February 5, 2025
FCCISL மற்றும் S4IG (அவுஸ்திரேலிய நிதியுதவியுடன்) MSME வளர்ச்சிக்காக ஒன்றிணைகிறது. சிகிரியாவில் இடம்பெற்ற நுண், சிறிய மற்றும் நடுத்தர (MSME) சுற்றுலா நிறுவனங்களின் வணிக உச்சி மாநாடு 2024
செய்தி

FCCISL மற்றும் S4IG (அவுஸ்திரேலிய நிதியுதவியுடன்) MSME வளர்ச்சிக்காக ஒன்றிணைகிறது. சிகிரியாவில் இடம்பெற்ற நுண், சிறிய மற்றும் நடுத்தர (MSME) சுற்றுலா நிறுவனங்களின் வணிக உச்சி மாநாடு 2024

Aug 1, 2024

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் முக்கிய நிகழ்வாக நுண், சிறிய மற்றும் நடுத்தர (MSME) சுற்றுலா நிறுவனங்களின் வணிக உச்சி மாநாடு 2024 சிகிரியாவில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. இந்த நிகழ்வு இலங்கை வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சம்மேளனம் (FCCISL) மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கூடிய உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன்கள் (S4IG) நிகழ்ச்சித் திட்டத்தின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது. இந்நிகழ்வு நாட்டின் சுற்றுலாத் துறையில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.

பொருளாதார வளர்ச்சிக்கான தளம்: இந்த உச்சிமாநாடு, அண்மைய காலங்களில் ஏற்பட்ட பொருளாதார சவால்களை எதிர்கொள்வது தொடர்பாக கருத்துப் பரிமாற நுண், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSMEs) ஒரு முக்கிய தளத்தை வழங்கியது. இது இலங்கைப் பொருளாதாரத்தில் MSMEகளின் இன்றியமையாத பங்கை எடுத்துக்காட்டியதுடன் தடைகளை வெற்றி கொள்வதற்கான நிபுணத்துவ ஆலோசனைகளையும் ஆதரவையும் வழங்கியது.

நிபுணத்துவ வளர்ச்சியை முன்னிலைப்படுத்தல்: இந்நிகழ்வு MSMEகளுக்கான நிபுணத்துவ வணிகப் பயிற்சி மற்றும் வணிக வளர்ச்சி சேவைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. மேலும், இது மாவட்ட மட்டத்தில் உள்ளூர்மயப்படுத்தப்பட்ட திறன் திட்டமிடல் பற்றிய புரிதலை மேம்படுத்துவதையும், பிராந்திய சுற்றுலா வளர்ச்சிக்கு சாத்தியமான பகுதிகளை இனங்கண்டு, பயிற்சி ஊடாக MSMEகளுக்கு தேவையான திறன்களைப் பெற உதவுவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.

தொழில்துறை தலைவர்களுடன் கூட்டிணைவு: Dialog Enterprise மற்றும் முக்கிய நிதி நிறுவனங்கள் ஆர்வத்துடன் பங்கேற்று MSMEகளின் வணிக வளர்ச்சிக்கு உதவும் தொழில்நுட்பம் மற்றும் நிதிக் கருவிகள் தொடர்பான நுண்ணறிவு மற்றும் சேவைகளை வழங்கின. அவர்களின் பங்கேற்பு பொருளாதார முன்னேற்றத்தில் பொது-தனியார் கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை பறைசாற்றியது.

பிரத்தியேகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் வணிகப் பயிற்சி: S4IGஆல் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் தொழில்முறை வணிகப் பயிற்சியின் அறிமுகம் உச்சிமாநாட்டின் சிறப்பம்சமாக விளங்கியது.  டிஜிட்டல் வணிகப் பயிற்சியானது MSMEகளுக்கு டிஜிட்டல் பொருளாதாரத்தில் செழித்து வளர்வதற்கான திறன்களை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அவர்களின் தனித்துவமான சவால்களுக்கு ஏற்றவாறு ஆதரவு வழங்குவதை உறுதி செய்கிறது.

மாவட்ட மகளிர் அபிவிருத்தி இணைப்பாளர் – சுரேகா தர்ஷினி எதிரிசிங்கவின் கருத்து

“வணிக பயிற்சியாளர் உங்கள் வணிகத்திற்கு ஒரு மருத்துவர் போன்றவர். உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது மருத்துவ நிபுணத்துவத்தை நாடுவது போல, வணிகங்களும் சவாலான நேரங்களை எதிர்கொள்கின்றன. வணிக உரிமையாளர்களாக, எங்களுக்கு அதனை தீர்ப்பதற்கான அறிவும் அனுபவமும் இல்லாமல் இருக்கலாம். அவ்விடத்தில் தான் ஒரு பயிற்சியாளரின் தேவை உணரப்படுகிறது – தனித்துவமான தீர்வுகளை வழங்குவதன் மூலம் அவர்கள் வணிகத்தை திறம்பட வழிநடத்த உதவுகிறார்கள்.”

செயற்பாட்டிற்கான அழைப்பு (Call to Action): தொழில்முறை வணிகப் பயிற்சியில் ஆர்வமுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் இப்பயிற்சி மூலம் எவ்வாறு பயனடையலாம் மற்றும் உரிமம் பெற்ற பயிற்சியாளருடன் எவ்வாறு இணையலாம் என்பது பற்றி மேலும் அறிந்துகொள்ள FCCISLஐ தொடர்பு கொள்ளவும். MSMEகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம், நாம் ஒரு பலமான மற்றும் செழிப்பான பொருளாதாரத்தை உருவாக்க பங்களிக்கிறோம்.

FCCISLஇன் தலைவர் – திரு. கீர்த்தி குணவர்த்தனவின் கருத்து:

“நாம் இந்த முயற்சியை குறிப்பாக கோவிட்-19 மற்றும் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட கஷ்டங்களின் போது, ​​நுண் மற்றும் சிறிய homestayகளை ஆதரிப்பதற்காக மேற்கொண்டோம். இக்குறிப்பிட்ட MSME குழுவிற்கு அணுகக்கூடிய எளிய தீர்வை உருவாக்குவதே எங்கள் இலக்காக இருந்தது. S4IGஆல் உருவாக்கப்பட்ட வணிகப் பயிற்சி எண்ணக்கரு, வணிகங்களை நடாத்துவதில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களிற்கு ஆதரவை வழங்க ஏற்றதாக இருந்தது.”

FCCISL பற்றி: இலங்கை வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சம்மேளனம், வர்த்தக சமூகத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் செழிப்பை ஊக்குவிப்பதுடன் பரிந்துரைகளையும் வழங்குகிறது. மேலதிக விபரங்களுக்கு தொழில்முறை வணிகப் பயிற்சிக்கான தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளரான இந்திக பாதுக்கவை indikapadukka3@gmail.com ஊடாக தொடர்பு கொள்ளவும். மேலும் FCCISL இணையத்தளத்தை பார்வையிடவும்: https://www.fccisl.lk/professional-business-coaching.php

S4IGஇன் குழுத் தலைவர் – திரு. ஸ்டீபன் லொட்சியாக்கின் கருத்து:

“அவுஸ்திரேலிய அரசாங்கம் நாட்டிற்குள் புதுமையான மற்றும் உள்வாங்கிய நிகழ்வுகளை ஆதரிப்பதில் பெருமிதம் கொள்கிறது. மேலும் இது போன்ற நிகழ்வு MSMEகளை ஒன்றிணைப்பதன் ஊடாக அவர்களின் வளர்ச்சியை மேம்படுத்த ஒரு சந்தர்ப்பமாக அமைகிறது.”

S4IG பற்றி: அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஆதரவுடன் கூடிய உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன்கள் நிகழ்ச்சித் திட்டம் இலங்கையில் உள்வாங்கிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் திறன்கள் மற்றும் திறமைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

உங்கள் வணிகத்திற்கான பயிற்சியாளரை தெரிந்தெடுப்பது அல்லது பயிற்சியாளராக உரிமம் பெறுவது பற்றிய மேலதிக தகவலுக்கு, தயவுசெய்து FCCISLஐ தொடர்பு கொள்ளவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close