May 26, 2026
TikTok வழியாகக் கொண்டாடப்படும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு: எல்லைகளைக் கடந்த ஒரு கலாச்சாரத் திருவிழா
செய்தி

TikTok வழியாகக் கொண்டாடப்படும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு: எல்லைகளைக் கடந்த ஒரு கலாச்சாரத் திருவிழா

May 5, 2026

இலங்கையில் ஏப்ரல் மாதம் பிறக்கும்போதே ஒரு விதமான மாயாஜாலமும் கூடவே வந்துவிடுகிறது. விடியற்காலையில் எதிரொலிக்கும் குயிலின் சத்தம், புத்தாண்டு நெருங்கிவிட்டதை நமக்கு முன்கூட்டியே அறிவிக்கிறது. இதனைத் தொடர்ந்து, சிங்கள மற்றும் தமிழ் வீடுகள் அனைத்தும் சித்திரைப் புத்தாண்டிற்கான ஆயத்தப் பணிகளில் மும்முரமாக ஈடுபடத் தொடங்குகின்றன. 

அடுப்பங்கரைகளில் இரவு நேரங்களிலும் விளக்குகள் அணையாது; கொண்டைக்கவுன், கொக்கிஸ், பெனி வளலு, ஆஸ்மி மற்றும் ரவா லட்டு போன்ற தின்பண்டங்கள் வரிசையாகத் தயாரிக்கப்படுகின்றன. புத்தாடை அணிதல், உறவினர்கள் மற்றும் அயலவர்களுடன் பரிசுகளைப் பகிர்ந்து கொள்ளுதல் எனப் பல காலங்களாகத் தொடரும் இந்த மரபுகள், தற்போது ஒரு புதிய வடிவத்தைப் பெற்றுள்ளன. வீடுகளுக்குள் மட்டும் முடங்கிக் கிடந்த இந்தப் பாரம்பரியக் கொண்டாட்டங்கள், இன்று TikTok தளத்தின் மூலம் எல்லைகளைக் கடந்து ஒரு கூட்டு டிஜிட்டல் கொண்டாட்டமாக மாறியுள்ளன. 

நேரம், சடங்கு மற்றும் முக்கியத்துவம்: டிஜிட்டல் யுகத்தில் சுப நேரம்

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ‘நேரம்’ என்பது மிகவும் புனிதமான ஒன்றாகக் கருதப்படுகிறது. அடுப்பு மூட்டுவது முதல் வேலைகளைத் தொடங்குவது வரை அனைத்துமே ‘நெகத்’ எனப்படும் சுப நேரங்களின் அடிப்படையிலேயே அமைகின்றன. முன்னதாக இவை பஞ்சாங்கங்கள் மூலமாகவோ அல்லது பெரியவர்களின் அறிவுறுத்தல்கள் மூலமாகவோ பின்பற்றப்பட்டன. 

தற்போது, TikTok தளத்தில் உள்ள படைப்பாளிகள் இந்தச் சுப நேரங்களை மிகவும் எளிமையான மற்றும் பயனுள்ள உள்ளடக்கங்களாக மாற்றிக் கொடுக்கின்றனர். சுப நேரங்கள் எண்ணுதல் (Countdowns), திரையில் தோன்றும் விளக்க உரைகள் மற்றும் நேரடி வழிகாட்டல்கள் மூலம் பயனர்களுக்கு இவை எளிதில் சென்றடைகின்றன. தமிழ் படைப்பாளிகள் சுப நேரங்களைச் சூழலுக்கு ஏற்றவாறு விளக்குவதால், இரு சமூகங்களின் கலாச்சாரங்களும் சமமாகப் பிரதிபலிக்கின்றன. தங்களுக்குத் தேவையான நேரத்தில், சரியான தகவலைத் தேடிப் பெறுவதற்கு TikTok இன் தேடல் அம்சங்கள் (Search-led behavior) பெரும் உதவியாக இருக்கின்றன. 

அவுருது சமையலறை: பாதுகாத்தல் முதல் பங்கேற்பு வரை

சித்திரைப் புத்தாண்டு சடங்குகள் அனைத்தும் உணவின் மூலமே முழுமையடைகின்றன. அவுருது மேசை என்பது வெறும் பலகாரங்களின் தொகுப்பு மட்டுமல்ல. அது அன்பு, தாராள குணம் மற்றும் தொடர்ச்சியின் வெளிப்பாடாகும். பல தலைமுறைகளாக, இந்தச் சமையல் குறிப்புகள் எங்கும் எழுதி வைக்கப்படவில்லை. அவை பெரியவர்கள் செய்வதைப் பார்த்துப் பழகிய பாரம்பரியக் கலைகளாகவே இருந்தன. 

இன்று இந்த நிலை மாறியுள்ளது. TikTok தளத்தில் சமையல் செயல்முறைகள் நேரலையாகவும், சிறு சிறு பகுதிகளாகவும் பகிரப்படுவதால், சமையல் குறிப்புகளை எளிதாகக் கற்றுக்கொள்ள முடிகிறது. குறிப்பாக, இளைய தலைமுறையினர் இத்தகைய பாரம்பரியத் தயாரிப்புகளில் ஆர்வம் காட்டுவதற்கு TikTok ஒரு ‘டிஜிட்டல் சமையலறையாக’ (Practical extension of the kitchen) செயல்படுகிறது. சேமித்து வைக்கும் (Save/Bookmark) வசதி இருப்பதால், தேவையான நேரத்தில் மீண்டும் அந்த வீடியோக்களைப் பார்த்துப் பயன் பெறவும் முடிகிறது. 

கைவிசேடம் மற்றும் கொடுக்கல் வாங்கல்: வர்த்தக நாமங்களின் புதிய அணுகுமுறை

பரிமாற்றம் என்பது புத்தாண்டின் மிக முக்கியமான அம்சம். ‘கைவிசேடம்’ அல்லது ‘கனு தெனு’ என்பது வெறும் பொருள் பரிமாற்றம் மட்டுமல்ல. அது நன்மதிப்பு மற்றும் செழிப்பைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு முறையாகும். இன்று வுமைவுழம தளம், வணிக நிறுவனங்களையும், மக்களையும் இணைக்கும் ஒரு பாலமாகச் செயல்படுகிறது. 

மக்கள் புத்தாண்டிற்காகத் தயாராகும் வீடியோக்களைப் பார்க்கும்போதே, அவற்றுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் வர்த்தக நாமங்களைத் தேடிக் கண்டடைகின்றனர். வர்த்தக நாமங்கள் பாரம்பரிய விளம்பரங்களைத் தவிர்த்து, படைப்பாளிகளுடன் இணைந்து புத்தாண்டுச் சூழலுக்கு ஏற்றவாறு தங்கள் பொருட்களை அறிமுகப்படுத்துகின்றன. பரிசுப் பொதிகள், அலங்காரத் தட்டுகள் அல்லது புத்தாடைத் தேர்வுகள் என அனைத்தும் இயல்பான உள்ளடக்கங்களாகப் பகிரப்படுகின்றன. இது வாடிக்கையாளர்களுக்கும் வணிகர்களுக்கும் இடையிலான ஒரு இருவழித் தொடர்பை (Two-way exchange) உருவாக்குகிறது. 

விரிவடையும் புத்தாண்டு மேசை

பல தலைமுறைகளாக வீடுகளுக்குள்ளே முடங்கியிருந்த புத்தாண்டு மரபுகள், இன்று பலரது கைகளால் மெருகூட்டப்பட்டு மெய்நிகர் உலகிலும் பிரகாசிக்கின்றன. TikTok தளம் இந்தப் பாரம்பரியத்தை மிகவும் நெருக்கமானதாகவும், அனைவரும் பங்கேற்கக்கூடிய ஒன்றாகவும் மாற்றியுள்ளது. 

இன்று அவுருது மேசை என்பது ஒரு தனிப்பட்ட வீட்டுக்குச் சொந்தமானது அல்ல. அது கலாச்சாரத்தைப் பாதுகாத்து, பகிர்ந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் சொந்தமான ஒரு கூட்டு மேசையாக மாறியுள்ளது. இவ்வாறு, காலத்திற்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதன் மூலம் சித்திரைப் புத்தாண்டு மரபு தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close