July 27, 2025
“City of Dreams Sri Lanka”வை வண்ணமயமாக்க ஆகஸ்ட் 2இல் இலங்கை வருகிறார் ஹிருத்திக் ரோஷன்
செய்தி

“City of Dreams Sri Lanka”வை வண்ணமயமாக்க ஆகஸ்ட் 2இல் இலங்கை வருகிறார் ஹிருத்திக் ரோஷன்

Jul 24, 2025

இலங்கையின் முதன்மையான பொழுதுபோக்கு மையமாகத் திகழவிருக்கும் ‘City of Dreams Sri Lanka’இன் அங்குரார்ப்பண நிகழ்வு பிரபல நட்சத்திர நடிகரான ஹிருத்திக் ரோஷனின் சமூகமளிப்போடு பிரமாண்டமான கொண்டாட்டங்களுடன் நடைபெறவுள்ளது. ‘Krrish’, ‘War’, மற்றும் ‘Super 30’ போன்ற திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பிற்காக அறியப்பட்ட பிரபல நடிகரான ஹிருத்திக் ரோஷனின் வருகை, தெற்காசியாவின் படைப்பாற்றல் மற்றும் கலாச்சாரத் திறமைகளை பிராந்திய அளவில் வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் இத்திட்டத்தின் லட்சியத்தை சுட்டிக்காட்டுகிறது.

City of Dreams Sri Lanka என்பது ஒரு அற்புதமான, புதிய திட்டமாகும். இது உயர்தர சொகுசு தங்குமிடங்கள், உலகத் தரம் வாய்ந்த உணவகங்கள், நவீன சில்லறை வர்த்தக நிலையங்கள் மற்றும் அற்புதமான பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வருகிறது. ஆகஸ்ட் 2 ஆம் திகதி ஒரு தொடர்ச்சியான கொண்டாட்டத்தின் ஆரம்பமாகும். இது கொழும்பிற்கு ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும் – தன்னம்பிக்கை, படைப்பாற்றல் மற்றும் பிராந்திய இணைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு புதிய சகாப்தம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close