December 22, 2024
IIHS நிறுவனம் (Coventry) கோவென்ட்ரி பல்கலைக்கழகத்தின் முத்திரைப் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது
செய்தி

IIHS நிறுவனம் (Coventry) கோவென்ட்ரி பல்கலைக்கழகத்தின் முத்திரைப் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது

Jan 19, 2024

இலங்கையின் சுகாதார மருத்துவக் கற்கைத் துறையின் முன்னோடியாக திகழும் International Institute of Health Sciences (IIHS) நிறுவனம், ஐக்கிய இராச்சியத்தின் (Coventry) கொவென்ட்ரீ பல்கலைக்கழகத்தால் அதன் முத்திரையிடப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டுள்ளது. இலங்கையில் தமது வர்த்தக நாமத்தில் பல்கலைக்கழகமொன்றை உருவாக்குவதற்கான சாத்தியம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தொடர் ஆய்வின் போது IIHS நிறுவனத்துக்கும் (Coventry) கொவென்ட்ரீ பல்கலைக்கழகத்துக்குமிடையே நீண்ட காலமாக முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்களின் விளைவாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டில் பட்டப்படிப்பு தாதியர் மாணவர், மாணவியர்களை இலக்காக கொண்ட நிகழ்ச்சித்திட்டமாக இந்த இரு தரப்பு ஒத்துழைப்பு திட்டம் தொடங்கப்பட்டது. அதுவே பிற்காலத்மில் உயர் கல்வி மற்றும் மாற்றத்துக்குள்ளான கல்வி முறையொன்றை அடைவதை இலக்காக கொண்ட பரந்துபட்ட நிகழ்ச்சித்திட்டமாக வளர்ச்சி கண்டுள்ளது. மேற்படி இரு தரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் வகையில் IIHS நிறுவனத்துக்கும் (Coventry) கொவென்ட்ரீ பல்கலைக்கழகத்துமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. உயர் தரத்திலான கல்வி வாய்ப்புகளை உருவாக்குவதற்கு மேற்படி நிறுவனங்களிடமுள்ள பரஸ்பர அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தம் எதிர்காலத்தில் பல்வேறு புதிய வாய்ப்புகளுக்கு வழியமைத்துக்கொடுக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

இரு நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் (Coventry) கொவென்ட்ரீ பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் அண்மையில் IIHS நிறுவனத்திற்கு வருகை தந்து கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. IIHS நிறுவனத்தில் கொவென்ட்ரீ பல்கலைக்கழகத்துடன் இணைந்ததான கற்கை பாடநெறிகளை கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை 1,300 ஐ விட அதிகமாகும். எதிர்காலத்தில் இப் பாடநெறிகளை மேலும் பல்வகைக்குட்படுத்தி, தெற்காசிய பிராந்திய மாணவர், மாணவியர்களுக்கு பரந்துபட்ட வகையிலான கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேற்படி ஒத்துழைப்பு திட்டத்தின் விளைவாக அசல் பாடநெறி கட்டணத்தில் பத்தில் ஒரு பங்கு எனும் மிகக் குறைந்த கட்டணத்தில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற பாடநெறிகளை கற்பதற்கான வாய்ப்பு கிடைக்கவுள்ளது. “கொவென்ட்ரீ பல்கலைக்கழகத்துடன் இவ்வாறு கைக்கோர்க்க முடிந்துள்ளமையிட்டு நாம் பெரிதும் மகிழ்ச்சி அடைகின்றோம். இதன் மூலம் IIHS நிறுவனம் தெற்காசியாவின் வர்த்தகநாமத்துக்குரிய பல்கலைக்கழகமாக மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் உயர் தரத்திலான கல்வி வாய்ப்புகளை உருவாக்குவதற்கு எம் வசமுள்ள அர்ப்பணிப்பும் தெற்காசிய பிராந்தியம் முழுவதுமாக உள்ள மாணவர், மாணவியர்களுக்கு அப் பாடநெறிகளை கற்பதற்குள்ள வாய்ப்புகளை விரிவாக்குவதற்கான எமது நோக்கும் பிரதிபலிக்கின்றது.” என IIHS நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி கலாநிதி கித்சிறி எதிரிசிங்க தெரிவித்தார். “IIHS நிறுவனத்துடனான இந்த ஒத்துழைப்பு திட்டத்தின் மூலம் பிராந்தியத்துக்குள் (Coventry) கொவென்ட்ரீ பல்கலைக்கழகத்தின் நோக்கை விரிவாக்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும்  மற்றும் அதன் ஊடாக பல்வேறு பிராந்திய சுகாதார கருத்திட்டங்களை செயற்படுத்தவும் முடியும். எமது இந்த ஒத்துழைப்பின் ஊடாக இலங்கையின் ஊழியர் படைக்கு மேலும் பல சுகாதார துறை சார்ந்த தொழில் வல்லுநர்களை உருவாக்கவும், இலங்கையர்களுக்கு ஐக்கிய இராச்சியத்தில் தொழில் வாய்ப்புகளை உருவாக்கவும் முடியும்.” என கொவென்ட்ரீ பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் ஜோன் லெத்தம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *