December 23, 2024
HNB கார்ட் உரிமையாளர்களுக்கான பிரத்தியேக பண்டிகைக்கால சலுகைகளில் ‘Anthem of the Seas” கப்பல் பயண அனுபவமும் அடங்கும்”
செய்தி

HNB கார்ட் உரிமையாளர்களுக்கான பிரத்தியேக பண்டிகைக்கால சலுகைகளில் ‘Anthem of the Seas” கப்பல் பயண அனுபவமும் அடங்கும்”

Dec 6, 2024

இலங்கையின் மிகவும் பிரபலமான வாடிக்கையாளர் வங்கியான HNB PLC, தற்போதைய பண்டிகை காலத்தில், அதன் கார்ட் உரிமையாளர்களுக்கான பரந்த அளவிலான சிறப்பு சலுகைகளை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதில், இலங்கை முழுவதும் 300 க்கும் மேற்பட்ட பிரபல வர்த்தகர்களிடமிருந்து 70% வரையிலான தள்ளுபடிகள் மற்றும் பல்வேறு தனித்துவமான நன்மைகள் உள்ளிட்ட பல சலுகைகள் இதில் அடங்கும்.

சில்லறை விற்பனை, நேர்த்தியான உணவகம், பொழுதுபோக்கு மற்றும் விருந்தோம்பல் முதல் தனிப்பட்ட தேவைக்கான இலத்திரனியல் உபகரணங்கள், ஆடை, ஆபரணங்கள் மற்றும் உள்ளிட்ட பல பிரபல உள்ளூர் மற்றும் சர்வதேச வர்த்தக நாமங்களின் பரந்த தேர்வுடன் இணைந்து. குறிப்பாக, இந்த பண்டிகைக் காலத்தில், HNB கார்ட் உரிமையாளர்கள் HNB கிரெடிட் கார்ட் மூலம் ஆசியாவின் மிகப்பெரிய கப்பல்களில் ஒன்றான “Anthem of the Seas” என்ற பிரத்தியேக கப்பல் பயண அனுபவத்தை வெல்லலாம். பிரமாண்ட சீட்டிழுப்பில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அதிர்ஷ்டசாலி வெற்றியாளர் இருவருக்கான முழுமையாக செலுத்தப்பட்ட கப்பல் பயண அனுபவத்தைப் பெறுவார்.

“இந்த ஆண்டு பண்டிகை பரிசுகளின் திட்டத்தை வடிவமைக்கும் போது, ​​எங்கள் கார்ட் உரிமையாளர்களுக்கு அர்த்தமுள்ள மதிப்பை உருவாக்குவதை முன்னுரிமையாகக் கொண்டோம். எங்கள் கூட்டாண்மைகள் அன்றாட தேவைகள் முதல் முன்னணி நவநாகரீக வாழ்க்கை முறை அனுபவங்கள் வரை நீண்டுள்ளன, ஒவ்வொரு பரிவர்த்தனையும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு கணிசமான நன்மைகளைத் தரும் என்பதை உறுதி செய்கிறது. இந்த கவனமாக வடிவமைக்கப்பட்ட திட்டம் எங்கள் வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளைப் பற்றிய எங்கள் ஆழமான புரிதலையும், அனைவரும் வெற்றி பெறும் ஒரு பருவத்தை அனுபவிக்க முடியும் என்பதை உறுதி செய்வதன் மூலம் அவர்களின் பண்டிகைக்கால  கொண்டாட்டங்களை மேம்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கிறது,” என HNB அட்டைகள் பிரிவு பிரதானி கௌதமி நிரஞ்சன் கூறினார்.

சீட்டிழுப்பில் பங்கேற்பதற்கு, அனைத்து கிரெடிட் கார்ட் உரிமையாளர்களும் செய்ய வேண்டியது, விளம்பர மேம்பாட்டு காலகட்டத்தில் பரிவர்த்தனையாக 1,00,000 ரூபாவை குறைந்தபட்ச செலவாக செய்ய வேண்டும். செலவிடப்படும் ஒவ்வொரு 10,000 ரூபாவுக்கும் பிரமாண்ட சீட்டிலுப்பில் ஒரு நுழைவு கிடைக்கும், இது ஆடம்பர அனுபவத்தை வெல்லும் வாய்ப்பை அதிகரிக்கிறது.

குறிப்பாக, வங்கி காப்புறுதி, கல்வி மற்றும் மருத்துவமனை செலவுகளுக்கான வட்டி இல்லாத தவணைத் திட்டங்களை 3, 6 மற்றும் 12 மாத கால அளவில் தொடர்ந்து வழங்கும், மேலும் 2024 டிசெம்பர் 31 வரை கையாளுநர் கட்டணம் தள்ளுபடி அளிக்கப்படும்.

பரந்த வியாபாரி வலையமைப்புகளில் முன்னணி நவநாகரீக சில்லறை விற்பனையாளர்கள், விருந்தோம்பல் பங்காளிகள், ஆட்டோமொபைல் கேர் நிபுணர்கள், நகைக்கடை சங்கிலிகள், சூப்பர் மார்க்கெட்கள் மற்றும் e-Commerce தளங்கள் ஆகியவை அடங்கும். HNB Prestige Prime கார்ட் உரிமையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்டோமொபைல் வியாபாரிகளிடம் 40% வரை சேமிப்புடன் மேலதிக சலுகைகளைப் பெறுகிறார்கள்.

டிஜிட்டல்-அறிவுள்ள வாடிக்கையாளர்கள் HNB இன் e-Commerce கூட்டாண்மைகள் மூலம் சிறப்பு நன்மைகளை அனுபவிக்கலாம், இதில் 24 மாதங்கள் வரை வட்டி இல்லாத தவணைத் திட்டங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பங்காளிகளுடன் 60% வரை தள்ளுபடிகள் உள்ளன.

முக்கியமான சூப்பர் மார்க்கெட் கூட்டாண்மைகள் அத்தியாவசிய பொருட்களில் கணிசமான சேமிப்பை வழங்குகின்றன. கீல்ஸ் சூப்பர் மார்க்கெட்டுகள் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமையும் ரூ. 4,000 க்கும் அதிகமான பற்றுச்சீட்டுகளுக்கு மரக்கறி, பழ வகைகள் மற்றும் கடல் உணவுகளுக்கு 25% தள்ளுபடி வழங்குகிறது.

Softlogic GLOMARK, கிரெடிட் கார்ட் கொள்முதலில் 25% மற்றும் டெபிட் கார்ட் பரிவர்த்தனைகளில் 10% தள்ளுபடியை ரூ. 7,500 க்கும் அதிகமான பற்றுச்சீட்டுகளுக்கு பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை நியமிக்கப்பட்ட நாட்களில் வழங்குகிறது. Arpico Supercentre, Superstore மற்றும் டெய்லி அவுட்லெட்டுகள் ரூ. 4,000 க்கும் அதிகமான பற்றுச்சீட்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உற்பத்திப் பொருட்கள் மற்றும் சத்துணவுகளுக்கு வார இறுதி தள்ளுபடிகளாக 30% வழங்குகின்றன. Cargills Food City தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்களில் 4,000 ரூபாவுக்கும் அதிகமான கொள்வனவுகளுக்கு 300 க்கும் மேற்பட்ட பால் பொருட்களுக்கு 20% சேமிப்பை வழங்குகிறது.

சூப்பர் மார்க்கெட் கூட்டாண்மைகளை விரிவுபடுத்தி, SPAR சூப்பர் மார்க்கெட் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்களில் கிரெடிட் கார்ட் உரிமையாளர்களுக்கு ரூ. 4,000 க்கும் அதிகமான பற்றுச் சீட்டுகளுக்கு பிரத்தியேகமாக 20% சேமிப்பை வழங்குகிறது. மேலும், LAUGFS சூப்பர் நவம்பர் மற்றும் டிசம்பர் 2024 முழுவதும் வியாழக்கிழமைகளில் மாலை நேரங்களில் (மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை) ரூ. 3,000 க்கும் அதிகமான கொள்வனவுகளில் கிரெடிட் கார்ம் உரிமையாளர்களுக்கு சிறப்பு 10% தள்ளுபடியை வழங்குகிறது, இது பண்டிகை காலத்தில் மேலும் சேமிப்பு வாய்ப்புகளை வழங்குகிறது.

பண்டிகைக்கால சலுகைகளில் HNB இன் புகழ்பெற்ற விருந்தோம்பல் பங்காளிகள் வலையமைப்பில் பரவலான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளும் அடங்கும். அதே நேரத்தில், பயணம் செய்ய விரும்பும் கார்ட் உரிமையாளர்கள் வட்டி இல்லாத தவணைக் கொடுப்பனவுகளுக்கு முன்னணி பயணம் மற்றும் சுற்றுலா நிறுவனங்களுடன் HNB இன் கூட்டாண்மையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

“இந்த பண்டிகைக் காலத்தின் பரிசுகளின் திட்டம் பாரம்பரிய தள்ளுபடிகளை விட அதிகமாக உள்ளது – இது எங்கள் கார்ட் உரிமையாளர்களுக்கு ஒவ்வொரு செலவு வகையிலும் மதிப்பை அதிகரிக்க வாய்ப்புகளை உருவாக்குவதாகும். இது அன்றாட அத்தியாவசிய பொருட்களாக இருந்தாலும் சிறப்பு அனுபவங்களாக இருந்தாலும், எங்கள் சலுகைகள் பொருளாதார சலுகைகளை வழங்கும் அதே நேரத்தில் பொறுப்பான நிதித் தேர்வுகளை ஊக்குவிப்பதை உறுதி செய்துள்ளோம்,” என கௌதமி நிரஞ்சன் மேலும் தெரிவித்தார்.

கார்ட் உரிமையாளர்கள் நாடு முழுவதும் முன்னணி வாழ்க்கை முறை பிராண்டுகள் மற்றும் வாகனங்கள் தொடர்பான சேவை செய்யும் வியாபாரிகளிடமிருந்து 60% வரை தள்ளுபடிகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போது, HNB கார்ட்களில் Visa Classic, Gold, Platinum, Signature மற்றும் Infinite ஆகியவை உள்ளன, மேலும் MasterCard Regular, Gold, Platinum & World ஆகியவையும் உள்ளன. ஒவ்வொரு கார்ட் உரிமையாளரு சேர்ப்பு கட்டணம் இல்லாதது, வருடாந்த அட்டை சலுகைகள், அதி குறைந்த தாமத கட்டணம் மற்றும் ஏனைய உள்ளூர் வங்கிகளை மிகக் குறைந்த ஆண்டு கட்டணம் மற்றும் மிக நீண்ட கடன் மீள் செலுத்தும் காலம் உள்ளிட்ட பல ஈர்க்கக்கூடிய அம்சங்களால் எளிதாக்கப்படுகிறார்கள். HNB ஆரம்ப அல்லது ஆண்டு கட்டணமின்றி நேரடி குடும்ப உறுப்பினர்களுக்கு இலவச மேலதிக கார்ட்களையும் மிகவும் பாதுகாப்பான ஆன்லைன் ஷாப்பிங் அனுபவத்தை உறுதி செய்யும் 3D பாதுகாப்பு வசதி (ஒரே நேர குறியீடு (OTP)) வழங்கும்.

HNB கார்ட்கள், Visa Airport Companion மற்றும் MasterCard LoungeKey மூலம் உலகெங்கிலும் உள்ள 1000+ விமான நிலையங்களில் ஒப்பிடமுடியாத பயணக் காப்புறுதி மற்றும் ஓய்வறை அணுகலை வழங்குகின்றன. HNB Visa Infinite மற்றும் Signature கிரெடிட் கார்ட் உரிமையாளர்களுக்கான Visa Concierge Lifestyle Appக்கான அணுகலையும் வங்கி வழங்குகிறது, ஒவ்வொரு அட்டைதாரரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் வருடம் முழுவதும் வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணித்தியாலமும் இயங்கும் வெளிநாட்டு ஹோட்டல்கள், விமானங்கள் மற்றும் உணவகங்களுக்கு வசதியான, தனிப்பயனாக்கப்பட்ட முன்பதிவுகளை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *