December 12, 2024
ஆடைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி
செய்தி

ஆடைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

Nov 11, 2024

இலங்கையை தலைமையகமாகக் கொண்ட பொதுப் பங்கு பட்டியலிடப்பட்ட நவநாகரீக நிறுவனமான Hela Apparel Holdings PLC, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பா முழுவதும் Reebok பிராண்டின் Outerwearகளை வடிவமைத்து, உற்பத்தி செய்து, விற்பனை செய்வதற்காக Authentic Brands Group உடன் நீண்ட கால பிரத்தியேக கூட்டணியை மேற்கொள்வதாக அறிவித்துள்ளது. இந்த ஒத்துழைப்பானது Hela Groupஇன் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் விநியோக திறமையுடன் Reebokஇன் தனித்துவமான பாணியை இணைப்பதன் மூலம் நவநாகரீக துறைக்கு அதன் வழங்கல்களை விரிவுபடுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். இன்றைய நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் உயர்தர, செயல்திறன் சார்ந்த வெளிப்புற ஆடைகளை வழங்குவதற்கும், விளையாட்டு மற்றும் சுறுசுறுப்பான ஆடை சந்தைகளில் Helaவின் நிலையை வலுப்படுத்துவதற்கும், பிற உலகளாவிய பிராண்ட்களுடன் எதிர்கால உரிம ஒத்துழைப்புக்கான கதவுகளைத் திறப்பதற்கும் இந்த கூட்டாண்மை உறுதியளிக்கிறது.

Hela குழுமத்தின் பிராண்ட் உரிமப் பிரிவான Focus Brands, UK மற்றும் ஐரோப்பாவில் Reebok இன் பிரத்தியேக பிராண்ட் நிர்வாகப் பங்காளியாக அதன் Outerwear தயாரிப்பு வகைக்கு சேவை செய்யும். Outdoor Jackets, Soft Shells, Bonded Fleeces மற்றும் ஆண்கள்,, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான Padded Jacketகளை உள்ளடக்கிய இந்த விரிவான தயாரிப்புகள், பிராந்தியம் முழுவதும் உள்ள சிறப்பு சில்லறை விற்பனையாளர்கள், Department Storeகள் மற்றும் e-commerce தளங்களில் கிடைக்கும்.

Focus Brandsஇன் பிரதம நிறைவேற்று அதிகாரி Ray Evans புதிய கூட்டான்மை குறித்து கூறுகையில், “Outterwear வகையில் Reebok உடன் இந்த மூலோபாய ஒத்துழைப்பைப் பற்றி நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் Focus Brandஇன் புத்தாக்கமான வடிவமைப்பு திறன்கள் மற்றும் Helaவின் உற்பத்தி சிறப்பைப் பயன்படுத்துவதன் மூலம் பிராண்டின் வழங்கல்களை உயர்த்துவதை எதிர்நோக்குகிறோம். ஒன்றாக, குழு உயர்தர, முன்னணி தயாரிப்புகளை வழங்க தயாராக உள்ளது, அவை ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பா முழுவதும் மாறிவரும் நுகர்வோர் தேவைகளுடன் ஒத்துப்போகின்றன.” என தெரிவித்தார்.

இந்த கூட்டணி Authentic Brands Group உடன் Focus Brandsஇன் ஏற்கனவே உள்ள உறவை மேலும் வலுப்படுத்துகிறது, உலகளாவிய ஆடைத் தொழிலில் முக்கிய வீரராக Hela Groupஇன் நிலையை உறுதிப்படுத்துகிறது. விளையாட்டு மற்றும் உடற்தகுதி ஆகியவற்றுடன் ஒத்த சொல்லாக இருக்கும் Reebokஇற்கு, இந்த ஒத்துழைப்பு நுகர்வோரின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் புதிய, புத்தாக்கமான வடிவமைப்புகளுடன் அதன் Outerwear வழங்கல்களை புத்துயிர்ப்பிக்கும் வாய்ப்பை வழங்குகிறது.

“Helaவின் புதிய அத்தியாயத்தை நாம் கண்டு கொண்டிருக்கிறோம், இங்கு புத்தாக்கம் மற்றும் ஒத்துழைப்பு, அதன் வளர்ச்சியின் மையத்தில் உள்ளன,” என்று ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றங்களின் (JAAF) செயலாளர் நாயகம் யொஹான் லோரன்ஸ் கூறினார். “Reebok உடன் இந்த கூட்டணி Helaவுக்கு மட்டுமல்ல, இலங்கையின் ஆடைத் தொழிலுக்கும் முக்கியமான தருணமாகும். இது உலகளாவிய நுகர்வோரின் மாறும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளை வழங்கும் நமது திறனை பிரதிபலிக்கிறது, நிலையான மற்றும் புத்தாக்கமான உற்பத்தியில் முன்னணியாக நமது நிலையை வலுப்படுத்துகிறது.” என தெரிவித்தார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் Focus Brandகளை Hela கையகப்படுத்தியதன் மூலம், குழுமம் இறுதி நுகர்வோருக்கு நெருக்கமாக செல்ல வழிவகுத்தது, அதே நேரத்தில் அதன் உற்பத்தி மற்றும் பிராண்ட் உரிமப் பிரிவுகளுக்கு இடையே பல ஒருங்கிணைப்புகளை உருவாக்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்த சேவைகளை வழங்க வழி வகுத்தது. இந்த அணுகுமுறை தடையற்ற ஒத்துழைப்பை செயல்படுத்துகிறது, இதன் விளைவாக தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட, தூரநோக்குப் பார்வைக்கு குறிப்பிடத்தக்க தயாரிப்புகளை உருவாக்குகிறது, இது ஒரு உலகளாவிய புகழ்பெற்ற நவநாகரீக குழுமமாக குழுவின் திறன்களை பிரதிபலிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *