September 18, 2026
கம்போடிய நாட்டுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்தததன் மூலம் இலங்கை மருந்து உற்பத்தித் துறைக்கு புதிய சந்தையினை திறந்துள்ள Gamma Interpharm
செய்தி

கம்போடிய நாட்டுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்தததன் மூலம் இலங்கை மருந்து உற்பத்தித் துறைக்கு புதிய சந்தையினை திறந்துள்ள Gamma Interpharm

Sep 17, 2026

Gamma Interpharm (Pvt) Ltd, இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட மருந்துப் பொருட்களைக் கம்போடியாவிற்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியதன் மூலம், தனது அறுபது ஆண்டுகால வணிகப் பயணத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. பிராந்தியச் சந்தையில் இலங்கை மருந்து உற்பத்தித் துறையின் இருப்பை மேலும் வலுப்படுத்திக்கொள்ள இந்த நடவடிக்கை ஒரு முக்கியமான வாய்ப்பாகும். Gamma Interpharm, தனது முதல் தொகுதி மருந்துப் பொருட்களை கம்போடியாவிற்கு ஏற்றுமதி செய்வதை, 2026 ஆகஸ்ட் 14 அன்று, நிறுவனத்தின் உற்பத்தி வளாகத்தில் பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்கள் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. இந்தச் சாதனையுடன், கம்போடியாவிற்கு மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் முதல் இலங்கை மருந்து உற்பத்தி நிறுவனம் என்ற பெருமையை Gamma Interpharm பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கம்போடிய சந்தையில் நுழைவதென்பது, Gamma Interpharm தனது சர்வதேசத் தளத்தை விரிவுபடுத்துவதற்கும், இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட மருந்துப் பொருட்களை வெளிநாட்டுச் சந்தைகளில் நிலைநிறுத்துவதற்குமான நீண்டகால உத்தியில் ஒரு முக்கியப் படியாகும்.

Warner Lambert Inc மற்றும் அமெரிக்காவின் Pfizer Inc. போன்ற நிறுவனங்களுடனான உறவுகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட பாரம்பரியத்தைக் கொண்டு, Gamma Interpharm ஒரு இலங்கை மருந்து உற்பத்தியாளராக கடந்த அறுபது ஆண்டுகளாக தனது உற்பத்தி தர உறுதிப்படுத்தல் மற்றும் பகுப்பாய்வுத் திறன்களைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. நிறுவனத்தின் தலைவர் திரு. கலன ஹெவாமல்லிகாவின் தொலைநோக்குப் பார்வை மற்றும் தலைமையின் கீழ், Gamma Interpharm சர்வதேச சந்தையில், இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட மருந்துகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. நிறுவனத்தின் சர்வதேச விரிவாக்கத் திட்டத்திற்கு நிர்வாகமும் பணியாளர்களும் மேலான பங்களிப்புகளைச் செய்துள்ளனர். நவீன மருந்து உற்பத்தித் தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வு வசதிகளுடன், Gamma Interpharm சர்வதேச அனுபவம் வாய்ந்த திறமையான தொழில் வல்லுநர்கள் குழுவைக் கொண்டுள்ளது. தொழில்நுட்பம், பயிற்சி மற்றும் சிறந்த உலகளாவிய நடைமுறைகளில் தொடர்ச்சியான முதலீடு மூலம் சர்வதேச தரத்தை எட்டும் வகையில் தனது உற்பத்தித் திறன்களை மேம்படுத்துவதில் நிறுவனம் உறுதியாக உள்ளது. Gamma Interpharm உற்பத்தி வளாகம் உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டுதல்களின்படி செயல்படுவதோடு, இலங்கையின் தேசிய மருந்துப்பொருட்கள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (NMRA) அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.  தனது மருந்துப் பொருட்களின் தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உயர் மட்டத்தில் பராமரிப்பதே நிறுவனத்தின் முதன்மை நோக்கமாகும். கம்போடிய சந்தையில் நுழைவது, நிறுவனத்தின் பிராந்திய இருப்பை வலுப்படுத்துவதில் ஒரு முக்கியப் படியாகவும், சர்வதேச சந்தையில் போட்டியிடும் இலங்கை மருந்து உற்பத்தித் துறையின் திறனை வெளிக்காட்டுவதற்கான ஒரு வாய்ப்பாகவும் அமைகிறது. “Seeking Excellence in contributing towards Quality Healthcare for All” என்ற . Gamma Interpharm இன் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, இந்நிறுவனம் இலங்கைக்கு அப்பால் தனது தரமான மருந்துப் பொருட்களுக்கான வரம்பை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கம்போடியாவிற்குப் பிறகு, Gamma Interpharm தனது பிராந்திய விரிவாக்கத்தை மேலும் துரிதப்படுத்தத் தயாராக உள்ளதுடன், இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட மருந்துகளை வியட்நாம் மற்றும் பிலிப்பின்ஸ் போன்ற நாடுகளுக்கு அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கம்போடியாவில் இந்த விரிவாக்கம் மற்றும் எதிர்காலத்தில் பிற ஆசிய சந்தைகளில் நுழைவதன் மூலம், உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு இலங்கை மருந்து உற்பத்தி வணிகத்தை உருவாக்குவதும், நாட்டின் மருந்து ஏற்றுமதித் துறையின் வளர்ச்சிக்குத் தீவிரமாகப் பங்களிப்பதும் Gamma Interpharm இன் நீண்டகால நோக்கமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close