாவதற்கு அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமென்பது தனித்துவமானதொரு அம்சமாகும். மேற்படி ஆய்வுக்கூடத்தில் சுகாதாரத் துறையில் வல்லுநராவதற்கு கட்டாயம் மேம்படுத்திக் கொள்ள வேண்டிய சத்திரசிகிச்சை நடவடிக்கைகள், சிக்கலான நோய் நிலைமைகளை அடையாளங் காணுதல் மற்றும் அவசர நிலைமையின் போது எதிர்வினையாற்றல் போன்ற விடயங்களை டிஜிடடல் தொழில்நுட்பம் மற்றும் உரிய பயிற்சி பெற்ற ஆலோசகர்களின் கீழ் கற்பதன் மூலம் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இத் துறையில் உயர்ந்த இடத்துக்கு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
சுகாதாரக் கல்வித் துறையின் தற்போதைய நிலைமைகளுக்கேற்றவாறு கோட்பாட்டு ரீதியான அறிவுக்கு பதிலாக செய்முறை ஆற்றலை மேம்படுத்துவதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பேற்படுத்திக் கொடுக்கும் கல்வி முறையொன்றை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை செவ்வனே புரிந்து வைத்துள்ள IIHS நிறுவனம் அந்த இலக்கை எட்டுவதை நோக்கமாக கொண்டு High-Fidelity Simulation Lab ஆய்வுக்கூடத்தை திறந்துள்ளது. அது மருத்துவ பயிற்சிக்கு புத்துயிர் அளிக்கும் அதி நவீன சிமியூலேட்டர் வசதியுடன் இயங்குகின்றது. அங்கு நிறுவப்பட்டுள்ள மனித உடலுக்கு சமமான mannequins போலிக்கும் உண்மைக்குமிடையே காணப்படும் இடைவெளியை குறைத்து மருத்துவத் துறைக்கு ஏற்புடைய நடவடிக்கைமுறைகளை பயில்வதற்கும், தீர்க்கமான சந்தர்ப்பங்களில் தீர்மானம் எடுப்பதற்கும் ஆபத்தற்ற சூழலொன்றை உருவாக்குவதற்குமான தேவையினை அடையாளங் காண்பதற்கு மாணவர்களுக்கு ஒப்பற்ற வாய்ப்பினை வழங்குகின்றது. மாணவர்களின் கற்கை அனுபவத்தை புதிய பாதைக்கு இட்டுச் செல்லும் ஆற்றலைக் கொண்டுள்ள மேற்படி விஞ்ஞான ஆய்வுக்கூடத்தின் பிரதான அனுகூலம் யாதெனில், அன்றாட தொழில் வாழ்க்கையில் எதிர்கொள்ள நேரும் சிக்கலானதும் அழுத்தம் மிக்கதுமான நிலைமைகளை இங்கு மீள் உருவாக்கம் செய்து காட்ட முடிகின்றமை ஆகும். உண்மையான நோயாளர்களுக்கு உயிர் ஆபத்தின்றி உயிர் காப்பு சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ளுதல், அவசர நோய் நிலைமைகளில் எதிர்வினையாற்றல் அல்லது நெருக்கடியான நிலைமைகளை கையாளுதல் போன்ற நிலைமைகளின் போது தீர்மானம் மேற்கொள்ளும் செயற்பாடு தொடர்பாக பயிற்சி பெறுவதற்கு IIHS நிறுவனத்தின் மாணவர்களுக்கு இப்பொழுது வாய்ப்பு கிட்டியுள்ளது.
“அண்மையில் திறக்கப்பட்ட XR Hub மற்றும் High-Fidelity Simulation Lab சுகாதாரத் துறையில் பெரும் மாற்றத்தை எற்படுத்துமென நாம் நம்புகிறோம். அதனை புத்தாக்கமும் கற்பனா சக்தியும் சங்கமிக்கும் இத் துறையின் திருப்புமுனை எனவும் கூறலாம். ஆகவே எம்முடன் இணைந்து உங்களுக்கும் இத் துறையில் வல்லுநராவதற்கான பயணத்தை தொடங்க முடியும். இவ்வாறான நவீன வசதிகள் மூலம் அறிவால் மாத்திரமின்றி செய்முறை அனுபவங்களின் மூலம் மாணவர்களை வலுவூட்டுவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம். அதன் ஊடாக மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் சமூகத்தில் சாதகமான பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த அவர்களால் முடியும்.” என IIHS நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் கித்சிறி எதிரிசிங்க தெரிவித்தார்.